Thursday, December 3, 2020

கரூர் குடைவரை

 கரூர் நகருக்குத் தெற்கே நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தான்தோன்றிமலை.  தானாக தோன்றிய மலை என்பதால் தான்தோன்றி மலை எனவும் பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது . 


இங்கு அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இது ஒரு முற்றுப்பெறாத குடைவரை கோயில் ஆகும்.  கோயில் மேற்கு நோக்கி உள்ளது . கருவறையில் திருமாலுக்கு நெடிய நின்ற திருமேனி பின் சுவரில் வெட்ட ஆரம்பித்து முகம் மட்டுமே முடிவடைந்த நிலையில் உள்ளது (உடற்பகுதி இல்லை) .  கருவறைக்கு வெளியே இருபுறமும் மிகப்பெரிய இரு சிற்பங்கள் முடிவுறாத நிலையிலும் மேலே பூதவரி மிக அழகாக செதுக்கப்பட்டுள்ளது. 

இது கொங்குநாட்டு குடவரைகளுள் மிகவும் பிரசித்தி பெற்றது எனலாம். 


டாக்டர் இரா.கலைக்கோவன் மற்றும் முனைவர். நளினி ஆகியோர் இந்த குடைவரையை பல்லவர் கலைப்பாணியாக தமது "பல்லவர் அதியர் பாண்டியர் குடைவரைகள்" நூலில் தொகுத்துள்ளமையை காண முடிகிறது. ஆகவே அவரின் ஆய்வுகளின் அடிப்படையில் இதனை பல்லவர் குடைவரையாகக் கருதலாம்.


இந்த கோவில் 1200 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான குடைவரைக் கோவிலாகும். இந்தக் கோவிலுக்கு "தென்திருப்பதி" என்ற சிறப்பு பெயரும் உண்டு.


இங்கு கல்வெட்டுக்கள் ஏதும் இல்லை.


நன்றி : முனைவர் நளினி, 

டாக்டர் இரா. கலைக்கோவன்










No comments:

Post a Comment