Wednesday, October 9, 2019
ஸ்ரீ அர்கேஸ்வரா என்னும் சிவன் கோயில், ஹூங்கனூர் கிராமம் , கர்நாடகா
சாம்ராஜ் நகரில் இருந்து 20 km தொலைவில் உள்ளது ஹூங்கனூர் கிராமம் . இங்கு கி.பி 11-12ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான ஸ்ரீ அர்கேஸ்வரா என்னும் சிவன் கோயில் ஒன்று உள்ளது . சோழர் காலத்தைச் சேர்ந்த இக்கோயிலில் கல்வெட்டுகள் உள்ளன . கோயில் முழுவதும் சுண்ணாம்பு பூசப்பட்டு உள்ளதால் கல்வெட்டை சரியாக படிக்க முடியவில்லை . தவ்வை/ஜேஷ்டா சிலை ஒன்று மரத்தின் கீழ் உள்ளது .
Wednesday, September 4, 2019
பாலி , இந்தோனேசியா puratirtaempul , bali
இந்தோனேசியாவின் அழகிய தீவுகளில் ஒன்று பாலித் தீவு . இந்தோனேசியாவின் 33 மாகாணங்களில் இதுவும் ஒன்று . இத்தீவின் தலைநகர் தென்பசார் (denpasar ) .
கடற்கரையையொட்டியே விமான நிலையம் அமைந்துள்ளதால் விமானம் தரையிறங்கும்போது கடலில் இறங்குவது போன்றே உள்ளது .
பாலி தீவில் இந்துக்களே அதிகம் வாழ்கின்றனர் . ராமாயணம் மகாபாரதம் சம்மந்தமான சிலைகள் தீவு முழுவதும் உள்ளது . விநாயகர் சிலைகளும் ஆங்காங்கே உள்ளன . "வாலி "என்பதே "பாலி" என்று மருவியதாக கூறப்படுகிறது . அனேகமாக எல்லா வீடுகளிலும் கோயில்கள் கட்டி வழிபாடு செய்கிறார்கள் . தினமும் மூன்று வேளையும் வழிபாடு நடக்கிறது . அவரவர் தகுதிக்கேற்ப சிறிதாகவோ பெரிதாகவோ கோயில் கட்டியிருக்கிறார்கள் . இதை பிரைவேட் கோயில் ( private temples ) என்கிறார்கள் .கோயில்களால் இத்தீவு நிரம்பி இருப்பதால் ஆயிரம் கோயில் தீவு என்று அழைக்கிறார்கள் .
Pura tirta empul என்னும் வரலாற்று சிறப்புமிக்க கோயில் இங்கு உள்ளது . (World heritage site ) கோயிலில் இயற்கையாக அமைந்த நீரூற்று இருக்கிறது. அதில் வரும் நீரில் தீர்த்த நீராடுகிறார்கள் . புனித நீராடலால் உடல் ஆரோக்கியமும் செல்வமும் கிட்டும் என்று நம்பப்படுகிறது . இங்குள்ள கோயில்களின் உள்ளே செல்ல ஆண் பெண் இருவருமே வேஷ்டி அணிந்து தான் செல்ல வேண்டும் . கோயிலுக்கு வெளியே வேட்டியை இலவசமாகத் தருகிறார்கள் . சுற்றுலா பயணிகளை ஒரு எல்லை வரை மட்டுமே
பாலி , இந்தோனேசியா Nusa dua Bali Indonesia
பாலி , இந்தோனேஷியாவின் அழகிய தீவு . இங்கு முஸ்லிம்களும் இந்துக்களும் அதிகம் வாழ்கிறார்கள் . அவர்களுக்கு அடுத்து கிறிஸ்தவர்களும், புத்த மதத்தைச் சேர்ந்தவர்களும் வாழ்கிறார்கள் . Nusa dua என்னும் இடத்தில் ஜெகநாதர் கோயில் , கிறிஸ்துவ தேவாலயம் , பள்ளிவாசல் , புத்தர் கோயில் ஆகிய அனைத்தும் ஒரே இடத்தில் அடுத்தடுத்து தடுப்பு சுவர் கூட இல்லாமல் உள்ளது . அனைத்து மக்களும் ஒற்றுமையாக வந்து வழிபாடு செய்கிறார்கள்.
மர வேலைப்பாடுகளால் ஆன சிலைகளும் கண்ணாடி உலோகத்தாலான பொருட்கள் ,வெள்ளி என ஷாப்பிங் செய்ய பாலித் தீவில் நீறைய இருக்கிறது .
அடுத்து ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அங்கு நிறைய மக்களுக்கு டீ என்றால் என்னவென்றே தெரியவில்லை . வாசனையான காபித்தூள் விற்கிறார்கள் , வாங்கச் சென்றால் சைவ காப்பியா? அசைவ காப்பியா? என்று கேட்கிறார்கள் . அசைவ காப்பி என்றால் மங்கூஸ் என்ற விலங்கிற்கு காபி கொட்டையை உணவாகக் கொடுத்து , அது உண்டு கழிக்கும் மலத்தில் இருந்து எடுத்த காபி கொட்டையை அரைத்து கொடுப்பதாம் .
அங்குள்ள சமையல் சிலிண்டர்கள் சுமார் இரண்டு கிலோ மட்டுமே உள்ளன . அதுவும் நம் ஊரில் ஊரில் தண்ணீர் விற்பது போல பெட்டிக் கடையில் கூட கிடைக்கிறது . அங்கு பெட்ரோல் விலை வெறும் 30 ரூபா மட்டுமே . அதனால் எந்த டிரைவர்களும் வண்டி என்ஜினை நிறுத்துவதில்லை , எப்போதும் ஏசி போட்டு அமர்ந்திருப்பதை பார்க்கவே பொறாமையாக உள்ளது .
அடுத்து அங்கு உள்ள ஹோட்டல்கள் எங்கு சென்றாலும் குடிதண்ணீர் இலவசமாக தருவதில்லை . Buffet lunch (1300 /person ) சாப்பிட்டாலும் தண்ணீருக்கு தனியாக காசு கொடுக்க வேண்டியுள்ளது . தண்ணீருக்கு அடுத்து மிளகு தான் அங்கு டிமாண்ட் . ஹோட்டல் சென்று மிளகுப்பொடி கேட்டால் ஒரு சிறிய பாக்கெட் மட்டுமே தருகிறார்கள் . அதுவும் காரமில்லாத பொடி . நம் நாட்டின் மீது இந்த மிளகுக்காகத்தானே நிறைய படையெடுப்பு நடந்தது .
தண்ணீர் விளையாட்டுகள் மசாஜ் சென்டர்கள் என சுற்றுலா செல்ல அமைதியான அழகான தீவு , பாலி.
Subscribe to:
Posts (Atom)






















































