Saturday, May 28, 2022

அரியனூர் ( Ariyannur ) , திருச்சூர் , கேரளா

 தொல் பழங்கால மக்கள்  பிறப்பு , இறப்பு இரண்டையும் புனிதமாகக் கருதினர் . இனக்குழுக்களாக  வாழ்ந்த மக்கள் , உயிர் பிரிந்த உடலை தனியிடத்தில் அடக்கம் செய்வதோடு அவர்கள் நினைவாக ஈமச்சின்னங்கள் வைக்கும் வழக்கத்தையும் கற்றுக்கொண்டனர் . இறந் தவர்களுக்கு மறுவாழ்வு உண்டு என்ற நம்பிக்கையாலும் , ஆவி கோட்பாட்டில் உள்ள நம்பிக்கையாலும் ஈமச்சின்னம்  வைக்கும் வழக்கம் உருவாக்கி இருக்கவேண்டும் . பெரும்பாலும் பெரும் கற்களைக் கொண்டே ஈமச்சின்னங்கள் உருவாக்கி இருக்கிறார்கள் . உலகில்  பல நாடுகளில் உள்ள இச்சின்னங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவே இருக்கிறது .  பெரும் கற்களைக் கொண்டு ஈமச்சின்னங்கள் உருவாக்கிய காலமே பெருங்கற்காலம் ஆகும் . சில இடங்களில் இறந்தவர்களை புதைத்த இடத்திலேயே (primary buriyal ) ஈமச்சின்னங்கள் வைப்பதுண்டு . சில இடங்களில் வெட்டவெளியில் இறந்த உடலை கிடத்திவிட்டு பின் பல மாதங்கள் கழித்து அவர்கள் எலும்புகளை பொறுக்கி பானையில் ( தாழி ) வைத்து புதைத்து அதன் மேல் ஈமச்சின்னங்கள் வைப்பதும் உண்டு ( secondary buriyal ) . இவ்வாறு தாழி வைக்கும் போது இறந்தவர்கள் பயன்படுத்தி / பயன்படும் பொருட்களையும் வைக்கும் பழக்கமும் ஏற்பட்டு இருக்கவேண்டும் . இவ்வாறு இறப்பு சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த காலம் பெருங்கற்காலம் ஆகும். அதனாலேயே தொல்பழங்கால வரலாற்றில் "பெருங்கற்காலம்" (Megalithic ) மிக முக்கிய பங்கு வகிக்கிறது .

   இயற்கையாக கிடைக்கும் பெருங்கற்களைப் பற்றிய அறிவையும் அவற்றை வெட்டி எடுக்கவும் , இடம் விட்டு இடம் நகர்த்தவும் , தூக்கி நிறுத்தவும் , கற்களை தேவைக்கேற்ப வடிவமைக்கும் தொழில்நுட்ப அறிவியலும் வளர்ந்த காலமிது . இரும்பு உலோகத்தின் பயன்பாட்டையும் அவற்றின் நன்மைகளையும் நன்கு உணர்ந்திருந்தனர் . கட்டிடக்கலை வரலாற்றில் மிக முக்கிய இடத்தை பெருங்கற்காலம் பெற்றுள்ளது . இக்காலத்தின் வாழ்விட சான்றுகள் குறைவாகவும் ஈமக்காடுகள் மிகுதியாகவும் கிடைக்கின்றன . தென்னிந்தியாவை பொறுத்தவரை ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு வகையான  ஈமச்சின்னங்கள் கிடைக்கின்றன . அவை

1) கல்திட்டை ( Dolmen )

2) கல்பதுக்கை ( cist )

3) கல்குவை ( Cairn )

4) குத்துக்கல் ( Menhir )

5) குடைக்கல் ( Umberlla stone )

6) தொப்பிக்கல் ( hood stone )

7) குடைவரை தாழ்வறை ( Rockcut caves )

8) கல்வட்டம் ( cairn circle )

என்பன ஆகும் .

தமிழகத்தில் கிடைக்கும் ஈமச்சின்னங்கலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஈமச்சின்னங்கள் கேரளாவில் கிடைக்கின்றன . ஈமச்சின்னங்களில் வேறுபாடுகள் காணப்பட்டாலும் அவற்றின் நோக்கம் ஒன்றாவே உள்ளது . அவற்றை பற்றி காண்போம் . 

                கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூர் மற்றும் கொச்சின் ஆகிய நகரங்களைச் சுற்றி குடைவரை தாழ்வரை , குடைக்கல் , தொப்பிக்கல் ஆகிய ஈமச்சின்னங்கள் அமைந்துள்ளன . தமிழகத்தில் இவ்வகைகள் காணப்படுவதில்லை . 

 திருச்சூர் மாவட்டம்  , அரியனூர்  (ARIYANNUR ) என்னும் ஊரில் குடைக்கல் மற்றும்  தொப்பிக்கல் மற்றும் ஹூட்  (Hood stone )  காணப்படுகிறது .  நன்கு செதுக்கப்பட்ட (laterite ) முக்கோண வடிவில் உள்ள

மூன்று அல்லது நான்கு கற்களை சற்று சாய்வாக மேல் பகுதி ஒன்றாக வருமாறு நட்டு அதன் மேல், குடை போன்ற வட்ட வடிவ மூடு கல்லை வைத்து, பார்ப்பதற்கு காளான் போல் காட்சி தருவது குடைக்கல் (umbrella stone ) . இக்கற்கள் எல்லாம் சீராக இழைக்கப்பட்டுள்ளது . இக்குடைக்கல்லின்  அடியில் ஈமப்பொருட்களான தாழி , படையல் பொருட்கள் போன்றவற்றை  வைத்து அதன் மேல் இக்கல்லை நடுவது வழக்கம் .

                                         அடுத்து தொப்பிக்கல் (Hat stone ) , இதன் மேல் பகுதி  மட்டும் குடைக்கல் போலவே உள்ளது .  நன்றாக செத்துக்கட்ட குடையை போன்ற வட்ட வடிவமான மூடு கல்லை  , தரையின் மேல் வைப்பது தொப்பிக்கல் . அதன் அடியிலும் ஈமத்தாழி மற்றும் ஈமப்பொருட்கள் வைத்து இருந்ததாக கூறப்படுகிறது .

                          அடுத்து காணப்படுவது ஹூட் ஸ்டோன் என்னும் வகை . முக்கோண வடிவ ஆறு அல்லது ஏழு  கற்களை சற்று சாய்வாக வட்ட வடிவமாக நடப்பட்டுள்ளது . இதை ஹூட் ஸ்டோன் (Hood Stone ) என்கிறார்கள் . இதுவும் குடைக்கல் , தொப்பிக்கல் அருகேயே காணப்படுகிறது .  இவை மூன்றும் ஒரே இடத்தில் காண்பது சிறப்பு .

கந்தனச்செரி Kandanassery , திருச்சூர் , கேரளா

 தொல் பழங்கால மக்கள்  பிறப்பு , இறப்பு இரண்டையும் புனிதமாகக் கருதினர் . இனக்குழுக்களாக  வாழ்ந்த மக்கள் , உயிர் பிரிந்த உடலை தனியிடத்தில் அடக்கம் செய்வதோடு அவர்கள் நினைவாக ஈமச்சின்னங்கள் வைக்கும் வழக்கத்தையும் கற்றுக்கொண்டனர் . இறந் தவர்களுக்கு மறுவாழ்வு உண்டு என்ற நம்பிக்கையாலும் , ஆவி கோட்பாட்டில் உள்ள நம்பிக்கையாலும் ஈமச்சின்னம்  வைக்கும் வழக்கம் உருவாக்கி இருக்கவேண்டும் . பெரும்பாலும் பெரும் கற்களைக் கொண்டே ஈமச்சின்னங்கள் உருவாக்கி இருக்கிறார்கள் . உலகில்  பல நாடுகளில் உள்ள இச்சின்னங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவே இருக்கிறது .  பெரும் கற்களைக் கொண்டு ஈமச்சின்னங்கள் உருவாக்கிய காலமே பெருங்கற்காலம் ஆகும் . சில இடங்களில் இறந்தவர்களை புதைத்த இடத்திலேயே (primary buriyal ) ஈமச்சின்னங்கள் வைப்பதுண்டு . சில இடங்களில் வெட்டவெளியில் இறந்த உடலை கிடத்திவிட்டு பின் பல மாதங்கள் கழித்து அவர்கள் எலும்புகளை பொறுக்கி பானையில் ( தாழி ) வைத்து புதைத்து அதன் மேல் ஈமச்சின்னங்கள் வைப்பதும் உண்டு ( secondary buriyal ) . இவ்வாறு தாழி வைக்கும் போது இறந்தவர்கள் பயன்படுத்தி / பயன்படும் பொருட்களையும் வைக்கும் பழக்கமும் ஏற்பட்டு இருக்கவேண்டும் . இவ்வாறு இறப்பு சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த காலம் பெருங்கற்காலம் ஆகும். அதனாலேயே தொல்பழங்கால வரலாற்றில் "பெருங்கற்காலம்" (Megalithic ) மிக முக்கிய பங்கு வகிக்கிறது .

   இயற்கையாக கிடைக்கும் பெருங்கற்களைப் பற்றிய அறிவையும் அவற்றை வெட்டி எடுக்கவும் , இடம் விட்டு இடம் நகர்த்தவும் , தூக்கி நிறுத்தவும் , கற்களை தேவைக்கேற்ப வடிவமைக்கும் தொழில்நுட்ப அறிவியலும் வளர்ந்த காலமிது . இரும்பு உலோகத்தின் பயன்பாட்டையும் அவற்றின் நன்மைகளையும் நன்கு உணர்ந்திருந்தனர் . கட்டிடக்கலை வரலாற்றில் மிக முக்கிய இடத்தை பெருங்கற்காலம் பெற்றுள்ளது . இக்காலத்தின் வாழ்விட சான்றுகள் குறைவாகவும் ஈமக்காடுகள் மிகுதியாகவும் கிடைக்கின்றன . தென்னிந்தியாவை பொறுத்தவரை ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு வகையான  ஈமச்சின்னங்கள் கிடைக்கின்றன . அவை

1) கல்திட்டை ( Dolmen )

2) கல்பதுக்கை ( cist )

3) கல்குவை ( Cairn )

4) குத்துக்கல் ( Menhir )

5) குடைக்கல் ( Umberlla stone )

6) தொப்பிக்கல் ( hood stone )

7) குடைவரை தாழ்வறை ( Rockcut caves )

8) கல்வட்டம் ( cairn circle )

என்பன ஆகும் .

தமிழகத்தில் கிடைக்கும் ஈமச்சின்னங்கலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஈமச்சின்னங்கள் கேரளாவில் கிடைக்கின்றன . ஈமச்சின்னங்களில் வேறுபாடுகள் காணப்பட்டாலும் அவற்றின் நோக்கம் ஒன்றாவே உள்ளது . அவற்றை பற்றி காண்போம் . 

கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூர் மற்றும் கொச்சின் ஆகிய நகரங்களைச் சுற்றி குடைவரை தாழ்வரை , குடைக்கல் , தொப்பிக்கல் ஆகிய ஈமச்சின்னங்கள் அமைந்துள்ளன . தமிழகத்தில் இவ்வகைகள் காணப்படுவதில்லை .  திருச்சூர் மாவட்டம்  , கந்தனச்செரி ( Kandanassery  ) என்னும் ஊரில்  குடைவரை தாழ்வறை ஈமச்சின்னம் காணப்படுகிறது . குடைவரை தாழ்வறை என்பது பாறையை குடைந்து தாழ்வான இடத்தில் அறை போன்ற அமைப்பை ஏற்படுத்துவதாகும் . இயற்கையான நிலமட்டத்தில் உள்ள கற்பறையை (laterite ) செவ்வக குழியாக குடைந்து வெட்டியெடுக்கப்பட்டு இருப்பதுடன் அக்குழியில் இறங்க படியும் காணப்படுகிறது . இக்குழியின் ஒரு பக்கத்தில் உள்ள  சதுர துவாரத்தின் வழியே உள்ளே சென்றால் ஒரு சிறு அறை போன்ற அமைப்பு உள்ளது . அந்த அறையில் இரு புறமும் திண்ணை போன்ற அமைப்பும் அறையின் மேல் கூரையில் ஒரு வட்ட துவாரம் உள்ளது . இவ்வறை வெளியே உள்ள முன்னறையை விட சற்று தாழ்வாக உள்ளது . இங்குள்ள திண்ணையில் படையல் பொருட்கள் மற்றும் எழும்புகள் இருந்ததாக கூறப்படுகிறது . 

வரலாற்று காலத்திற்கு முன்பே பாறையை குடைந்து ஈமச்சின்னங்கள் அமைக்கும் வழக்கம் இருந்துள்ளதை இதன் மூலம் நாம் அறிந்துகொள்ள முடிகிறது . இவ்விடம் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் நன்றாக வேலி அமைத்து பாதுகாப்பாக உள்ளது . மழை அல்லதா காலத்தில் சென்றால்  குடைவரை உள்ளே வரை நாம் சென்று காண முடியும் .

Friday, May 6, 2022

மறுகால்தலை பிராமி கல்வெட்டு , திருநெல்வேலி

 சமண மதம் தமிழகத்தில் நீண்ட வரலாற்றை கொண்டது என்பதற்கு இங்கு பரவிக் கிடக்கும் கல்வெட்டுகளும் , கற்படுக்கைகள் மற்றும் சமண சிற்பங்களுமே சாட்சி .  சமண துறவிகள் , இயற்கையாக அமைந்த மலை குகைகளில் கற்படுக்கைகளை அமைத்துத் தங்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர்  . இவ்வாறான கற்படுக்கைகள் தமிழகத்தில்  அரச்சலூர் , சுக்காளியூர் , கீழ வளவு , அழகர் மலை மற்றும் பல்வேறு இடங்களில் காணக்கிடைக்கிறது  .   இக்கற்படுக்கையின் அருகே சில இடங்களில் கல்வெட்டுகளை பொறித்தும் உள்ளனர் . இவ்வாறு கல்வெட்டுகளுடன் கூடிய கற்படுக்கை திருநெல்வேலி மாவட்டம் மறுகால்தலை என்னும் ஊரில் உள்ளதைப் பற்றி காண்போம் .

                   திருநெல்வேலி மாவட்டம் , பாளையங்கோட்டைக்கு வடகிழக்கில் 9km தொலைவில் உள்ளது சீவலப்பேரி என்னும் ஊர் . பராந்தக வீர நாராயணன்  தன் தந்தை ஸ்ரீ வல்லப பாண்டியன் நினைவாக ஒரு பெரிய ஏரியை வெட்டி அதற்கு "ஸ்ரீ வல்லப பேரேரி " என்று பெயரிட்டான் . அதுவே பின்னாளில் மருவி "சீவலப்பேரி" என்று ஆனது . இந்த சீவலப்பேரி ஊரில் இருந்து 2 km தொலைவில் உள்ளது மறுகால்தலை என்னும் கிராமம் . குளம் நிரப்பி மறு கால் பாயும்  முதன்மையான இடம் (தலை) என்பதே "மறுகால்தலை "  என்றானதாக கூறப்படுகிறது .

 தாமிரபரணி , கடனாநதி , சிற்றாறு  ஆகிய மூன்று நதிகள் இவ்வூரின் அருகே இணைகின்றன .  இவ்வூரின் பாதை முன்னோரு காலத்தில்  திருநெல்வேலியிலிருந்து இராமேஸ்வரம் செல்லும் பெருவழியாக இருந்துள்ளது . இவ்வூரில் உள்ள பூவிலுடையார் மலையில் உள்ள சிறு குன்றில் பஞ்சபாண்டவர் கற்படுக்கை என்று அழைக்கப்படும் கற்படுக்கை அமைந்துள்ளது . இக்குகையின் மேற்பகுதியில் பெரிய அளவிலான எழுதுக்களால் வெட்டப்பட்ட பிராமி கல்வெட்டுகள் உள்ளன . இதன் காலம் 2ம் நூற்றாண்டு . தமிழகத்தில் உள்ள பழமையான கல்வெட்டுகளில் இதுவும் ஒன்று .

கல்வெட்டு :

" வெண்காஸிபன் கொடுபித கல்கஞ்சனம் " 

செய்தி : வெண்காசிபன்  என்பவன் இங்குள்ள குகைதளத்தில் கல்படுக்கை அமைத்து கொடுத்தான்  என்பது கல்வெட்டுச் செய்தி ஆகும் . கற்படுக்கையை கஞ்சனம் என்பர் . 

இக்கல்வெட்டு எழுத்துக்கள் ஒரே சீராக இல்லாமல் மேலும் கீழுமாக பெரிய அளவிளான எழுத்துகளால் வெட்டப்பட்டுள்ளது . அளவில் பெரிய எழுத்துக்களாக உள்ளதால் கீழ்லிருந்தே படிக்க முடிகிறது . 

இயற்கையாக அமைந்த இக்குகையில் மழை நீர் குகைகளில் விழாதவாறு கூரை விளிம்பை குடைந்து உள்ளனர் . சீவலப்பேரி செல்லும் வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் அனைவரும் காண வேண்டிய ஒரு இடமாகும்.

குடைவரை

 1 . மகேந்திரவாடி குடைவரை

மகேந்திரவாடி குடைவரை , காஞ்சிபுரம்

பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணுவின் மகனான முதலாம் மகேந்திரவர்மன் வீரத்தில் மட்டுமல்லாமல் பல கலைகளிலும் தேர்ச்சி பெற்று பல்லவ குலத்திற்கு பெருமை சேர்த்தவர் . இசை , ஓவியம் , நாடகம் இயற்றுதல் என பலவற்றில் சிறந்து விளங்கியவர் என்பதால் இவருக்கு பல விருதுப் பெயர்கள் உண்டு . சித்திரகாரப்புலி (ஓவியம்) , சங்கிரணகாதி (இசை) குணபரன் ( குணம் ) என பெயருக்கு ஏற்றார் போல் சிறந்து விளங்கியவர்   செங்கல் , மரம் , உலோகம் கொண்டு கட்டப்படும் கோயில்கள் காலத்தால் நிலைத்து நிற்காததால் நிலையான கோயில்கள் அமைக்க எண்ணி பாறைகளை குடைந்து நிலையான கோயில் அமைத்தவர் . இவர் காலத்தில்தான் தமிழகத்தில் பெரும்பாலான குடைவரைகள் அமைக்கப்பட்டன . மண்டகப்பட்டு , திருச்சி , பல்லாவரம் , வல்லம் , மாமண்டூர் , தளவானூர் , சீயமங்கலம் , மகேந்திரவாடி என பல இடங்களில் குடைவரைகள் அமைத்தவர் . இவற்றில் இவரால் விஷ்ணுவிற்காக எடுக்கப்பட்ட ஒரே குடைவரையை பற்றி இங்கு காண்போம் .

    வாருங்கள் மகேந்திரவாடி குடைவரைக்கு , உங்கள் கண்களை மகிழ்விக்கும் இக்கோயில் நல்லவர்களால் மிகவும் போற்றப்படும் என்ற கல்வெட்டு வரிகள் மூலம் நம்மை வரவேற்கிறார் , மகேந்திரவர்மன் .

        காஞ்சியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் மகேந்திரவாடி என்னும் ஊர் உள்ளது . மகேந்திரவர்மன் , மகேந்திரபுரம் என்னும் ஊரை உருவாக்கி அங்கிருந்த பாறையில் விஷ்ணுவுக்கு "மகேந்திர விஷ்ணு கிரஹம் " என்னும் கோயில் அமைத்ததுடன் இதன் அருகிலேயே ஒரு ஏரியை உருவாக்கி அதற்கு  " மகேந்திர தடாகம் " என்று பெயரிட்டு அழைத்தார்.

 இவர் காலத்தில் இவ்வூர் மிக முக்கிய நகரமாக இருந்து இருக்க வேண்டும் . பொதுவாக குடைவரைகள் எல்லாம் சிறு மலைத்தொடரில் உருவாக்கப்பட்டு இருக்கும் , ஆனால் மகேந்திரவாடி குடைவரை திறந்த வெளியில் உள்ள சிறு குன்றின் பாறையில் குடையப்பட்டுள்ள து . 

"மகேந்திர விஷ்ணு கிரகம் " என்று அழைக்கப்படும் இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது . கருவறை , அர்த்த மண்டபம் , முன் மண்டபம் என கோயில் அமைப்புடன் அமைந்திருப்பது இதன் சிறப்பாகும் . கருவறையில் இருக்கும் நரசிம்மர் பிற்காலச் சேர்க்கையாகும் , பல்லவர் காலத்தில் கருவறையில் திருமால் சித்திரமாக வரையப்பட்டோ அல்லது சுதைச் சிற்பமாகவோ இருந்திருக்கலாம் என்பது அறிஞர்கள் கருத்து . கருவறையின் முன்னே உள்ள அர்த்த மண்டபத்தில் இருபுறமும் துவாரபாலகர்கள் ஒரே அமைப்பில் ஆடை அணிகலன்களுடன் , கரண்டமகுடம் , முப்புரிநூல், மற்றும் பனையோலைக் குண்டலங்கள் அணிந்து காணப்படுகிறார்கள் . தூண்களைப் பொறுத்தவரை நடுவில் எண்கோணத்திலும் , மேலும் கீழும் சதுர வடிவமாகவும் காணப்படுகிறது . கல்வெட்டுக்கு மேலே காணப்படும் வடிவம் பத்ம பதக்கம் எனப்படும் . குடைவரையின் மேல் பகுதியில் மழை நீர் உள்ளே நுழையாதவாறு வெட்டப்பட்டுள்ளது . 

 கல்வெட்டுச் செய்தி :

 குணபரன் என்பவரால் மகேந்திரபுரத்தில் , மகேந்திர தடாகக்  கரையில் மகேந்திர விஷ்ணு கிரஹம் எனும் கோயிலை ,முராரி என்னும் இறைவனுக்காக மக்கள் கண்டு போற்றுவதற்காக குடைவித்தான் .

மனித கண்களை மகிழ்விக்கும்  அழகிய இக்கோயில் நல்லவர்களால் போற்றப்படும் என்று வரும் வரிகளை உணர நாம் நேரில் சென்று காணவேண்டும் .

மகேந்திர தடாகம் :

கல்வெட்டில் குறிப்பிடப்பட்ட தடாகம் குடைவரைக்கு அருகே உள்ளது . தடாகம் என்றால் சமஸ்கிருதத்தில் குளம்  . மகேந்திரவர்மனின் பெரும்பாலான  குடைவரைகள் ஏரிக்கரையை ஓட்டியே அமைந்திருப்பது  சிறப்பாகும் . மாமண்டூரில் இருக்கும் "சித்திரமேக தடாகம் " போலவே இங்கும் மகேந்திர தடாகம்  இக்குடைவரைக்கு அருகில் அமைந்துள்ளது . சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான இந்த ஏரி சுற்றி இருக்கும் ஏழு கிராமங்களுக்கும் தற்போதும் பயனளிக்கிறது .

பல்லவர்களின் கலைப்பணிக்கு மற்றுமோரு எடுத்துக்காட்டாக இக்குடைவரை விளங்குகிறது .