Monday, October 14, 2019

கர்நாடகத்தில் சமணம் - குண்டல்பேட்

  
குண்டல்பேட்லிருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கேலசூர் (kelasur ) . குண்டல்பேட் சுற்றி  பல இடங்களில் சமண கோயில்கள் உள்ளன .அவற்றுள் ஒன்று kelausur என்னும் ஊரிலுள்ள சந்திரபிரபா தீர்த்தங்கரர் கோயில்.    கிபி 8-9ம் நூற்றாண்டில் (Acharya virasena) ஆச்சாரிய வீர சேனா (கி. பி 792-853 )இந்த ஊரில் வாழ்ந்துள்ளார்.இவர்  பல சமண நூல்களுக்கு விளக்கங்கள் அளித்துள்ளார் .
வடக்கு நோக்கி அமைந்துள்ள கோயிலின் முன் மண்டபத்தில் உள்ள தூண்களில் ஹொய்சால பாணியில்  உள்ளன .  அர்த்தமண்டபத்தில் பளிங்கு கல்லால் ஆன நின்றநிலையில் சந்திர நாதா சிலை உள்ளது .சந்திர நாதவின் இடதுபுறம் பிரம்மயக்க்ஷ ,பார்வதி , குஷமந்தினி ஆகியோரின் சிலைகள் உள்ளன . கோயிலின் பின்புறம் ஆறு அடி நீளம் உள்ள பார்சுவநாதர் சிலை உள்ளது . விரதம் இருந்து உயிர் நீத்த நீத்த நிசிதிசை  சிலைகளும் உள்ளன.
ஆச்சாரிய வீர சேனா சேனா இந்த இடத்தை உதய கோபுர( Udyogapura) என குறிப்பிடுகிறார் . இந்த இடம் சமணர்களின் கிராமங்களுக்கு தலைநகராக விளங்கியது என்றும் , இங்கு மொத்தம் 600 வீடுகள் இருந்தன என்றும் குறிப்பிடுகிறார் . தமிழ் கல்வெட்டுக்கள் இந்த ஊரை kellasuppulaicheri  , கங்கைகொண்ட சோழ வளநாட்டு முடிகொண்ட சோழமண்டலம் என்றும் குறிப்பிடுகிறது .
தமிழ் ,கன்னட ,சமஸ்கிருத கல்வெட்டுக்கள் இங்கு உள்ளன.
பன்னிரண்டாம் நூற்றாண்டில் விக்கிரமசோழன் (சோழகங்கன்) ( கி.பி 1118 - 1135) வழங்கிய  தானம் பற்றிய தமிழ் கல்வெட்டுகள் இரண்டு உள்ளன .13ம் நூற்றாண்டில் ஹொய்சால மன்னன் வீர நரசிம்ம தேவனின் (கி.பி 1220 - 1235) கன்னட கல்வெட்டுகள் உள்ளன . பத்தொன்பதாம் நூற்றாண்டில் மைசூர் அரசர் மூன்றாம் கிருஷ்ணராஜ உடையார்  இந்த கோயிலை திருப்பணி செய்துள்ளார் என்பன பற்றிய குறிப்புகள் உள்ளன . 














No comments:

Post a Comment