Friday, March 5, 2021

சமணக்கோவில், பூந்துறை , ஈரோடு மாவட்டம்

கொங்கு நாட்டின் 24 நாடுகளில் முதன்மையான நாடான "பழம்பூந்துறை" நாட்டின் தலைநகர் பூந்துறை  . இங்கு 13ம் நூற்றாண்டை சேர்ந்த திகம்பர சமண கோயில் உள்ளது .இங்கு பார்சுவநாதர் மற்றும் இயக்கி பத்மாவதியின் உருவ சிலையும் உள்ளது . பார்சுவநாதர் சமணச் சிற்பத்தின் மேல் பெயிண்ட் அடித்து புதுப்பித்துள்ளனர். மேலும் பழைய கோவில் இடிக்கப்பட்டு புதிதாக முழுவதும் சலவைக் கற்களாலான கோவில் கட்டப்பட்டுள்ளது .






செங்கிஸ்கான் - முகில்

                                                  செங்கிஸ்கான் 

                                                                        ஆசிரியர் : முகில் 

                                    நாடோடிக் குழுக்களாக ஆங்காங்கே வசித்து வந்த மங்கோலிய இன மக்களை இணைத்து மிகப்பெரிய மங்கோலிய பேரரசை உருவாக்கியர் செங்கிஸ்கான் . ஒரு சாமானிய நாடோடியாக பிறந்து , தன் மனைவியை வேறு ஒருவன் கடத்தியபோது எதிர்த்துப் போரிட முடியாத வலிமையற்று இருந்த செங்கிஸ்கான் பின் எவ்வாறு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கினார் என்பதை இந்த புத்தகம் . முதலில் தனித்தனியாக இருந்த மங்கோலிய குழுக்கள் சிலவற்றை வென்றும் சிலவற்றை இணைத்தும் இப்பேரரசை உருவாக்கினார் . பின்பு சீன , ரஷ்யா என பேரரசின் எல்லையை விரிவுபடுத்தினார் . 


                               இவரின் போர் தந்திரங்கள் , வலிமை குறைவாக இருந்த தன் குழுவினர் மேல் இவர் இவர் வைத்த நம்பிக்கை , போர்வீரர்களுக்கு இவர் ஏற்படுத்திய தன்னம்பிக்கை அதாவது பாசிட்டிவ் திங்கிங் வியப்பாக உள்ளது . போரில் வென்றாலும் அராஜகமாக நடக்காமல் சரணடைந்தவர்களை நல்லவிதமாக நடத்தியது , குடும்பம் , உறவினர்கள் என்று இல்லாமல் திறமையை மட்டுமே கண்டு பதவி கொடுப்பது , நண்பர்களை நம்புவது , பெண்களின் பாதுகாப்பு இப்படி பல செயல்களை இவரை மக்களின் மனதில் இடம் பெறச் செய்தது . இவரின் செயல் திட்டங்கள் வலிமையானதாகவும் நேர்மையானதாகவும் இருந்தது . படையின் திட்டமிட்ட செயல்பாடு , படையின் ஒழுக்கம்  ஆகியன அவருக்கு வெற்றியை ஈட்டித் தந்தது மட்டும் அல்லாமல் ,  மாவீரன் அலெக்ஸாண்டரின் பேரரசை விட நான்கு மடங்கு பெரியதும் ,ரோம் பேரரசை விட இரண்டு மடங்கு பெரியதும் ஆன மங்கோலிய பேரரசை இவரால் உருவாக்க முடிந்தது . இவராலேயே சூரியன் உதிப்பதும் மறைவதும் மங்கோலிய பேரரசில் என்ற பெருமையை பெற்றது .


கிளியோபாட்ரா - முகில்

                                                            கிளியோபாட்ரா 

                                                                                   ஆசிரியர் : முகில்


எகிப்து நாட்டின் பேரரசியும் உலக அழகியுமான கிளியோபாட்ராவின் பிறப்பு முதல் இறப்பு வரை நடந்த சம்பவங்களை பேசுகின்றது இந்தப் புத்தகம் . கிளியோபாட்ரா என்ற பெயரில் வரலாற்றில் நிறைய பெண்கள் இருந்தாலும் இது ஏழாவது கிளியோபாட்ராவைப் பற்றியது . நம் நாயகி ராஜ குடும்பத்தில் பிறந்து தன் பதவியையும் அதிகாரத்தையும் காப்பாற்ற  இறுதிவரை போராடி இருக்கிறார் . ரோமப் பேரரசின் தலைவர்களான ஜூலியஸ் சீசரையும்  , மார்க் ஆண்டனியையும் தன் காதலில் விழ வைத்து அவள் விருப்பப்படி ஆட்சி மாற்றம் செய்து இருக்கிறாள் . இறப்பை கூட தானே முடிவு செய்தது என பல திகிலூட்டும் நிகழ்வுகளை விவரிக்கிறது இந்த புத்தகம் . 


 அதிகாரம் , ஆடம்பரம் , அழகு , அதிகமான செல்வம் அனைத்தும் ஒருங்கே கொண்டவள் கிளியோபாட்ரா . கிளியோபாட்ரா தன் அழகை எவ்வாறு எல்லாம் பராமரித்தாள் என்பதை படிக்கும் போது நமக்கு வியப்பே மேலிடுகிறது . ஆலிவ் ஆயில் எண்ணை தேய்த்துக் குளித்தல் , உடல் தேய்த்துக் குளிக்க வழவழப்பான தகடு , கழுதை பால் குளியல் , கூந்தலுக்கும் காலுக்கும் மருதாணி , இயற்கை கிரீம்கள் , கண்ணுக்கு மை , உதட்டுக்கு சாயம் , வாசனை திரவியம் என பலவற்றை பயன்படுத்தி தினமும் இரண்டு மணி நேரம் குளித்து இருக்கிறாள் . நகைப் பிரியை , அதனால் தன்னை நகைகள் கொண்டு மேலும் அழகு படுத்தி இருக்கிறாள் . உயரம் குறைவாக இருந்ததால் ஹீல்ஸ் அணிந்து  தான் வெளியே மற்றவருக்கு காட்சி தருவாள் .இப்படி  கிளியோபாட்ராவின் தனிப்பட்ட வாழ்க்கையையும் அரசியல் வாழ்க்கையையும் முழுவதும் விவரிக்கிறது . பதவி மற்றும் அதிகாரம் மோகம் அன்றிலிருந்து இன்றுவரை மனிதனை எவ்வாறு எல்லாம் தொடர்கிறது என்பதைப் புரிந்து கொள்ள உதவும் இந்த புத்தகம் .


ராஜ வனம் - ராம் தங்கம்

                                                                 ராஜ வனம் 

                                                                                   ராம் தங்கம் 

நாஞ்சில் நாட்டு வனத்தை நம் கண் முன்னே கொண்டுவந்து காட்டுகிறது இந்த புத்தகம் . நந்தியாறு , முகளியடி மலையில் உற்பத்தியாகிறது . மலையின் அடர்ந்த காட்டில் உற்பத்தியாகும் இந்த ஆற்றின் மூலத்தைக் காண ராஜேஷ் , கோபால் மற்றும் ஆன்றோ  கிளப்புகிறார்கள் . பயணம் நெடுக அவர்கள் காணும் காட்சியே இந்த புத்தகம் .

                                வனத்திற்குள் செல்லும்போது அவர்கள் பார்த்த தவிட்டுக்குருவி கூட்டம் ,  காட்டுமாடு , நாகனை வாயன் , குரங்குகள் , மான்கள் , காட்டுத் தேள் என ஒவ்வொன்றைப் பற்றியும் விவரிப்பது மிக சுவாரசியமாக இருக்கிறது . காட்டுக்குள் செல்லும்போது  பாதுகாப்புக்கு எடுத்துச் சென்ற அறுவாளால் தேவையில்லாமல் எந்த செடியையும் வெட்டாமல் நடந்து சென்றதை படிக்கும் போது நம் உள்ளம் நெகிழ்கிறது . மூங்கிலரிசி , சோலைமந்தி , சிறுத்தை என பலவற்றை பற்றி அறிய தகவல்களைச் சொல்லிச்செல்கிறார் ஆசிரியர் . பழங்குடி மக்களின் வனதெய்வத்தின் நம்பிக்கை நம்மையும் ஆட்கொள்கிறது .

                         பறவைகள் , பூச்சிகள் , பூக்கள் என ஒன்றுவிடாமல் விளக்குவது அருமை .கோபால் புலியை நேராக சந்தித்தது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது . கோபாலின் தந்தை ராஜசேகர் வனஅலுவலராக இருந்த போது அவர் பணியில் சந்தித்த அனுபவங்கள் நம்மை வியப்புக்குள்ளாக்கியது . வனத்தை நேசித்த வன அலுவலரான  அவருக்கு நேர்ந்த இன்னல்களும் , யானையை காப்பாற்ற அவர் படும் கஷ்டங்களும் , யானைகளுடன் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது . மின்வேலி அமைப்பது விலங்குகளுக்கு எவ்வாறு இடையூறாக இருக்கிறது என்பதை நம்மால் உணர  முடிகிறது . 

                                            கோபால் , ராஜேஷ் மற்றும் ஆன்றோவுடன் நாமும் வனத்திற்குள் சென்று வந்த நிறைவைத் தருகிறது இந்தப் புத்தகம் . வனத்திற்குள் செல்ல விரும்பும் மக்கள் இந்த புத்தகத்தை ஒரு முறையாவது படித்து விட்டு சென்றால் அங்கே நாம் கவனிக்க வேண்டியவற்றை அறிந்து கொள்ளலாம் . இயற்கை விரும்பிகள் அனைவரும் படிக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகம் இது .


புத்தக மதிப்பீடுகள் ( BOOKS REVIEW )

 1 . தமிழ் முருகன்  -  அறிவுமதி 

 2 .படை வீடு - தமிழ் மகன்

3 . ராஜ வனம் - ராம் தங்கம் 

4 . கிளியோபாட்ரா  - முகில்

5 . செங்கிஸ்கான்  - முகில்

6 . ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம் :  முகில்

7 . வரலாற்றில் அரிக்கமேடு : புலவர் ந . வேங்கடேசன்

8 . மாபெரும் சபைதனில் : உதயச்சந்திரன்

Monday, March 1, 2021

அகத்தூர் அம்மன் , காலிங்கராயர் கோயில்

கொங்கு வரலாற்றில் ஒப்பில்லாதவர் காலிங்கராயர் .இவர் கி . பி 13ம் நூற்றாண்டிலேயே முப்போகம் விளையும் வண்ணம் அணைகட்டி , கால்வாய் வெட்டி அவற்றை நாட்டுடமையாக்கினார்  . 


தாங்கள் செய்த அறச்செயலை தானோ தன் சந்ததியினரோ பயன்படுத்துவது நல்லதல்ல என்று எண்ணி அணையையும் கால்வாயையும் நாட்டுடமை ஆக்கி விட்டு , "இனி நானோ என் வழிவந்தவர்களோ இந்த கால்வாயின் தண்ணீரை பயன்படுத்தமாட்டோம்" 

 என்று சத்தியம் செய்துவிட்டு தான் வாழ்ந்த வெள்ளோட்டை விட்டு காவடிக்கா நாட்டில் தன் மாட்டுப் பட்டிகளுக்கு தண்ணீர் ஊற்றுக் குழிகள் (ஊத்துக்குளி) இருந்த இடத்தில் புது ஊர் ஏற்படுத்தி அங்கு சென்று வாழ்த்தார் . அந்த இடம் தற்போதைய பொள்ளாச்சி அருகே ஜமீன் ஊத்துக்குளி ஆகும்.


அங்கு அவர்களுக்கும் அந்த ஊர் மக்களை காக்கும் வண்ணமும் அங்கு ஒரு கோயில் கட்டினார் . அது தான் அகத்தூர் அம்மன் . இது தான் காலிங்கராயர் குடும்பத்தின் குலதெய்வம் ஆகும் . முப்பத்தி எட்டு தலைமுறைகள்  கடந்தும் இன்றும் அதே சிறப்புடன் விளங்குகிறது. இக்கோயில் கலிங்கராயர் கட்டினர் என்ற கல்வெட்டு உள்ளது .















கற்திட்டைகள் , கங்கலேரி , கிருட்டிணகிரி

 

கற்திட்டைகள் என்பது இறந்தவர்களின் உடலை தாழியிலோ அல்லது அவர்கள் எழும்புகளை பேழையில்  வைத்தோ புதைத்து , அதன் மேல் சதுரவடிவில் நான்கு பக்கம் சுவர்களுடன் மேலே ஒரு பலகை கல்லை வைத்து மூடியது போன்ற ஒரு அமைப்பை கல்திட்டைகள் என்று அழைக்கப்படுகிறது . நான்கு பக்க சுவர்களில் ஒரு பக்கம் மட்டும் வட்ட வடிவில் ஒரு ஓட்டை அமைப்புடன் காணப்படும் . இந்த அமைப்பை இடுத்துளை என்பர்.


  கிருஷ்ணகிரி மாவட்டம் கங்கலேரி என்னும் இடத்தில்  மிகவும்  பிரம்மாண்டமான மற்றும் பழமையான கற்திட்டைகள் இடுதுளையுடன் காணப்படுகின்றன. இதன் மேற்பலகைக் கற்கள் சுமார் ஐந்து டன்னுக்கும் மேல் எடையுள்ளவை. வசதிவாய்ப்புகள் எதுவும் இல்லாத காலகட்டத்தில் இவற்றை எவ்வாறு மேலே தூக்கி தூக்கிவைத்திருப்பர் என்பது வியப்பே.


இங்கு 400க்கும் மேற்பட்ட கற்திட்டைகளுடன் கூடிய இடுகாடு இருந்து இருக்கிறது,  ஆனால் தற்போது அவை அனைத்தும் உடைக்கப்பட்டு விட்டன. தற்போது உள்ள இரண்டு கற்திட்டைகளில் ஒரு கற்திட்டை மட்டுமே நல்ல நிலையில் உள்ளது . மற்றொன்று சிதைக்கப்பட்டு விட்டது.


கற்கால நாகரீகத்தைப் பறைசாற்றும் இந்த சின்னங்களை அரசும் மக்களும் போற்றி பாதுகாக்க வேண்டும்.






Menhir , நெடுங்கல் , சிங்காரிபாளையம், குண்டடம்

  Menhir  நெடுங்கல் / குத்துக்கல்

சங்கிலி கருப்பண்ணசாமி,

சிங்காரிபாளையம் ,

குண்டடம்                                  

                         குண்டடம் அருகில் உள்ள சிங்காரிப்பாளையம் என்னும் ஊரில் , பெருங்கற்கால ஈமச்சின்னமான நெடுங்கற்கள் , சங்கிலி கருப்பண்ண சாமி என்ற பெயரில் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது . கல்வட்டங்களுக்கு நடுவே இரண்டு அல்லது மூன்று குத்துக்கல் இருந்து இருக்க வேண்டும் , அவற்றில் தற்போது  ஒன்று மட்டும் நல்ல நிலையில் காணப்படுகிறது . கல்வட்டங்கள் கலைந்து காணப்படுகிறது .