Monday, March 1, 2021

அகத்தூர் அம்மன் , காலிங்கராயர் கோயில்

கொங்கு வரலாற்றில் ஒப்பில்லாதவர் காலிங்கராயர் .இவர் கி . பி 13ம் நூற்றாண்டிலேயே முப்போகம் விளையும் வண்ணம் அணைகட்டி , கால்வாய் வெட்டி அவற்றை நாட்டுடமையாக்கினார்  . 


தாங்கள் செய்த அறச்செயலை தானோ தன் சந்ததியினரோ பயன்படுத்துவது நல்லதல்ல என்று எண்ணி அணையையும் கால்வாயையும் நாட்டுடமை ஆக்கி விட்டு , "இனி நானோ என் வழிவந்தவர்களோ இந்த கால்வாயின் தண்ணீரை பயன்படுத்தமாட்டோம்" 

 என்று சத்தியம் செய்துவிட்டு தான் வாழ்ந்த வெள்ளோட்டை விட்டு காவடிக்கா நாட்டில் தன் மாட்டுப் பட்டிகளுக்கு தண்ணீர் ஊற்றுக் குழிகள் (ஊத்துக்குளி) இருந்த இடத்தில் புது ஊர் ஏற்படுத்தி அங்கு சென்று வாழ்த்தார் . அந்த இடம் தற்போதைய பொள்ளாச்சி அருகே ஜமீன் ஊத்துக்குளி ஆகும்.


அங்கு அவர்களுக்கும் அந்த ஊர் மக்களை காக்கும் வண்ணமும் அங்கு ஒரு கோயில் கட்டினார் . அது தான் அகத்தூர் அம்மன் . இது தான் காலிங்கராயர் குடும்பத்தின் குலதெய்வம் ஆகும் . முப்பத்தி எட்டு தலைமுறைகள்  கடந்தும் இன்றும் அதே சிறப்புடன் விளங்குகிறது. இக்கோயில் கலிங்கராயர் கட்டினர் என்ற கல்வெட்டு உள்ளது .















கற்திட்டைகள் , கங்கலேரி , கிருட்டிணகிரி

 

கற்திட்டைகள் என்பது இறந்தவர்களின் உடலை தாழியிலோ அல்லது அவர்கள் எழும்புகளை பேழையில்  வைத்தோ புதைத்து , அதன் மேல் சதுரவடிவில் நான்கு பக்கம் சுவர்களுடன் மேலே ஒரு பலகை கல்லை வைத்து மூடியது போன்ற ஒரு அமைப்பை கல்திட்டைகள் என்று அழைக்கப்படுகிறது . நான்கு பக்க சுவர்களில் ஒரு பக்கம் மட்டும் வட்ட வடிவில் ஒரு ஓட்டை அமைப்புடன் காணப்படும் . இந்த அமைப்பை இடுத்துளை என்பர்.


  கிருஷ்ணகிரி மாவட்டம் கங்கலேரி என்னும் இடத்தில்  மிகவும்  பிரம்மாண்டமான மற்றும் பழமையான கற்திட்டைகள் இடுதுளையுடன் காணப்படுகின்றன. இதன் மேற்பலகைக் கற்கள் சுமார் ஐந்து டன்னுக்கும் மேல் எடையுள்ளவை. வசதிவாய்ப்புகள் எதுவும் இல்லாத காலகட்டத்தில் இவற்றை எவ்வாறு மேலே தூக்கி தூக்கிவைத்திருப்பர் என்பது வியப்பே.


இங்கு 400க்கும் மேற்பட்ட கற்திட்டைகளுடன் கூடிய இடுகாடு இருந்து இருக்கிறது,  ஆனால் தற்போது அவை அனைத்தும் உடைக்கப்பட்டு விட்டன. தற்போது உள்ள இரண்டு கற்திட்டைகளில் ஒரு கற்திட்டை மட்டுமே நல்ல நிலையில் உள்ளது . மற்றொன்று சிதைக்கப்பட்டு விட்டது.


கற்கால நாகரீகத்தைப் பறைசாற்றும் இந்த சின்னங்களை அரசும் மக்களும் போற்றி பாதுகாக்க வேண்டும்.






Menhir , நெடுங்கல் , சிங்காரிபாளையம், குண்டடம்

  Menhir  நெடுங்கல் / குத்துக்கல்

சங்கிலி கருப்பண்ணசாமி,

சிங்காரிபாளையம் ,

குண்டடம்                                  

                         குண்டடம் அருகில் உள்ள சிங்காரிப்பாளையம் என்னும் ஊரில் , பெருங்கற்கால ஈமச்சின்னமான நெடுங்கற்கள் , சங்கிலி கருப்பண்ண சாமி என்ற பெயரில் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது . கல்வட்டங்களுக்கு நடுவே இரண்டு அல்லது மூன்று குத்துக்கல் இருந்து இருக்க வேண்டும் , அவற்றில் தற்போது  ஒன்று மட்டும் நல்ல நிலையில் காணப்படுகிறது . கல்வட்டங்கள் கலைந்து காணப்படுகிறது .