Tuesday, October 15, 2019

சமணர் படுக்கைகள், செந்நாக்காடு/ செந்நாக்கல்புதூர், நாமக்கல் மாவட்டம்

நாமக்கல் மாவட்டம் , செந்நாக்கல்பாளையத்திற்கு அருகே  செந்நாக்குன்று அல்லது செந்நாக்கரடு என்னும் ஊர் .இவ்வூர் தற்போது செந்நாக்கல்புதூர் என்று அழைக்கப்படுகிறது .இங்கு உள்ள சிறு குன்றில்  சிறிய குகை உள்ளது . அந்த குகைத்தளத்தில் நான்கு கல் படுக்கைகள் உள்ளன . முதல் படுக்கையில் தலையணை போல உள்ள பகுதியில் அழகிய மலர் பொறிக்கப்பட்டுள்ளது .இரண்டாவது படுக்கையில்  அதே தலையணை போன்ற பகுதியில் சுவஸ்திக் சின்னமும், நான்காவது படுக்கையில் ஸ்ரீவத்ஸம் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளது . இது சுமார் இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம்.


Monday, October 14, 2019

ஸ்ரீ விஜயநாராயண கோயில், குண்டல்பேட், கர்நாடகா, karnataka

கர்நாடக மாநிலம், குண்டல்பேட்டில் உள்ள விஜயநாராயண கோயில்12ம் நூற்றாண்டு ஹொய்சால மன்னன் விஷ்ணு வர்தனால் கட்டப்பட்டது . சோழர்களின் மீதான தலகாடு வெற்றியை தொடர்ந்து ஹொய்சாலர்கள் கர்நாடகாவில் மேலும் நான்கு கோயில்கள் கட்டினர் . தலகாட்டில் உள்ள ஸ்ரீ கீர்த்தி நாராயண பெருமாள் கோயில் , தொண்டனூர் என்னும் இடத்தில் உள்ள ஸ்ரீ யோக நரசிங்க ஸ்வாமி ஆகின ஆகும் . 






சமணர் கோயில், Doddathuppur , கர்நாடகா.


குண்டலபேட்டில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது  Doddathuppur . இங்கு சிதிலமடைந்த பழைய சமணக் கோயில் ஒன்று உள்ளது . இக்கோவிலில் இரண்டு தளங்கள் உள்ளன . முதல் தளத்தில் இருந்து இரண்டாம் தளம் செல்ல படிகள் உள்ளன . கீழ் தளம் கிரானைட் கற்களால் ஆனது . கி .பி. 14 -15 ம் நூற்றாண்டில் இக்கோயில் கட்டப்பட்டு உள்ளது .


 இக்கோயிலின் வெளியே காணப்படும் புலி குத்தி நடுகல்

கர்நாடகத்தில் சமணம் - குண்டல்பேட்

  
குண்டல்பேட்லிருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கேலசூர் (kelasur ) . குண்டல்பேட் சுற்றி  பல இடங்களில் சமண கோயில்கள் உள்ளன .அவற்றுள் ஒன்று kelausur என்னும் ஊரிலுள்ள சந்திரபிரபா தீர்த்தங்கரர் கோயில்.    கிபி 8-9ம் நூற்றாண்டில் (Acharya virasena) ஆச்சாரிய வீர சேனா (கி. பி 792-853 )இந்த ஊரில் வாழ்ந்துள்ளார்.இவர்  பல சமண நூல்களுக்கு விளக்கங்கள் அளித்துள்ளார் .
வடக்கு நோக்கி அமைந்துள்ள கோயிலின் முன் மண்டபத்தில் உள்ள தூண்களில் ஹொய்சால பாணியில்  உள்ளன .  அர்த்தமண்டபத்தில் பளிங்கு கல்லால் ஆன நின்றநிலையில் சந்திர நாதா சிலை உள்ளது .சந்திர நாதவின் இடதுபுறம் பிரம்மயக்க்ஷ ,பார்வதி , குஷமந்தினி ஆகியோரின் சிலைகள் உள்ளன . கோயிலின் பின்புறம் ஆறு அடி நீளம் உள்ள பார்சுவநாதர் சிலை உள்ளது . விரதம் இருந்து உயிர் நீத்த நீத்த நிசிதிசை  சிலைகளும் உள்ளன.
ஆச்சாரிய வீர சேனா சேனா இந்த இடத்தை உதய கோபுர( Udyogapura) என குறிப்பிடுகிறார் . இந்த இடம் சமணர்களின் கிராமங்களுக்கு தலைநகராக விளங்கியது என்றும் , இங்கு மொத்தம் 600 வீடுகள் இருந்தன என்றும் குறிப்பிடுகிறார் . தமிழ் கல்வெட்டுக்கள் இந்த ஊரை kellasuppulaicheri  , கங்கைகொண்ட சோழ வளநாட்டு முடிகொண்ட சோழமண்டலம் என்றும் குறிப்பிடுகிறது .
தமிழ் ,கன்னட ,சமஸ்கிருத கல்வெட்டுக்கள் இங்கு உள்ளன.
பன்னிரண்டாம் நூற்றாண்டில் விக்கிரமசோழன் (சோழகங்கன்) ( கி.பி 1118 - 1135) வழங்கிய  தானம் பற்றிய தமிழ் கல்வெட்டுகள் இரண்டு உள்ளன .13ம் நூற்றாண்டில் ஹொய்சால மன்னன் வீர நரசிம்ம தேவனின் (கி.பி 1220 - 1235) கன்னட கல்வெட்டுகள் உள்ளன . பத்தொன்பதாம் நூற்றாண்டில் மைசூர் அரசர் மூன்றாம் கிருஷ்ணராஜ உடையார்  இந்த கோயிலை திருப்பணி செய்துள்ளார் என்பன பற்றிய குறிப்புகள் உள்ளன . 














ஸ்ரீ திரியம்பகேஸ்வரர் கோயில், திரியம்பகாபுரா, கர்நாடகா

சாம்ராஜ் நகரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது த்ரியம்பகாபுரா (triyambakapura) இங்கு ஸ்ரீ திரியம்பகேஸ்வரர் , ஸ்ரீ பார்வதி திரியம்பகேஸ்வரா கோயில் உள்ளது . கிபி 1250 - 1350 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இக்கோயில் விஜய நகர பாணியில் உள்ளன. ஆனால் சோழர்களால் கட்டப்பட்டது இக்கோவில் என்று சொல்லப்படுகிறது . கோயிலின் முன் மண்டபமும் தர்பார் ஹால் முதலியன விஜயநகரப் பேரரசால் கட்டப்பட்டுள்ளது . 1521 ஆம் ஆண்டு இக்கோயிலுக்கு வழங்கப்பட்ட தானம் மட்டும் வருவாய்க்கான கல்வெட்டுகள் காணப்படுகின்றன .














Thursday, October 10, 2019

ஸ்ரீ லக்ஷ்மி வரதராஜ சுவாமி கோயில், கர்நாடகா

சாம்ராஜ் நகரிலிருந்து  30 கிலோமீட்டர்  தொலைவில் உள்ளது ஸ்ரீ லக்ஷ்மி வரதராஜ சுவாமி கோயில் . கடம்பர் ,சோழர், ஹொய்சாலர் , விஜயநகர , மைசூர் அரசுகளின் ஆட்சிக்கு உட்பட்ட நகரமாக Terakanambi நகரம் இருந்தது . இந்த ஊரில்தான் மைசூர் அரசரான ஸ்ரீ ரண தீரா காண்ட்ரவா தன் சிறு வயதில் வாழ்ந்தார். இவர் ஆட்சிக் காலத்தில் இப்பேரரசின் எல்லை மதுரை வரை நீண்டிருந்தது. இங்கு 12 கோயில்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. தற்போது 9 கோயில்களே மீதம் உள்ளன. பெருமாள் தனநாயக்காவின் மகனான மாதண்ட நாயகரால் இக்கோயில் கட்டப்பட்டது. பின் விஜயநகர பேரரசால் விரிவு படுத்தப்பட்டது . தெற்கு பகுதியை கிருஷ்ணராஜ வாண்டயர் விரிவுபடுத்தினார்.  2000ம் ஆண்டு இக்கோயில் புனரமைக்கப்பட்டது.






நடுகற்கள், ஸ்ரீ வீரபத்திர சாமி கோயில், கலாலே, கர்நாடகா

                          
ஸ்ரீ வீரபத்திர சாமி கோயில் மைசூரிலிருந்து ஊட்டி செல்லும் வழியில் உள்ள kalale கிராமத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது . இக்கோயிலை சுற்றி நடுகற்கள் உள்ளன . பொதுவாக நடுகற்கள் என்பது இறந்தவர்களின் நினைவாக வைக்கப்படும் கற்கள். பல்வேறு காரணங்களால் வைக்கப்படும் இக்கற்கள் அவர்களின் வீரத்தை பறைசாற்றும். இத்தகைய நடுகற்கள் எல்லாம் இங்கு கோயிலை சுற்றி ஒரே இடத்தில் காணப்படுகிறது. இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குறும்பர் இனத்தவரின் கோயில்களில் இத்தகைய நடுகற்கள் நிறைய   காணப்படுகிறது.