Friday, December 15, 2017

dzogchen monastry , udayarpalayam,sathyamangalam

ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் வனப்பகுதி ஆசனூரில் இருந்து கொள்ளே கால் செல்லும் வழியில் உள்ளது உடையார்பாளையம் . இங்கு தான் ஸோங் ஜென் (Dzogchen monastery) என்னும் திபெத்திய அகதிகள்  குடியிருப்பு உள்ளது.

முதலில் திபெத் அகதிகள் இங்கு வந்த கதையைப் பார்ப்போம். திபெத் என்பது நடுவண் ஆசியாவில் உள்ள மேட்டுச் சமவெளியில் அமைந்த ஒரு நாடாகும் . இந்நாட்டைபூமியின் கூரை என்று அழைப்பர் . அழகான இந்நாட்டின்  பெரும்பகுதி தற்போது சீனாவின்  ஆக்கிரமிப்பு மற்றும் ஆதிக்கத்தில் "காலனி நாடாக" இருந்து வருகிறது.

1950களில் திபெத் நிலப்பரப்பை சீனப்  ஆக்கிரமித்தபோது, அப்போதைய திபெத் சமய அரசியல் தலைமையும், குறிப்பிடத்தக்க பொதுமக்களும் அகதிகளாக இந்தியாவிற்குள் வந்தனர். இந்திய அரசு அவர்களுக்கு வாழவும், அவர்களுடைய சமய பண்பாட்டைப் பேணவும் வசதி செய்து கொடுத்தது. திபெத்தில் ஆட்சியாளரும் மதத்லைவருமான தலாய் லாமா தன் ஆதாரவாளர்களுடன் முதன்முதலில் வந்த இடம்  இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலா . பின்னர் இந்திய அரசு அவர்களை இந்தியாவெங்கும் குடியமர்த்தியது.

 1972ல் மத்திய அரசும் கர்நாடக அரசும்  இணைந்து கொள்ளேகால் பகுதியில் திபெத்திய குடியிருப்பை உருவாக்கியது . இதில் 23 கிராமங்களும்,  ஐந்து மடாலயங்கலும் உள்ளன . அவற்றில் மையமாக உள்ளது ஸோங் ஜென் (Dzongchen monastery) மடாலயம்.

ஸோங் ஜென் (Dzongchen monastery) மடாலயம் திபெத்திய கட்டிட அமைப்பில் உள்ளது . மடாலயத்தின் மையமாக அழகான புத்தர் சிலையும் இடப்பக்கம் பெண் தெய்வாமான தாராதேவியும் , வலப்பக்கம் பத்மசம்பவரும் உள்ளனர் . நிறைய பௌத்த நூல்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது . தலாய்லாமா அமர்ந்திருந்த  இருக்கை இங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இம்மடாலயத்தில் நிறைய திபெத்திய மாணவர்கள் படிக்கின்றனர் . ஆங்கிலம் , திபெத் மொழி மற்றும் திபெத்திய வரலாறு பயிற்றுவிக்கப்படுகிறது . இவர்கள் படிப்பு முடிந்தவுடன்  தங்கள் விருப்பம் போல் எங்கும் செல்லலாம் அல்லது துறவி ( monk) ஆகலாம் .

இங்கு உள்ள மக்கள் நல்ல செல்வ செழிப்புடன் தன் "தாய் மொழி" மட்டுமே பேசி வாழ்கின்றனர் .

(குறிப்பு : இங்கு சென்று வந்தபின் தமிழீழ அகதிகள் முகாம்தான் என் கண்முன் நிழலாடியது..... ஒரு மொழியின்பால் வஞ்சிக்கப்படும் ஒரே இனம்...!)

#konguhistory 50










3 comments: