Friday, March 5, 2021

கிளியோபாட்ரா - முகில்

                                                            கிளியோபாட்ரா 

                                                                                   ஆசிரியர் : முகில்


எகிப்து நாட்டின் பேரரசியும் உலக அழகியுமான கிளியோபாட்ராவின் பிறப்பு முதல் இறப்பு வரை நடந்த சம்பவங்களை பேசுகின்றது இந்தப் புத்தகம் . கிளியோபாட்ரா என்ற பெயரில் வரலாற்றில் நிறைய பெண்கள் இருந்தாலும் இது ஏழாவது கிளியோபாட்ராவைப் பற்றியது . நம் நாயகி ராஜ குடும்பத்தில் பிறந்து தன் பதவியையும் அதிகாரத்தையும் காப்பாற்ற  இறுதிவரை போராடி இருக்கிறார் . ரோமப் பேரரசின் தலைவர்களான ஜூலியஸ் சீசரையும்  , மார்க் ஆண்டனியையும் தன் காதலில் விழ வைத்து அவள் விருப்பப்படி ஆட்சி மாற்றம் செய்து இருக்கிறாள் . இறப்பை கூட தானே முடிவு செய்தது என பல திகிலூட்டும் நிகழ்வுகளை விவரிக்கிறது இந்த புத்தகம் . 


 அதிகாரம் , ஆடம்பரம் , அழகு , அதிகமான செல்வம் அனைத்தும் ஒருங்கே கொண்டவள் கிளியோபாட்ரா . கிளியோபாட்ரா தன் அழகை எவ்வாறு எல்லாம் பராமரித்தாள் என்பதை படிக்கும் போது நமக்கு வியப்பே மேலிடுகிறது . ஆலிவ் ஆயில் எண்ணை தேய்த்துக் குளித்தல் , உடல் தேய்த்துக் குளிக்க வழவழப்பான தகடு , கழுதை பால் குளியல் , கூந்தலுக்கும் காலுக்கும் மருதாணி , இயற்கை கிரீம்கள் , கண்ணுக்கு மை , உதட்டுக்கு சாயம் , வாசனை திரவியம் என பலவற்றை பயன்படுத்தி தினமும் இரண்டு மணி நேரம் குளித்து இருக்கிறாள் . நகைப் பிரியை , அதனால் தன்னை நகைகள் கொண்டு மேலும் அழகு படுத்தி இருக்கிறாள் . உயரம் குறைவாக இருந்ததால் ஹீல்ஸ் அணிந்து  தான் வெளியே மற்றவருக்கு காட்சி தருவாள் .இப்படி  கிளியோபாட்ராவின் தனிப்பட்ட வாழ்க்கையையும் அரசியல் வாழ்க்கையையும் முழுவதும் விவரிக்கிறது . பதவி மற்றும் அதிகாரம் மோகம் அன்றிலிருந்து இன்றுவரை மனிதனை எவ்வாறு எல்லாம் தொடர்கிறது என்பதைப் புரிந்து கொள்ள உதவும் இந்த புத்தகம் .


No comments:

Post a Comment