Friday, September 15, 2023

Shyam Saran Negi

 ஷியாம் சரண் சுகி 

ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற்ற சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற முதல் தேர்தலில்  வாக்களித்த முதல் நபர் ஷ்யாம் சரண் சுகி நெகி . இவர் இமாச்சல பிரதேசத்தில் ஜூலை 1 , 1917ம் ஆண்டு  பிறந்தவர் . சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் பிப்ரவரி 1952ம் ஆண்டு நடைபெற்றது .  இமாச்சலப் பிரதேசத்தில் பிப்ரவரி மாதம் மிக மோசமான வானிலை காரணத்தாலும் , அதிக பனி பொலிவு இருக்கும் காரணத்தலால் அங்கு மட்டும் ஐந்து மாதங்களுக்கு முன்பே அதாவது அக்டோபர் 25 1951ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது . ஆசிரியராக பணிபுரிந்த நேகி கால்பா கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது முதல் வாக்கை செலுத்தினார் . அதன் மூலம் சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலில் வாக்களித்த முதல் வாக்காளர் என்ற பெருமையைப் பெற்றார் . கடந்த 2022 ஆம் ஆண்டு 105 வயதில் இவர் காலமானார் ,  அதுவரை இவர் 34 முறை வாக்களித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment