Friday, March 5, 2021

செங்கிஸ்கான் - முகில்

                                                  செங்கிஸ்கான் 

                                                                        ஆசிரியர் : முகில் 

                                    நாடோடிக் குழுக்களாக ஆங்காங்கே வசித்து வந்த மங்கோலிய இன மக்களை இணைத்து மிகப்பெரிய மங்கோலிய பேரரசை உருவாக்கியர் செங்கிஸ்கான் . ஒரு சாமானிய நாடோடியாக பிறந்து , தன் மனைவியை வேறு ஒருவன் கடத்தியபோது எதிர்த்துப் போரிட முடியாத வலிமையற்று இருந்த செங்கிஸ்கான் பின் எவ்வாறு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கினார் என்பதை இந்த புத்தகம் . முதலில் தனித்தனியாக இருந்த மங்கோலிய குழுக்கள் சிலவற்றை வென்றும் சிலவற்றை இணைத்தும் இப்பேரரசை உருவாக்கினார் . பின்பு சீன , ரஷ்யா என பேரரசின் எல்லையை விரிவுபடுத்தினார் . 


                               இவரின் போர் தந்திரங்கள் , வலிமை குறைவாக இருந்த தன் குழுவினர் மேல் இவர் இவர் வைத்த நம்பிக்கை , போர்வீரர்களுக்கு இவர் ஏற்படுத்திய தன்னம்பிக்கை அதாவது பாசிட்டிவ் திங்கிங் வியப்பாக உள்ளது . போரில் வென்றாலும் அராஜகமாக நடக்காமல் சரணடைந்தவர்களை நல்லவிதமாக நடத்தியது , குடும்பம் , உறவினர்கள் என்று இல்லாமல் திறமையை மட்டுமே கண்டு பதவி கொடுப்பது , நண்பர்களை நம்புவது , பெண்களின் பாதுகாப்பு இப்படி பல செயல்களை இவரை மக்களின் மனதில் இடம் பெறச் செய்தது . இவரின் செயல் திட்டங்கள் வலிமையானதாகவும் நேர்மையானதாகவும் இருந்தது . படையின் திட்டமிட்ட செயல்பாடு , படையின் ஒழுக்கம்  ஆகியன அவருக்கு வெற்றியை ஈட்டித் தந்தது மட்டும் அல்லாமல் ,  மாவீரன் அலெக்ஸாண்டரின் பேரரசை விட நான்கு மடங்கு பெரியதும் ,ரோம் பேரரசை விட இரண்டு மடங்கு பெரியதும் ஆன மங்கோலிய பேரரசை இவரால் உருவாக்க முடிந்தது . இவராலேயே சூரியன் உதிப்பதும் மறைவதும் மங்கோலிய பேரரசில் என்ற பெருமையை பெற்றது .


No comments:

Post a Comment