Thursday, December 3, 2020

நவகண்டம் , சென்னிமலை

நவகண்டம்

சாவான்கோயில்

சென்னிமலை



பனைமுரசு

பழங்காலஇசைக்கருவி

பனை மரத்தின் அடிபாகத்தை வெட்டி எடுத்து , அதன் நடுப்பகுதியை நீக்கியும் , மாட்டுத் தோலில் முடி நீக்காமலும் செய்யப்பட்டது இந்த பனை முரசு.  திருப்பூரை சேர்த்த மரசிற்ப கலைஞர் திரு . ஆனந்த் அவர்கள் இதை உருவாக்கி உள்ளார் .



சிவகளை

 தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்து இருக்கும் தொன்மையான ஊர் #சிவகளை . செய்வளை , செவலை என்று அழைக்கப்பட்டதே தற்போது சிவகளை என்று மருவியதாக  கருதப்படுகிறது . தாமிரபரணி கரைபுரண்டு ஓடிய காலத்தில் அங்கு ஒவ்வொரு ஆண்டும் மூன்று போகம் நெல் விளைந்ததாகவும் ஆதாவது

120 வகை நெற்பயிர்கள் விளைந்ததாக கூறப்படுகிறது .


#நெற்பயிர்களின்வகைகள் :

             சிறுமணிநெல், செங்கார்நெல், செந்நெல், (கைதாரம்) சீரகச் சம்பாநெல் , நன்னெல், நல்லசெம்பளைநெல், தில்லைநாயகநெல், ஆனைக்கொம்பனெல், மறுவற்ற செம்பவழச்சம்பா நெல், மணத்தினையுடைய சிறுவெள்ளை நெல், செந்தினாயகநெல், பேற்றினையுத வுக்குலை வாழை நெல், காடைக்கழுத்தானெல், உயர்ந்த சிந்தன் சம்பாநெல், சைவனச்சம்பாநெல், சண்டிக்கார்நெல், பெருவெள்ளை நெல்,கூரனெல், தெய்வநாயகநெல், (தானியோத் தமம்) வால சுரமின்டனெல், பச்சைப்பெருமாணெல், வாரலிநெல், (வராகிச்


சம்பா) நெய்வளத்தினையுடைய புழுகுசம்பாநெல், நெடுஞ்சம்பா செல், சன்னச்சம்பா நெல், உடம்பினை வளர்க்கும் ஈர்க்குச்சம்பா நெல், மிளகிநெல், முத்துச்சம்பாநெல், குருவைநெல், மாப்பிள்ளைச் சம்பா நெல், குருவைக்கிளையானெல், குப்பஞ்சம்பாநெல், (அவச ரச்சம்பா) பொருத்தமான வல்லரக்கனெல், அப்பஞ்சம்பாநெல் (அப்புச்சம்பா) மட்டைக்கார் நெல், மட்டை வெள்ளை நெல், கத்தூரிச்சம்பா நெல், கருவரிச்சம்பாநெல், தோட்டனெல், (செம் பொடிநெல்) கார்த்திகைச்சம்பாநெல், சீங்கண்ணிநெல், நரியலங்க னெல், (சடைரியன்) பூஞ்சம்பாநெல், சொல்லப்பட்ட கலியன சம்பாநெல், (பங்குசாலி, மணக்கற்றைநெல், சித்திரைக்கால னெல், கூர்க்கருப்பனெல், சொன்னவாரிநெல், ஒற்றைக்கொம்ப நெல், கற்சம்பாநெல், ஒட்டுடைநெல், (பருந்தட்டைநெல்) பனை மாரத்தானெல், கொற்றனெல்,(புனச்சம்பாநெல்)குழியடித் தானெல் , சொளுமையுள்ள புழுதிபிரட்டிகெல், ஒளியுள்ள சடையன் காடைச்சழு தானெல், வீதிவிடங்கனெல், வாடன் சம்பாநெல், சிற்றாக்கனெல், அரிக்குராவிசெல், செஞ்சூரைகெல், கருஞ்சூரை நெல், முனைமுறியாத இராசகோபாலநெல், கோடைநெல், திருமுட்டனெல் ,

கல்லுருண்டைநெல்,குறிய நன்னாரிநெல்,மைச்குருவை நெல்,பொடிச்செஞ்சாலி,(செல்லூர்ச்சம்பா) மறுவுள்ள மணல்வாரி நெல், துய்யமல்லிநெல், சொக்கன் சம்பா நெல், மறுவுள்ள உலர்க் குண்டாநெல், குன்றுமணிநெல், சுற்பூரச்சம்பாநெல் சிறிய குடமல்லிச் சம்பாசெல், சிறுமிள கனெல், பாற்சம்பாநெல், (பால்வடியுஞ்சம்பா) பெரியசடைமிளகுசம்பா நெல், உறைப்புறுங் கடுகுசம்பா நெல், அறுபதாங்கோடை நெல், பிட்டனெல், (பிட்டிற்குரிய ஒருவகை நீளநெல்) ஆற்றனெல், (ஆற்றூர்நெல்) பட்டினச்சம்பா நெல், அன்னதான நெல், கைவாட்சம்பா நெல், கருடன் சம்பா நெல், பொன் வண்ணச்சம்பா நெல், குளநெல் (சர்க்கரைச்சம்பா) முதலிய பலவகை (ஈண்டுக் கூறிய நெல்வகை 89ம், ஊசிச்சம்பா, இலுப்பைப் பூச்சம்பா, கம்பன் சம்பா, குங்குமப் பூச்சம்பா, குண்டைச்சம்பா, சொரிகுரும்பை)மோரன் சம்பா, மாலன் சார், சிவன் சம்பா, செம் பிலிப்பிரியன, பிசானன், (பசானம்) மலைகுலுக்கி, மடுவிழுங்கி, பூம்பாளை, முட்டைக்கார், கடப்புக்கார், மோசனன், பிச்சவாரி, ஈசர் கோவை, இறங்குமேட்டான், மணச்சம்பா, (சுகந்திசச்சம்பா)

கேரலி, சாரலி, சாலி, சி.றுகுரும்பை, சீனட்டி, சேமாளை, நரி முருக்கன், பன்றிநெல் (மலைநெல்), பாடலி, (மழைகாலக்கப் பழுக்கும் பாடலம்) நீவாரம், (வனநெல்) நீர்வாரம் (குளசெல்) என மொத்தம் 120 வகை நெற்கதிர்கள் விளைந்து இருக்கிறது .


Source : நற்குடி வேளாளர்




தேரிக்காடு , திருநெல்வேலி

 

திருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லும் வழியில் உள்ளது "தேரிக்காடு" . நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு சில செம்மண் மேட்டுப் பகுதியை தேரி என்கிறார்கள் . சிவப்பு நிற  பாலைவனம் என்றே சொல்லலாம்.  " தெற்றி " , "தேரி" என்றால் மணற்குன்று அல்லது (மண்)மேடு என்று பொருள் . (தேரிக்)காடு என்று சொல்லப்பட்டாலும் இது ஒரு வறண்ட நிலப்  பகுதியே . பாலைவனம் போல் காட்சியளித்தாலும் ஆங்காங்கே முந்திரி மரமும் , பனை மரமும் உள்ளது . பாலைநிலத்தில் உள்ளது போல் வெண்ணிற மணற்பரப்பு இல்லாமல் சிவந்த நிறத்தில் கற்கள் அற்ற மணல் காணப்படுகிறது . கண்ணுக்கெட்டிய தூரம் வரை  செம்மணல் தான் . வேதியல் மாற்றங்களுக்கு உள்ளாகி நிறம் மாறி சிவந்த நிலையில் மணல் உள்ளது . காற்றின் போக்கிற் ஏற்ப இங்குள்ள மணற்குன்றுகள் இடம் மாறுகின்றன . இதனால் இப்பகுதியில் கடலை போல் திசை காண்பது கடினம் . 


நுண்கற்கால கருவிகள் :

   கி.பி 1883 ஆம் ஆண்டு தொல்லியல் அறிஞர் புரூஸ் புட் மற்றும் பலர் இந்த இடங்களில் மேற்பரப்பு ஆய்வு நடத்தி உள்ளனர் . இங்கு கண்ணாடி போன்றும் , சாக்லேட்  கலரிலும் நுண்கற்கால கல் ஆயுதங்கள் கிடைத்து இருக்கின்றன , இந்த சாக்லேட் சிவப்பு கறை   செந்நிற மணலுக்கு சம காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது .இவற்றின் காலம் கி.மு 800 முதல் 10000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று கருதப்படுகிறது . கூத்தம்புளி ,கட்டலங்குளம் , சாயாபுரம் , நாசரேத் , மெய்ஞ்ஞானபுரம் ஆகிய இடங்களில் ஆயுதங்கள் கிடைத்து இருக்கிறது .


        சேர்ட் (chert ) என்ற கல்லையும் ,குவார்ட்ஸ் ( quartz ) என்ற படிமக்கல்லையும் கொண்டு இவ்வாயுதங்கள் செய்யப்பட்டு இருக்கிறது . இவை அளவில்  சிறியவை என்பதால் இவற்றை "சிறுகல் கருவிகள் " (microlithic tools ) என்கின்றனர் . மிகச் சிறியவையாக இருப்பதால் இவற்றை நேரிடையாக கையில் பயன்படுத்துவதை விட மரப்பிடிகளிலோ , எலும்புப்பிடிகளிலோ கட்டி பயன்படுத்தி இருப்பர் . முனைகள் , கல்லுளி ,சுரண்டிகள் , இருபக்க முனைகள்(bifacial ), துளையிடும் கருவி , பட்டைக்கத்திகள் மற்றும் பல கருவிகள் இங்கு சேகரிக்க பட்டுள்ளன . 


 தொன்மையான நகரங்களான ஆதிச்சநல்லூர் சிவகளை உருவாவதற்கு முந்தைய காலத்தின் பண்பாட்டு தடயங்கள் இங்கு கிடைப்பது இதன் சிறப்பு .







கொற்கை வன்னிமரம்

 பல நூறு ஆண்டுகள் (2000 ஆண்டுகள் பழமையான மரம் என்று கூறப்படுகிறது ) பழமையான வன்னி மரம் . சில அடிகள் தரையில் சாய்ந்து மேலே நிமிர்ந்து நிற்கிறது . தரையில் உள்ள மரப்பகுதி முழுவதும் பொந்தாக இருக்கிறது .







நவகண்டம் , மோகனூர்

 ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில்

மோகனூர்


அரிகண்டம்

கரூர் குடைவரை

 கரூர் நகருக்குத் தெற்கே நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தான்தோன்றிமலை.  தானாக தோன்றிய மலை என்பதால் தான்தோன்றி மலை எனவும் பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது . 


இங்கு அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இது ஒரு முற்றுப்பெறாத குடைவரை கோயில் ஆகும்.  கோயில் மேற்கு நோக்கி உள்ளது . கருவறையில் திருமாலுக்கு நெடிய நின்ற திருமேனி பின் சுவரில் வெட்ட ஆரம்பித்து முகம் மட்டுமே முடிவடைந்த நிலையில் உள்ளது (உடற்பகுதி இல்லை) .  கருவறைக்கு வெளியே இருபுறமும் மிகப்பெரிய இரு சிற்பங்கள் முடிவுறாத நிலையிலும் மேலே பூதவரி மிக அழகாக செதுக்கப்பட்டுள்ளது. 

இது கொங்குநாட்டு குடவரைகளுள் மிகவும் பிரசித்தி பெற்றது எனலாம். 


டாக்டர் இரா.கலைக்கோவன் மற்றும் முனைவர். நளினி ஆகியோர் இந்த குடைவரையை பல்லவர் கலைப்பாணியாக தமது "பல்லவர் அதியர் பாண்டியர் குடைவரைகள்" நூலில் தொகுத்துள்ளமையை காண முடிகிறது. ஆகவே அவரின் ஆய்வுகளின் அடிப்படையில் இதனை பல்லவர் குடைவரையாகக் கருதலாம்.


இந்த கோவில் 1200 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான குடைவரைக் கோவிலாகும். இந்தக் கோவிலுக்கு "தென்திருப்பதி" என்ற சிறப்பு பெயரும் உண்டு.


இங்கு கல்வெட்டுக்கள் ஏதும் இல்லை.


நன்றி : முனைவர் நளினி, 

டாக்டர் இரா. கலைக்கோவன்