Friday, November 27, 2020

சோழர் கோயில்கள்

 கொற்கை

               வரலாற்றுப் புகழ்மிக்க #கொற்கை பாண்டியர்களின் துறைமுகம் மட்டுமல்லாமல் பழம் பெரும் வணிக நகரமாகவும் இருந்து உள்ளது . "தன்பொருநை " ஆறு கடலில்  கலக்கும் இடத்தில் , முன்பு அமைந்து இருந்தது இந்நகரம் . கிரேக்கர்கள் முதன் முதலில் வந்து இறங்கியது இங்கு தான் . அதனால் இந்த நகரை பற்றிய செய்திகள் நம்மை விட கிரேக்க வணிகர்களின் குறிப்புகளில் அதிகம் காணப்படுகிறது . அவர்களின் குறிப்பில் தாமிரபரணி  ஆற்றிற்கு வடக்கே இந்த நகரம் இருந்ததாக கூறப்படுகிறது . பிற்காலத்தில்  கடலின் நீர் மட்டம் உயர்ந்ததால் ஏற்பட்ட மாற்றத்தால் கொற்கைக்கும் கடலுக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டது . அந்த இடைவெளியில் ஏற்பட்ட  ஒரு புதிய நகரம் தான் காயல் . இந் நகரமும் வணிகத்தில் சிறந்து விளங்கியது . கொற்கை , காயல் இரண்டு நகருமே தாமிரபரணி கடலில் கலக்கும் இடத்தில் இருந்த மிகப்பெரிய வணிக நகரம் ஆகும் . 


தமிழரின் தொன்மையை பறைசாற்றும் ஆதித்தநல்லூர் மற்றும் சிவகளை ஆகிய இடங்களுக்கு அருகில் இவ்வூர்  இருப்பது கூடுதல் சிறப்பு .கொற்கை என்றால் "படைகளின் கூடாரம்" என்று பொருள் . தற்போது குறிப்பிடத்தக்க இடமாக இல்லாமல் போனாலும் , 2500 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் , அரேபியர்கள் சீனர்கள் , ரோமானியர்கள் வந்து வணிகம் செய்ய தங்கிய நகரம் இது . குதிரை வணிகம் , முத்து வணிகம் , மிளகு வணிகம் இன்னும் பல முக்கிய வணிகங்கள் நடந்த மிகப் பெரிய பெரிய நகரமாகும் . முத்து வணிகத்தில் தலைமையிடமாக கொற்கை விளங்கி இருக்கிறது . முத்து குளித்தல் இங்கு சிறப்பாக இருந்து இருக்கிறது . கொற்கை பற்றிய செய்திகள் கி.பி 80 ல் இந்தியாவிற்கு வந்த கிரேக்க அறிஞரான பெரிப்புளூஸ் மாரிஸ் ஏரித்தரேஸ் (Periplus Maris Erigthrace) தன் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார் . கி.பி 130 இல் வாழ்ந்த நில நூல் அறிஞர் தாலமியும் இந்நகரை பற்றி செய்திகளை குறிப்பிட்டுள்ளார் .


#அக்கசாலை :

    கொற்கைக்கு அருகே உள்ள ஊர் "அக்கசாலை ". அக்கசாலை என்பது நாணயம் அச்சடிக்கும் இடம் ஆகும் . தற்போது "அக்காசாலை" என்று மருவி வழங்கப்படுகிறது . கார்டுவெல் இப்பகுதியை கொற்கையின் ஒரு பகுதியென்றும் , அங்கே பாண்டியர்களின் நாணயங்கள் அச்சிடப்பட்டதென்றும் குறிப்பிடுகிறார் . அக்கம் என்றால் பொன் என்று பொருள் . பொன் ,வெள்ளி , செம்பு உலோகங்களால் இங்கு நாணயங்கள் செய்யப்பட்டன . தாமிரபரணி ஆற்றங்கரையில்  நாணயங்கள் கிடைத்து இருக்கின்றன .


#ஈஸ்வரமுடையார்கோயில்    

    இங்கு ஒரு பழமையான சிவன் கோயில் உள்ளது . "அக்கசாலை ஈஸ்வரமுடையார் கோயில் " என்று வழங்கப்படும் இக்கோயிலில் தற்போது மூலவராக  விநாயகர் உள்ளார் . இக்கோயில் கல்வெட்டுகள் கொற்கையை " மதுரோதய நல்லூர் " என்று குறிப்பிடுகின்றன . பாண்டியர்களால் கட்டப்பட்டு பின்னர் சோழர்களால் புணரமைக்கப்பட்டு இருக்கலாம் .


#கண்ணகிகோயில் : 

 கண்ணகி கோயில் ஒன்றும் இங்கு உள்ளது .கோவலன் மதுரையில் கொலையுண்டதை கேள்விப்பட்ட கண்ணகி நெடுஞ்செழிய பாண்டியனிடம் நீதி கேட்டதும் , அவன் தன் தவறை உணர்ந்து உயிர் விட்டதும் , கோபத்தால் கண்ணகி மதுரையை எரித்ததும் நாம் அறிந்ததே . கொற்கை பண்டியநாட்டின் முக்கிய வணிக நகரமாகும் . அப்போது இங்கு இளவரசனாக இருந்த வெற்றிவேற் செழியன் பாண்டிய அரசு கட்டிலில் ஏறினான் என்றும் , பின்னர் பத்தினி தெய்வம் கண்ணகியை சாந்தப்படுத்த 1000 பொற்கொல்லர்களை பலியிட்டான் என்றும் கூறப்படுகிறது .மேலும் கண்ணகிக்கு இங்கு சிலை எடுத்தான் என்றும் அதற்கு "வெற்றிவேல் நங்கை " என்று பெயர் சூட்டியதாகவும் கூறப்படுகிறது . "செழுமை நங்கை " என்பது செழியனின் நங்கை என்றும் , செழியன் வணங்கிய நங்கை என்றும் கூறப்படுகிறது . பழைய சிலை காணாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது . ஆனால் தற்போது இருப்பது தற்கால கோயிலும் , தற்கால கண்ணகி சிலையும் தான் .


 இவ்வளவு சிறப்பு மிக்க பகுதியில் அடுத்த வருடம் அகழ்வாராய்ச்சி நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது .











நிச்சாம்பாளையம்



ஈரோட்டிற்கு மேற்கே 21கிமீ தொலைவில் திங்களூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது நிச்சாம்பாளையம் கிராமம்.  இங்கு ஊருக்கு தெற்கே சுமார் 50 ஏக்கர் பரப்பளவிலான பெருங்கற்கால  ஈமக்காடு உள்ளது. 


இந்த ஈமக்காட்டில் நிறைய கற்பதுக்கைகளும், மேலே கற்பலகைகள் கொண்டு மூடப்பட்ட ஈமத்தாழிகளும் நிறைய கிடைக்கின்றன. இங்கு மிகப்பெரிய 17அடி உயரமுள்ள குத்துக்கல் இரண்டு உள்ளன. அதனைச் சுற்றி கல்வட்டங்களும் காணப்படுகின்றன. நிறைய கல்வட்டங்கள் சிதைந்த நிலையிலும் கற்பதுக்கைகள் மண்மூடியும் காணப்படுகிறன. 


மேலும் இங்கு இரும்பு உருக்கு தொழிற்சாலை இருந்ததற்கான தடயங்கள் காணப்பட்டதாக அகழாய்வு அறிக்கைகள் கூறுகின்றன. அதற்கேற்ப நிறைய இரும்பு உருக்கு எச்சங்களும் காணக்கிடைக்கின்றன.


#konguhistory 42






RALLIAH DAM, COONOOR, NILGIRIS

 

RALLIAH DAM, COONOOR, NILGIRIS

The dam was constructed and opened on 16th May 1941, by Sir Arthur Hope, then Governor of Madras. The Dam is located under The Coonoor Municipality jurisdiction. The Dam was built by Two Contractors The Hindustan Construction Company Limited, Bombay and The Nilgiri Engineering company Coonoor... The further details will be up dated shortly..