காப் என்பது சட்லஜ் நதியின் கரையில் அமைந்திருக்கும் ஒரு சிறிய கிராமம் . இமயமலையின் இரண்டு பெரும் ஆறுகளான சட்லெஜ் மற்றும் ஸ்பிட்டி ஆறுகள் ஒன்றோடு ஒன்று இணையம் இடம் தான் காப் . சட்லெஜ் ஆறு திபெத்திய மானசரோவரில் உள்ள ஏரியில் உற்பத்தியாகி ஏராளமான இமயமலை பள்ளத்தாக்குகளை கடந்து பஞ்சாப் வரை பாய்கிறது . பஞ்சாபில் பாயும் ஐந்து நதிகளில் மிகப்பெரிய நதி சட்லெஜ் . இதில் உற்பத்தி செய்யும் மின்சாரம் வடஇந்தியா தொழிற்சாலைகளின் முக்கிய ஆதாரமாக திகழ்கிறது .
இமயமலையின் பனிப்பாறைகள் உருகி ஸ்பீட்டி நதியாக பாய்கிறது . இமயமலை மக்களின் குடியிருப்புகள் எல்லாம் இந்த ஸ்பீட்டி நதியை ஒட்டியே அமைந்திருக்கிறது . இந்த இரு பெரும் நதிகள் சங்கமம் ஆகும்பள்ளத்தாக்கின் மேலே அமைக்கப்பட்டுள்ள பாலம் தான் காஃ பாலம் (Khab Bridge ) . இந்த இரு நதிகளும் பெரிய மலைகளுக்கு நடுவே உள்ள பள்ளத்தாக்கில் சங்கமம் ஆகிறது அதனால் இரு மலைகளுக்கு நடுவே நடக்கும் இந்த சங்கமத்தை காண இரண்டு கண்கள் போதாது . இந்தப்பாலம் இரும்பினால் மிக உறுதியாக கட்டப்பட்டுள்ளது . இங்கு நின்று புகைப்படம் எடுக்காத வண்டிகளே இல்லை . இதற்காண பயண சாலை பாதைகளும் மலைகளை குடைந்தே அமைத்திருப்பதை காண முடிகிறது . அமைதியான அழகான இடத்தில் இரு நதிகளின் சங்கமத்தை வாழ்வில் ஒரு முறையேனும் காண வேண்டும் .
சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ReplyDeleteநன்றி
Delete