Friday, October 2, 2020

பூம்பாறை , போகர் நவபாஷணசிலை , கொடைக்கானல்

 மேற்கு தொடர்ச்சி மலையின் இளவரசியான கொடைக்கானலில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பூம்பாறை என்ற கிராமம் . இங்குதான் குழந்தை வேலப்பர் கோயில் உள்ளது . சித்தர் போகர் இரண்டு நவபாஷண  சிலையை உருவாக்கியதாகவும் , அதில் ஒன்று பழனியில் உள்ள  தண்டாயுதபாணி என்றும் , மற்றொன்று பூம்பாறையில் உள்ள  குழந்தை வேலப்பர் என்றும் கூறப்படுகிறது . இந்தியாவிலேயே இரண்டு கோயில்களில் மட்டும் தான் நவபாஷண சிலைகள் உள்ளதாக  கூறப்படுகிறது . இங்கு உள்ள குகையில் தான் போகர் தங்கி இந்த நவபாஷண சிலைகள் செய்ததாகவும்  இன்றும் இந்த இடம் போகர் கட்ஷம் என்று அழைக்கப்படுகிறது . ஒன்பது கொடிய விஷங்களை கொண்டு செய்யப்பட்டது நவபாஷண சிலை . பத்து கொடிய விஷங்களை கொண்டு செய்யப்பட்டது தசபாஷனம் .பழனியில் உள்ளது நவபாஷண சிலை என்றும் இங்குள்ளது தசபாஷன சிலை என்றும் மாற்று கருத்து கூறப்படுகிறது . 

இங்கு சுமார் 800 ஆண்டுகள் பழமையான கோயில் சிதிலடைந்த நிலையில் சில தூண்கள் மட்டும் எஞ்சியிருக்கிறது .  இங்கிருந்த தூண்களைக் கொண்டு கொண்டு தற்போது உள்ள கோயில் கட்டப்பட்டுள்ளது . அங்கு இருந்த முருகன் சிலையை தற்போதுள்ள கோயில் பிரதிஷ்டை செய்துள்ளனர் . கோயில் சுவற்றில் புடைப்பு சிற்பங்கள் பல உள்ளன .  அருணகிரிநாதரால் பாடப்பட்ட தலமாகும் .

 பழமையான ஊர் என்பதை உறுதிசெய்யும் வகையில் சுமார் 3000 ஆண்டு பழமையான ஈமச் சின்னங்கலான இரண்டு நெடுங்கற்கள் உள்ளன .

இக்கல்லை மக்கள் காவல் தெய்வங்கள் என்ற பெயரில் வழிபடுகின்றனர் .



















No comments:

Post a Comment