Wednesday, February 22, 2023

காஞ்சிபுரம் , திருப்பருத்திக்குன்றம் சுவர் ஓவியங்கள்

காஞ்சிபுரம் அருகே உள்ள திருப்பருத்திக்குன்றம் என்ற ஊரில்
திரைலோகிய நாதர் கோயில் மற்றும் சந்திர பிரபா கோயில் என
இரண்டு கோயில்கள் உள்ளன . கிபி 1387 ஆம் ஆண்டில் இந்த இரண்டு கோயில்களுக்கும் பொதுவாக அமையும் வகையில் அகலமான மகா மண்டபம் ஒன்று விஜயநகர மன்னர் புக்கனது அமைச்சர் இருகப்பா என்பவரால் கட்டப்பட்டு இருக்கிறது இதனை சங்கீத மண்டபம் என்றழைப்பர் .
வாமன முனிவரின் (மல்லிஷேணர்) என்ற சமண முனிவர் சமஸ்கிருதம் , பிராகிருதம் , தமிழ் மொழிகளில் நூல்களை எழுதியுள்ளார் . இவரின் சீடரான புஷ்பசேன முனிவரிடம் , விஜய நகர அரசரான மூன்றாம் புக்கரிடம் படத்தலைவரும் மந்திரியுமான விளங்கிய இருகப்பர் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார் . குருவின் ஆணைக் இணங்க திருப்பருத்திக்குன்றத்தில் சங்கீத மண்டபம் கட்டினார் . 61 அடி நீளம் கொண்ட இம்மாண்டபத்தில் ஒரு தூணில் உள்ள உருவம் இவர் உருவம் என்று கூறப்படுகிறது . இவை புதிய விஜயநகர பாணியில் கட்டப்பட்டு இருந்தாலும் இங்கு காணப்படும் ஓவியம் சிறப்பு மிக்கது . ஓவியக் காட்சியை காணும் முன்பு தீர்த்தங்கரர்கள் பற்றியும் சிறிது அறிந்து கொள்வோம் .

சமண சமயத்தில் தீர்த்தங்கரர்களே முக்கியமானவர்களாக கருதப்படுகிறார்கள் . 24 தீர்த்தங்கரர்கள் ஒருவருக்கு பின் ஒருவராக தோன்றி மக்களுக்கு போதனை வழங்கினர் . இம்மத்தை பொறுத்த அளவில் இவ்வுலகில் வாழும் எல்லா உயிர்களுக்கும் ஆன்மா உள்ளது , அவை முழுமை பெற்ற ஆன்மா , முழுமை பெற ஆன்மா என்று இருவகையாக பிரிக்கப்படுகிறது . . தேவர்கள் , மனிதர்கள் , விலங்குகள் , தாவரங்கள் , பறவைகள் , காற்று , நீர் ஆகியவை முழுமை பெற ஆன்மாக்கள் என்ற வகையை சேரும் . இவற்றில் தீர்த்தங்கரர்கள் முற்பிறவி வினைகளால் மனிதனாகப் பிறந்து ,பின் தன் வினைகளை கலைத்து முழுமை பெற்ற ஆன்மாவாக உருவெடுக்கிறார்கள் . சமண சமயத்தின் கோட்பாடு படி பிற உயிர்க்கு செய்யும் தொண்டு மூலம் முற்பிறவி கர்ம வினைகளை போக்க முடியும் . எனவேதான் தீர்த்தங்கரர்களின் வாழ்க்கை முக்கிய வினையாக கருதப்படுகிறது . சமண சமயத்தில் தீர்த்தங்கரர்கள் அனைவரும் மனிதனாகப் பிறந்து மக்களோடு மக்களாக வாழ்ந்து வினையை அகற்றிய பின் தீர்த்தங்கரர்களாக உருவெடுகிறார்கள் . தீர்த்தங்கரர்கள் அனைவரும் அரச குடும்பத்தில் பிறந்து , கல்வியறிவு மற்றும் போர்க்கலைகள் கற்று , திருமணம் மற்றும் மக்கள் செல்வம் பெற்று சிறந்த வாழ்க்கை நடத்தியவர்கள் . மற்றவர்களின் துன்பத்தைக் கண்டு ஒதுங்காமல் அவர்களுக்கு அறவழிப்படுத்தி துன்பம் போக்கி நல்வழிப்படுத்தி நல் வாழ்க்கை வாழ வழி படுத்துவார்கள் . தீர்த்தங்கரர்களின் பிறப்பு என்பது அவரின் தாய்க்கு முன்னரே அறிவிக்கப்படும் . அதாவது 14 மங்களப் பொருட்களை தாய் தன் கனவில் காண்பதன் மூலம் அவரின் தாய்விற்கு தீர்த்தங்கரரின் பிறப்பு முன்னறிவிக்கப்படுகிறது . அரச குடும்பத்தில் பிறந்தாலும் குதிரைகள் , யானைகள் ஆகியவற்றுடன் , பயணத்திற்கான பல்லாக்கு குடை மற்றும் பரிவாரங்களை துரக்கிறார்கள் . இவ்வாறு பிறந்த இரண்டாவது தீர்த்தங்கரரான ரிஷப தேவரின் வாழ்க்கையை முழுச்சித்திரமாக இக்கோயிலில் வரையப்பட்டுள்ளதை காண்போம் .
ரிஷப தேவரின் முற்பிறப்பு பற்றியும் , பெற்றோர் குறித்தும் அவர் வளர்ந்து தீர்த்தங்கரராக மாற்றம் பெற்ற பின் ஏற்படும் நிகழ்வுகள் முதலியவற்றை வலது பக்கத்திலிருந்து இடது புறமாக தொடர்ச்சியான முறையில் தீட்டியுள்ளனர் . நாதி மகாராஜாவுக்கும் அவர் மனைவி மாரு தேவிக்கும் பிறந்தவர் தான் ரிஷப தேவர் . இவரின் பிறப்பை கனவு மூலம் அவரின் தாய்க்கு அறிவிக்கப்பட்டது .தாயின் கனவில் வரும் 14 பொருட்களில் முதல் பொருளாக காளை வந்ததால் இவருக்கு ரிஷப தேவர் என்று பெயர் . இவரின் பிறப்பின் போது தேவலோக மகளீர் பணிவிடை செய்தனர் . தேவர்களால் இவருக்கு ஜென்ம அபிஷேகம் செய்யப்பட்டது . இவர் சுமந்தா , சுமங்கலா என்ற இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டார் . இளவரசராக இருந்த இவர் அரசனாக அரியணை ஏறினார் . இறையருள் பெற்ற அரசனாக திகழ்ந்த இவர் மக்களுக்கு பல நன்மைகளை செய்தார் . இவர் ஆட்சியில் நாடு தலைசிறந்த நாடாக திகழ்ந்த போதும் ,மக்களின் துன்பம் கண்டு வருந்தினார் . அப்போது அவர் பிறப்பின் நோக்கத்தை உணர்ந்து தன் நாட்டை தன் மக்களுக்கு பங்கிட்டு அளித்துவிட்டு , காட்டிற்குச் சென்று கடும் தவம் மேற்கொன்டார் . பின்பு பல இடங்களுக்கு சென்று மக்களின் வாழ்க்கை சிறக்க அறவழிகளை போதித்தார் . இவரின் முற்பிறவி வினைகள் நீங்கி ஞானம் பெற்றார் . தேவர்கள் இவரின் போதனைகள் மக்களுக்கு சென்று சேர சமவசரணம் அமைத்தனர் .

இவற்றை ஓவியர் தொகுப்பில் நாம் காணலாம் . ஒரே உருவத்தில் எட்டு தேவர்கள் ரிஷப தேவர் முன் வரிசையாக நிற்கின்றனர் . ரிஷப தேவர் வலது கையை நீட்டியவாறு மேடையின் மேல் உள்ள சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார் . ஒரு பணியால் அவருக்கு சாமரம் வீசிக் கொண்டிருக்கிறார் .தேவர்கள் ரிஷப தேவரிடம் அவர் உலகப்பற்றை துறக்க வேண்டி நேரம் வந்துவிட்டது என்பதை வலியுறுத்தும் நிகழ்வை ஓவியம் சித்தரிக்கிறது .


அடுத்த படம் ரிஷப தேவர் அரண்மனையை விற்று வெளியேறி துறவனும் மேற்கொள்ள பள்ளத்தில் அவர்கள் தூக்கிச் செல்லப்படுகிறார் . அரசு சின்னங்களான கொடி , குடை , ஆளவட்டம் ஆகியவற்றை சுமந்து கொண்டு பணியாளர்கள் குழு ஒன்று செல்கிறது . இரண்டு இசைக் கலைஞர்கள் , ஒரு நாதஸ்வரம் ஒதுபவர் மற்றும் மேளம் அடிப்பவர் ஆகியோர் ஊர்வளத்தின் முன்னே வழி நடத்திச் செல்கின்றனர் . அவர்கள் காட்டை அடைந்ததை உணர்த்துவதற்காக படங்களில் மரங்களின் வரையப்பட்டிருக்கிறது .


அடுத்து மூன்றாவது ஓவியத்தில் இரண்டு நிகழ்ச்சிகள் வரையப்பட்டுள்ளன . இடது பக்கம் ரிஷப தேவர் ஒரு மேடையில் அமர்ந்திருக்கிறார் . அவர் கலைத்து ஒதுக்கிய ஆடைகள் ஒரு பக்கம் குவியலாக வைக்கப்பட்டுள்ளது . ஒருவர் துறவியாவதற்கு செய்ய வேண்டிய மிக முக்கிய சடங்கான தன் தலைமுடியை தானே பிடுங்கிக் கொள்ளும் பஞ்ச முத்தியயா என்னும் வலியும் வேதனையும் நிறைந்த சடங்கை தானே செய்து , ஐந்து கைப்பிடி அளவு தலைமுடியை பிடுங்குகிறார் . தேவர்கள் ரிஷப தேவரின் முழு தலைமுடியை அகற்றாமல் விட்டு விட கேட்டுக் கொண்டார்கள் . ஒரு துறவிக்கு தனக்கென எந்த ஒரு விருப்பமும் இருக்கக் கூடாது ,அதே நேரத்தில் அன்பிற்குரியவர்கள் சொல்வதை மறுக்கவும் கூடாது என்பது சமணத்தின் கொள்கை . எனவே ஒரு கற்றை முடியை அகழாமல் குடுமியாக விட்டார் . எப்போதும் அவர் அருகில் இருந்து அவரை பின்பற்றும் கச்சா , மகா கச்சா இருவரும் மற்றும் 4000 மன்னர்கள் தலைவர்களும் அவருடன் துறவருடன் மேற்கொண்டனர் சமண பாரம்பரிய படி இவர்தான் ஆரம்பத்தில் துறவறம் ஏற்றவர்கள் ரிஷப தேவரிடம் காணப்பட்ட மன உறுதியும் வலிமையும் இவர்களிடம் இல்லை குளிர்காலம் வந்தபோது மரப்பட்டையை பயன்படுத்தி தங்களுடைய மூடிக்கொண்டனர் . பசி ஏற்பட்டபோது காய்களை பசித்தனர் .



அடுத்து நான்காவது ஓவியத்தில் இரு நிகழ்ச்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளது. ரிஷப தேவர் இரு கரங்களை தொங்கவிட்ட சுயோத்சரக தோற்ற நிலையில் , நிமிர்ந்து நின்று ஆழ்ந்த தியானத்தில் இருக்கிறார் . அவருக்கு பணி செய்ய இரு தேவர் அவர் பாதத்தருகே அமர்ந்திருக்கிறார்கள். துறவறம் ஏற்ற கச்சா , மகா கச்சா புதல்வர்கள் இருவரும் தொலைதூரத்தில் இருந்து பயணம் செய்து வந்து , அவர்களது துறவுக் கோலத்தைக் கண்டு ,நாட்டை தங்களுக்கு உரிய பங்கினை பிரித்து தரும்படி கேட்கின்றனர் . துறவரும் மேற்கொள்ள காரணமாக அமைந்த நிகழ்ச்சி அவர்களுக்கு விளக்குகிறார்கள், சகோதரர்கள் இருவரும் ரிஷப தேவரை தங்களுக்கு நாட்டை பிரித்துக் கொடுக்க வேண்டிக் கொள்கிறார்கள் . இந்த ஓவியத்தில் வரையப்பட்டுள்ள மரங்களின் தோற்றம் மாறுபடுகிறது . இந்த நிகழ்ச்சி ஒரு தென்னந்தோப்பில் நடப்பது போல் காட்டப்பட்டுள்ளது . தலையின் பின்பக்கம் படம் விரித்த பாம்பு காட்சியளிக்க நாக அரசனாகிய தர்மேந்திரன் , ரிஷபதேவரின் தியானத்தை கலைக்க வேண்டாம் என்று கூறுகிறார் . . தற்போது ரிஷப தேவரின் நாட்டை ஆண்ட கொண்டிருக்கும் பரதரிடம் அவர்களை அழைத்துச் செல்வதாக கூறுகிறார் . பரதர் மூலம் நாட்டை பெற்ற பின்னர் தன்னைத் தலைவனாக இருக்க வேண்டும் என்று தர்மேந்திரா கூறுகின்றார் .நாமியும் விதாமியும் அதை ஏற்க மறுத்து , ரிஷபதேவர் ஒருவரே தங்கள் தலைவர் என்று கூறினார்கள். அவர்கள் கூறிய பதிலைக் கேட்ட தர்மேந்திரர் மகிழ்ச்சியடைத்து விண்ணுலகில் பல நகரங்களை அவர்களுக்குப் பரிசாகக் கொடுப்பதாகச் சொல்கிறார். வலப்பக்கத்து ஓவியம் தர்மேந்திரா தனது புஷ்பக விமானத்தில் அவ்விருவரையும் விண்ணுலகிற்கு அழைத்துச் செல்லும் காட்சியைச் சித்தரிக்கின்றது.


ஐந்தாவது பிரிவில் இடப்பக்கத்தில் நாமியின் முடிசூட்டு விழாவும் வலப்பக்கத்தில் வினாமியின் முடிசூட்டு விழாவும் வரையப்பட்டுள்ளன. இவ்விரு விழாக்களும் இரு வேறு நாடுகளின் தலைநகரங்களில் நடைபெறுகின்றன. விழா மேடையைச் சுற்றிலும் கோட்டை உள்ளது. மேகங்கள் மேல் தேவர்கள் நிற்கும் காட்சி விழாக்களின் தெய்வீகத் தன்மையை உணர்த்துகிறது.




ரிஷபதேவர் நகரத்திற்குத் திரும்பி வந்து சார்யா எனப்படும் முறையில் மௌனமாகப் பிச்சை ஏற்றதை ஆறாவது பிரிவு விவரிக்கிறது. ரிஷபதேவர் ஒரு திகம்பர முனிவர். எனவே அவர் பிச்சைப் பாத்திரம் எதனையும் கைகளில் ஏற்றிச் செல்ல முடியாது. ஏந்திய கரங்கள் கொள்ளும் அளவு உணவிலை உண்டு வாழ்ந்தார். அவர் நகரத்துக்குள் வந்தபோது ஓர் அரசனுக்குப் பரிசாக அளிக்கப்படத்தக்க யானைகள், குதிரைகள், ஆடைகள் ஆகியவற்றையும் இளம்பெண்களையும் பக்தர்கள் காணிக்கையாகக் கொண்டு வந்தனர். ரிஷபதேவர் அவை எதையும் பெற்றுக்கொள்ளாமல் காட்டிற்குத் திரும்பினார். பல ஓவியங்களில் அவருக்குக் கொண்டு வரப்பட்ட காணிக்கைப் பொருள்களும் அவற்றைக் கொண்டுவந்தவர்களும் வரையப்பட்டுள்ளனர். வலப்பக்கத்தில் ரிஷபதேவர் காட்டிற்குத் திரும்பி வந்து தனது தியானத்தைத் தொடர்ந்த காட்சி தீட்டப்பட்டுள்ளது.
ரிஷபதேவருக்கு அவருக்கு ஏற்ற உணவை வழங்க தேவர்கள் முடிவு செய்தனர். அவருக்கு உணவளிக்கும் பெரும் பேற்றிற்கு உரியவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவன் ஸ்ரேயன்குமாரன்." தேவர்கள் அவன் ஒரு விந்தையான கனவு காணும்படி செய்தனர். அவன் அக்கனவைத் தன் சகோதரனிடம் கூறியபோது, அவன் ஒரு ஜோதிடனிடம் கண்டு கனவின் விளக்கத்தைக் கேட்க ஆலோசனை கூறினான். ஜோதிடர் ரிஷபதேவர் பிச்சை ஏற்க வருகிறார் என்பதைக் கனவு உணர்த்துவதாகக் விளக்கினார்.

ஏழாவது ஓவியத்தில் , ஸ்ரேயன்குமாரன் அரண்மனையில் இருக்கும் காட்சி அவன் தன் படுக்கையில் படுத்திருக்கிறான். ஒரு பணியாள் விசிறி வீச, மற்றொருவன் கால்களைப் பிடித்து விடுகிறான். அடுத்த ஓவியம் அவன் தன் சகோதரனைக் கலந்தாலோசிக்கும் காட்சி. வலது பக்கம் கடைசியில் ஜோதிடர் கனவுக்கு விளக்கம் கூறும் காட்சி வரையப்பட்டுள்ளது.




எட்டாவது ஓவியத்தில் , இடப்பக்கத்தில் பணியாளன் ஒருவன் ரிஷபதேவரின் வருகையை அரண்மனையில் இருக்கும் ஸ்ரேயன் குமாரனுக்கும் அவனுடைய சகோதரனுக்கும் அறிவிக்கும் காட்சி தீட்டப்பட்டுள்ளது. வலப்பக்க ஓவியம் சகோதரர்கள் ரிஷபதேவருக்கு உணவு வழங்குவதையும் பணிவுடன் அவரை வணங்குவதையும் சித்தரிக்கின்றது. சமணத் துறவியர்களுக்கு வழங்குவதற்கு ஏற்ற கரும்புச் சாற்றை ஸ்ரேயன்குமாரன் ரிஷபதேவருக்கு அளிக்கிறார்.



source தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு

No comments:

Post a Comment