Sunday, September 17, 2023

KHAB BRIDGE ,SPITI VALLEY , HIMACHAL PRADESH

 காப் என்பது சட்லஜ் நதியின் கரையில் அமைந்திருக்கும் ஒரு சிறிய கிராமம் . இமயமலையின் இரண்டு பெரும் ஆறுகளான சட்லெஜ் மற்றும் ஸ்பிட்டி ஆறுகள் ஒன்றோடு ஒன்று இணையம் இடம் தான் காப் . சட்லெஜ் ஆறு திபெத்திய மானசரோவரில் உள்ள ஏரியில் உற்பத்தியாகி ஏராளமான இமயமலை பள்ளத்தாக்குகளை கடந்து பஞ்சாப் வரை பாய்கிறது . பஞ்சாபில் பாயும் ஐந்து நதிகளில் மிகப்பெரிய நதி சட்லெஜ் . இதில் உற்பத்தி செய்யும் மின்சாரம் வடஇந்தியா தொழிற்சாலைகளின்  முக்கிய ஆதாரமாக திகழ்கிறது .  

 இமயமலையின் பனிப்பாறைகள் உருகி ஸ்பீட்டி  நதியாக பாய்கிறது . இமயமலை மக்களின் குடியிருப்புகள் எல்லாம் இந்த ஸ்பீட்டி நதியை ஒட்டியே அமைந்திருக்கிறது . இந்த இரு பெரும் நதிகள் சங்கமம் ஆகும்பள்ளத்தாக்கின்  மேலே அமைக்கப்பட்டுள்ள பாலம் தான் காஃ பாலம் (Khab Bridge ) . இந்த இரு நதிகளும் பெரிய மலைகளுக்கு நடுவே உள்ள பள்ளத்தாக்கில் சங்கமம் ஆகிறது அதனால் இரு மலைகளுக்கு நடுவே நடக்கும் இந்த சங்கமத்தை காண இரண்டு கண்கள் போதாது . இந்தப்பாலம் இரும்பினால் மிக உறுதியாக கட்டப்பட்டுள்ளது . இங்கு நின்று புகைப்படம் எடுக்காத வண்டிகளே இல்லை . இதற்காண பயண சாலை பாதைகளும் மலைகளை குடைந்தே அமைத்திருப்பதை காண முடிகிறது . அமைதியான அழகான இடத்தில்  இரு நதிகளின் சங்கமத்தை வாழ்வில் ஒரு முறையேனும் காண வேண்டும் .











KALPA , SPITIVALLEY , HIMACHALPRADESH

 சிம்லாவில் இருந்து காசா செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 16 km தொலைவில் அமைந்துள்ளது கால்பா என்னும் சிறிய நகரம் . இது சட்லஜ் நதியின் கரையில்  அமைந்துள்ளது . இமயமலையின் சிகரங்களில் ஒன்றான கின்னார் கைலாஷ் என்னும் சிகரத்தை இங்கிருந்து எளிதாக காண முடியும் . இந்த சிகரத்தில் உள்ள ஒரு மலைப்பாறை இந்து கடவுளான சிவலிங்கத்தை போன்று காட்சியளிப்பதால் இச்சிகரத்திற்கு கைலாஷ் என்று பெயர் .  பணியால் மூடப்பட்ட இந்த மலை சூரிய அஸ்தமனத்தின் போது  சூரிய ஒளிபட்டு தங்கம் போல் மின்னுவதை நாம் காண முடிகிறது . இங்கும் ஓரளவு தெளிவான வானம் இரவு நேரத்தில் இருப்பதால் இங்கிருந்து பால்வீதியை காண முடிகிறது . இந்தியாவின் முதல்   வாக்காளராக ஷியாம் சரண் சுகி கால்பாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .









SPITIVALLEY , HIMACHALPRADESH

SPITIVALLEY
HIMACHALPRADESH

ஸ்பிட்டி என்பது இமாச்சலப் பிரதேசத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு குளிர் பாலைவன மலையாகும்.  ஸ்பிட்டி என்றால் "நடு நிலம்" என்று பொருள்  ஆதாவது இந்தியாவிற்கும் திபெத்திற்கும் நடுவே உள்ள நிலப்பரப்பு என்ற பொருளில் கூறப்படுகிறது . இந்த நிலப்பரப்பில் அமைத்திருக்கும் மிகப்பெரிய  பள்ளத்தாக்கு தான் " ஸ்பிட்டி பள்ளதாக்கு " . இமயமலை பனிப்பாறைகள் உருகி பள்ளத்தாக்கின்  வழியே   "ஸ்பிட்டி  நதியாக பாய்கிறது . எனவே  மக்களின் குடியிருப்புகளும் கிராமங்களும் இந்த நதியை சுற்றியே அமைத்துள்ளது . நாம்  செல்லும் பாதையெங்கும் இந்த ஸ்பீட்டி நதி நம் கூடவே பயணிப்பதை காணலாம் .
    கடல் மட்டத்தில் இருந்து 15,000 அடி உயரத்தில் இமயமலைச் சாரலில்  அமைந்திருக்கும் ஸ்பிட்டி பள்ளத்தாக்கு, சாலைப் பயணத்திற்கான ஒரு அற்புத இடமாகும் .  உலகின் மிக ஆபத்தான சாலைகளில் ஒன்றாக அறியப்படும் இந்த சாலையில்   நகரத்தின் சலசலப்புகள் இன்றி ,  பனிப்பாறை  மலைகளுக்கு நடுவே வளைந்து வளைந்து செல்லும் சாலைகளின் ஊடே   செல்வது வெறும் பயணம் மட்டுமல்ல, நம் மனதையும் ஆன்மாவையும் மேம்படுத்தக்கூடிய ஒரு அழகான அனுபவம். பாதையின் ஒரு புறம் மிக  ஆழமான பள்ளத்தாக்கு மறுபுறம் கரடு முரடான மலையில் இருந்து உருண்டு விழும் பாறைகள் என  செல்லும் பாதைஎங்கும் திகில் அனுபவங்கள் . இவ்வளவு ஆபத்தான் பாதைகளுக்கு நடுவே நம்மை ஆசுவாசப்படுத்த சிறு சிறு கிராமங்கள் , பழமையான பௌத்த மடங்கள் , வண்ணமயமான புதிய பௌத்த மடங்கள் , ஆப்பிள் , செர்ரி , ஆப்ரிக்கோட் தோட்டங்கள் , தொங்கு பாலங்கள் , நம் கூடவே பயணிக்கும் ஸ்பிட்டி  ஆறு , ஆங்காங்கே பறக்கும் வண்ணநிற பிராத்தனை கொடிகள் என பகலில் நாம் ரசிக்கும் காட்சிகள் . பகலில் மட்டும் அல்ல இரவிலும் இங்கு நாம் காணும் தெளிவான  தூசுகள் அற்ற வானம் , பால்வீதியின் காட்சிகள் , நட்சத்திரங்கள் நம்மை உற்சாகமூட்டுகின்றன . நகரவாசிகளான நாம் வளிமண்டலத்தில்   தூசுகள் ஒளிகள் இடையூறு இன்றி நட்சத்திரங்களை காண்பது என்பது அரிதான ஒன்றாகும் . ஆனால்  இங்கு நூற்றுக்கணக்கான நட்சத்திரங்களை ஒன்றாக காண்பது  மட்டும்மின்றி பால்வீதியை புகைப்படம் எடுப்பது , ஷூட்டிங்  ஸ்டார் பார்ப்பது என்பது மிக எளிதான ஒன்றாகும் . வானிலை புகைப்படம் எடுப்பதற்கு  இந்தியாவில் உள்ள சிறந்த இடங்களில் இதுவும் ஒன்றாகும் .
 இயற்கை ரசிகர்களுக்கும் , சாகச விரும்பிகளுக்கும் , பைக் பயண பிரியர்களுக்கும் , பேக் பேக்கர்களுக்கும் இந்த இடம் ஒரு சொர்க்கபூமி . கடுமையான காலநிலையில் வாழும் இந்த மக்கள் நம்மை அரவணைப்புடன் புன்னகையுடன் வரவேற்பதை காண்பது ஆச்சர்யமாக இருந்தது .வாழ்க்கையின் மறக்க முடியா பயணங்களில் இதுவும் ஒன்றாகும் .














Friday, September 15, 2023

Hattu Madha , Narkonda , himachal Pradesh

Hattu Madha , Narkonda , Himachal Pradesh

இந்தியாவின் மலை மாநிலமான ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள சிம்லா , ஆங்கிலேயர் ஆட்சியின்போது நம் நாட்டின் கோடைகால தலைநகராக விளங்கியது . அப்போதுமட்டுமல்லால் தற்போதும் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் தளமாக உள்ளதால் நெரிசலான இடமாக மாறி உள்ளது . 

சிம்லாவில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள  ஒரு சிறிய நகரம் நார்கண்டா . இது இந்தியா - திபெத் சாலையில் அமைந்துள்ள அமைதியான , அதிக சுற்றுலா பயணிகள் பயணிக்காத இடமாக உள்ளது .  நார்கண்டாவில்  இருந்து 8km தொலைவில் உள்ளது ஹட்டு மாதா கோயில் . இக்கோயிலை பற்றி காண்போம் .

சிம்லாவில் உள்ள உயரமான சிகரங்களில் ஒன்றான ஹட்டு சிகரத்தில் ஸ்ரீ ஹட்டு மாதா என்னும் காளி கோயில் அமைந்துள்ளது .  ராவணனின் மனைவியாக மண்டோதரி தான் ஹட்டு மாதா  என்றும் நம்பப்படுகிறது . 

 இக்கோயில் காண்பதற்கு சீன கோயில் போல காட்சியளிக்கிறது . கண்ணாடி மற்றும் கோயிலை சுற்றி முழுவதும் மரத்தால் கட்டப்பட்டுள்ளது . இக்கோயிலில் உள்ள சிற்பங்கள் நம் இதிகாசங்களான  இராமாயணம் மற்றும் மகாபாரத காட்சிகளை சித்தரிக்கின்றன . இக்கோயிலை சுற்றி உள்ள மலைகளில் ஆப்பிள் மரங்களால் சூழப்பட்டுள்ளது . சூரிய அஸ்திமானத்தை காண்பதற்கு ஏற்ற இடமாக இத்தலம் விளங்குகிறது .













Chandigarh , Rock Garden , Nek chand

 சண்டிகர் :

பஞ்சாப் , ஹரியானா என இரு மாநிலங்களின் தலைநகர் சண்டிகர் அது மட்டுமல்லாமல் , இந்தத் தலைநகரே ஒரு யூனியன் பிரதேசமாகவும் விளங்குகிறது .  இந்தியாவில் திட்டமிட்டு கட்டப்பட்ட நகரங்களில் ஒன்றாக விளங்கும் சண்டிகர் , ஜவஹர்லால் நேருவின் "கனவு நகரம் " என்றும் போற்றப்படுகிறது . 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம்  பெற்ற பின் உருவாக்கப்பட்ட நகரமாகும் (planned city ) . இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது பஞ்சாப்பின் அப்போதைய தலைநகரான லாகூர் பாகிஸ்தான் வசம் சென்றது . இந்தியா வசம் இருந்த பஞ்சாபின் கிழக்குப் பகுதிகளுக்கு தலைநகருக்கான தேவை ஏற்பட்டது . மார்ச் 1948 இல் இந்திய அரசுடன் கலந்த ஆலோசித்த பஞ்சாப் அரசு , புதிய தலைநகருக்கான இடமாக அம்பாலா மாவட்டத்தில் உள்ள சிவாலிக் மலைகளின் அடிவாரத்தில் உள்ள நிலப்பகுதியை தேர்ந்தெடுத்தது .  சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவகர்லால் நேரு இத்திட்டத்தை ஆர்வத்துடன் ஆதரித்து அதனை செயல்படுத்துவதில் தொடர்ந்து அக்கறை காட்டினார் . ஏப்ரல் 2 , 1952 இல் எதிர்கால தேசத்தின் நம்பிக்கையின் வெளிப்பாடாகவும் இந்தப் புதிய தலைநகர் இருக்கட்டும் என அறிவித்தார் . 

புதிய தலைநகருக்கு " சண்டிகர் " என பெயர் சூட்டப்பட்டது . இது பஞ்சாபியர்களின் வீர உணர்வின் அடையாளமாகவும் , சண்டி தேவியின் பெயருடன் தொடர்புடையதாகவும் கருதப்படுகிறது . புதிய தலைநகரை உருவாக்க இந்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சுவிஸ் நாட்டை சேர்ந்த கட்டிடக்கலை கலைஞர் லீ கார்பூசியர் (Le Corbusier ) . இவரின் யோசனையால்  தான் புதிதாக உருவாக்கப்பட்ட சண்டிகர் நகரம் நன்கு திட்டமிடப்பட்டு , வரையறுத்தப்பட்ட பகுதிகளாகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது . நகரம் முழுவதும் பல செக்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளது . இரு மாநிலங்களின் தலைநகரமாக இருப்பதால் இரு மாநிலங்களின் நிர்வாக தலைமையகம் இங்குதான் அமைந்துள்ளது . எனவே இங்கு அதற்கு தேவையான அகலமான சாலைகள் , திட்டமிடப்பட்ட கட்டிடங்கள் , நீர் நிலையங்கள் , மருத்துவம் , தபால் அலுவலகம் , சந்தை போன்ற அனைத்து அத்தியாவசிய வசதிகளையும் கொண்டுள்ளது .  ஒவ்வொரு செக்டரில் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே பூங்கா , கடைகள் , ஹோட்டல்கள் , சமூதாய கூடங்கள் , பள்ளிகள் என தனித்தனி பகுதிகள் உருவாக்கபட்டுள்ளது . அனைத்து கட்டிடங்களும் இரண்டு அடுக்குகள் மட்டுமே உள்ளதால் போக்குவரத்து நெரிச்சல் இல்லை ,  மிதிவண்டிகளுக்கு என பெருஞ்சாலையில் தனியே  இடம் ஒத்துக்கப்பட்டுள்ளதால் இங்கு மிதிவண்டியில் செல்பவர்கள் அதிகம் அதுமட்டுமில்லாமல் மிதிவண்டிகள் ஆங்காங்கே வாடகைக்கு நிறுத்தப்பட்டுள்ளது . நகரம் முழுவதும் செக்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளதால் எந்த பகுதிகளிலும் யார் பெயரிலும் வீதியோ தெருவோ இல்லை . செக்டர் எண் மற்றும் வீட்டின் எண்ணை கொண்டே நாம் செல்லும்  நண்பர்கள் வீட்டை அடையமுடியும் . நீளமான மற்றும் அகலமான நேரான சாலைகள் , சந்திப்புகளில் அழகான ரௌடானாக்கள் அதில் தெளிவாக எழுதப்பட்ட செக்டர் எண்கள் , சாலையின் இரு புறமும் பெரிய பெரிய மரங்கள்  மற்றும் அழகிய பூக்கள் , போக்குவரத்து நெரிசல் மற்றும் ஹாரன் சத்தமில்லாத சாலைகள் என ஊரே அமைதியாகவும் அழகாகவும் காட்சியளிக்கிறது . இது இந்தியாவின் கனவு நகரமாக விளங்குகிறது . இங்கு சுற்றுலா தலங்கள் பல இருந்தாலும் மிக முக்கியமான சுற்றுலா தலமான "ராக் கார்டன்" (Rock Garden ) பற்றி காண்போம் .

Rock Garden :

Nek Chand :

நெக் சண்ட என்பவர் டிசம்பர் 15ஆம் தேதி 1924 ஆம் ஆண்டு  பஞ்சாப் மாகாணத்தில் உள்ள (Barian Kalan) பரியன் காலன்  என்னும் இடத்தில் பிறந்தவர் . 1947ம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் பிரிவினையில் அப்பகுதி பாகிஸ்தானுக்கு உட்பட்ட பகுதியானது . அதனால் அவர் இந்திய  பகுதிக்கு குடியேறினார் . அப்போது பஞ்சாப் ஹரியானா மாநிலங்களுக்கு தலைநகராக புதிதாக ஒரு பெரு நகரம் வடிவமைக்க இந்திய அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஸ்விஸ் கட்டிடக்கலைஞர் லீ கார் (Le Corbusier ) . புதிய தலைநகர் உருவாக்கத்தில் சந்துவுக்கு பொதுப்பணி துறையில் சாலை ஆய்வாளராக வேலை கிடைத்தது . 1958 ஆம் ஆண்டு தொடங்கி தனது ஓய்வு நேரத்தில்  நகரை ஒட்டி உள்ள காட்டில் பழைய பொருட்களை சேர்க்க தொடங்கினார் . சண்டிகர் நகரம் கட்ட பயன்பட்ட பொருட்களின் கழிவுகளைக் கொண்டு சாண்டால் உருவாக்கப்பட்ட தோட்டமே ராக் கார்டன் .

சுமார் 12 ஏக்கரில் உடைந்த பாட்டில்கள் , கண்ணாடிகள் , பீங்கான்கள் , வளையல்கள் , ஓடுகள், உலோக கம்பிகள் என பல தூக்கி எறியக் கூடிய பொருட்களைப் பயன்படுத்தி பூங்கா கட்டப்பட்டுள்ளது .  இதில் கட்டிட கழிவுகளைக் கொண்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட நீர்வீழ்ச்சி , வாய்க்கால்கள் மற்றும் பல சிற்பங்களை கொண்டுள்ளது .  பல நூறு எண்ணிக்கையிலான விலங்கு சிற்பங்கள் , மனித உருவ சிற்பங்கள்  எல்லாம் மறு சுழற்சி செய்யப்பட்ட பல வகையான உலோகத்தின் மீது கான்கிரீட் முலாம் பூசப்பட்டு உள்ளது .

        உருவங்கள் மற்றும் மண்பாண்டங்கள் , பீங்கான் துண்டுகள் , கண்ணாடி பாட்டில்கள் , தொப்பிகள் என அறிய வகையான நிராகரிக்கப்பட்ட பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது . இந்த ராக் கார்டன் உலக அளவில் புகழ் பெற்று சுற்றுலா தலமாக விளங்குகிறது . இன்று உள்ள சுற்றுச்சூழலில் பழையதைக் கொண்டே உருவாகும் பொழுதுபோக்கு பூங்கா என்பது அவசியமான ஒன்றே .