Showing posts with label நடுகற்கள். Show all posts
Showing posts with label நடுகற்கள். Show all posts

Wednesday, September 8, 2021

புலி குத்திக்கல், பொங்குபாளையம், அவினாசி, திருப்பூர் மாவட்டம் .

                             பழங்கற்கால மனிதன் வேட்டைச் சமூகமாக வாழ்ந்து வந்தான் . பரிணாம வளர்ச்சியினாலும் மனித அடர்த்தி பெருக்கத்தாலும் இனக்குழுவாக பிரிந்து கால்நடை சமூகமாகவும் மாறத் தொடங்கினான் . பின்னர் நிலையான வாழ்க்கை  ( settled ) வாழ எண்ணி ஆற்றுப்படுகை அருகில் குடியிருப்பை ஏற்படுத்திக் கொண்டு வேளாண்மை கற்றுக்கொண்டான் . வேளாண்மைக்கு கால்நடை அவசியமாயிற்று . அவ்வாறு வாழ்ந்த காலத்தில் மற்ற இனக்குழுவிடமிருந்தும் வனவிலங்குகளிடமிருந்தும் கால்நடைகளுக்கு ஆபத்து உண்டாயிற்று . கால்நடைகளை காப்பாற்ற மற்ற இனக்குழுவோடும் ( ஆநிரை போர் ) , ஆபத்து ஏற்படுத்தும் வனவிலங்குடனும்  சண்டையிட  தொடங்கினான் . அவ்வாறு ஏற்படும் சண்டையில் இறக்கும் வீரர்களை அக்குழுவினர் தெய்வமாக எண்ணி நடுகல் வைத்து வணங்கினர்  .அவ்வாறு வைத்த நடுகல் பற்றி காண்போம் .

                                 திருப்பூர் மாவட்டம் , அவினாசி பொங்குபாளையத்தில் உள்ள சிறு வீட்டு குடியிருப்புக்கு அருகில் சாலை ஓரத்தில் புலிக்குத்தி நடுகல் ஒன்று உள்ளது . தான் செல்வமாக கருதிய கால்நடைகளை , தாக்க வரும் புலியை எதிர்த்து போரிட்டு  இறந்த வீரனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் இது . இவ்வீரனின் நினைவாக இந்த நடுகல் நடப்பட்டுள்ளது . இந்த நடுகல்லில் வீரனின் முகம் நேராகவும் , தலையில் சிறு கொண்டையும் காட்டப்பட்டுள்ளது . வீரன் தன்னை தாக்க வரும் புலியை  இருகைகளாலும் ஈட்டியை கொண்டு தாக்குவது போலவும் , புலி தன் பின்னங்கால்களை தரையில் ஊன்றியவாறும் முன்னங்கால்களை வீரனின் தொடை மீது பதித்துள்ளது போலவும் காட்டப்பட்டுள்ளது . இதில் புலியின் உருவம் வீரனை விட சிறியதாக காட்டப்பட்டுள்ளது . இதில் பொறிந்த நிலையில் கல்வெட்டுகள் காணப்படுகிறது  

 கல்வெட்டு வாசகம் :

                                "தேவரு , புலிகு (த் ) தி பட்டார் கல் "

சில வரிகள் அழிந்து விட்டன .

ஆதாவது தேவரு என்பவர் கால் நடைகளை காப்பாற்ற புலியுடன் சண்டையிட்டு இறந்தார் என்பன செய்தி ஆகும் . இது சுமார் 1200 வருடங்கள் பழமையானதாக கருதப்படுகிறது . இக்கல்லை இங்குள்ள மக்கள் வழிபடுகின்றனர் .




Saturday, August 28, 2021

திருப்பூர் மாவட்டம் , செங்கப்பள்ளி அருகே காங்கயம்பாளையம்

 நடுகல் வழிபாடு என்பது பொதுமக்கள் நலனுக்குக்காக சண்டையிட்டு வீரமரணம் அடைபவரின் நினைவாக கல் நட்டு வழிபடுவதே ஆகும் . நடப்பட்ட கல்லின் மீது வீரனின் உருவமும் , அவன் இறப்பை பற்றிய குறிப்பும் பொறிக்கப்படும் .  நடுகல் வழிபாடு என்பது வீரத்தை அடிப்படையாக கொண்ட வழிபாடு . இவை பற்றி சங்க இலக்கியத்தில் நிறைய குறிப்புகள் காணப்படுகின்றன . கிராமங்களில் இன்றும் நடுகற்களை சிறுதெய்வங்களாக வணங்கி வருகின்றனர் . 

                திருப்பூர் மாவட்டம் , செங்கப்பள்ளி அருகே காங்கயம்பாளையம் என்னும் ஊரில் மூன்று நடுகற்கள் காணப்படுகிறது . இவற்றில் இரண்டு புலிக்குத்தி நடுகற் கள் மற்றொன்று நினைவுக்கல் ஆகும் . முதல் புலிக் குத்தி கல்லில் புலி தன் வாயை திறந்த நிலையில் வீரன் மேல் பாய்வது போலவும் , வீரன் ஈட்டி ஆயுதத்தால் புலியை தாக்குவது போல காட்டப்பட்டுள்ளது. புலியின் முன்னங்கால்கள் இரண்டும் தன்னை தாக்க வரும் வீரனை எதிர்த்து தாக்குவது போல உள்ளது . வீரனுக்கும் புலிக்கும் நடுவே ஒரு நாய் புலியை நோக்கி பாய்வது போலவும் காட்டப்பட்டுள்ளது. இதன் காலம் 16 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் . கல் பொரிந்த நிலையில் உள்ளது .கல்வெட்டுகள் காணப்படவில்லை .

                   இதற்கு அடுத்து ஒரு நினைவுக்கல் உள்ளது . இதில் வீரனின் உருவம் இரு கைகளையும் கூப்பியநிலையில் காட்டப்பட்டுள்ளது . இது வீரனின் நினைவாக எடுக்கப்பட்ட கல் ஆகும் . 

                              மூன்றாவதாக மற்றொரு புலி குத்தி கல் காணப்படுகிறது . இதில் புலி வாயை திறந்த நிலையில் பாய்வது போலவும் அதன் முன்னங்காலில் ஒரு கால் வீரன் தோள் பட்டை மீதும் மற்றொரு கால் வீரனின் தொடையை பிடித்து இருப்பது போலவும் , வீரனும் தன்னை தாக்க வரும் புலியை ஈட்டியைக் கொண்டு தாக்குவது போலவும் காட்டப்பட்டுள்ளது . இதில் வீரனின் முகம் நேராக நம்மை பார்ப்பது போல உள்ளது . இதுவும் 16ம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதப்படுகிறது . இதிலும் கல்வெட்டுகள் காணப்படவில்லை .















Monday, August 23, 2021

கோழி நடுகல்/kozhi Nadukal / Hero Stone, Aviyur, Villupuram District, Tamil Nadu.

The visit to this Kozhi Nadukal / கோழி நடுகல், at Aviyur was a part of Villupuram Heritage Walk organized by History Trails, on 24th and 25th July 2021.

This Kozhi Nadukal is at Aviyur on Cuddalore to Sankarapuram Main road, under a Peepal tree. This Nadukal was erected to a Cock, which won in a fight and might have died after that. Up on winning it was welcomed by his master with Poorna kumbh and fanned with Chowry / whisk.

The inscription on the back side, starts with a meikeerthi as Madurai konda Koparakesari.. year… மதுரை கொண்ட கொப்பரகேசரி.. யாண்டு…   From this inscription, this Kozhi Nadukal may belongs to 9th Century Vijayalaya Chozha period.

Location of this Nadukal : CLICK HERE


A Vinayagar near the Kozhi Nadukal
A real Kozhi -Cock
--- OM SHIVAYA NAMA ---

Friday, February 12, 2021

கர்நாடக நடுகற்கள்

பழங்காலத்தில் வீரச்செயல்கள் செய்தவர்களின் நினைவாக நடுகல்  வைத்து வணங்குவது வழக்கம் . இவ்வழக்கம் கர்நாடகா மாநிலத்தில் தமிழகத்தைப் போலவே இருந்துள்ளது .  அங்கும் எண்ணற்ற நடுகற்கள் காணப்படுகின்றன . அவை தமிழக நடுகற்களை ஒத்தே காணப்படுகின்றன . 


படம்-1 

ஆநிரை கவர்தல் அல்லது ஆநிரை மீட்டல் போரில் இறந்த வீரனுக்காக சதியேறிய மனைவிக்கான சதிக்கல் . இது மூன்று நிலை நடுகல் .  முதல் நிலையில் ஒரு வீரன் கையில் அம்பும் அவனை எதிர்க்கும் மற்றொரு வீரன் கையில் வில்லும் காட்டப்பட்டுள்ளது .  அவர்களுக்குக் கீழே  ஆநிரைகள் காட்டப்பட்டுள்ளது . கூடவே பெண் உருவமும் உள்ளது .  இரண்டாம் நிலையில் சதி ஏறிய பெண்ணை தேவலோக அழைத்துச் செல்லும் காட்சி . இறுதி நிலையில் அப்பெண் இறைவனடி சேர்ந்த காட்சி காட்டப்பட்டுள்ளது . 



படம் 2 :

  அரசர் அல்லது தலைவருக்கான நடுகல். இருவரும் ஒரே போரில் இறந்துள்ளனர். ஒருவரின் மனைவியும் உடன் சதியேறியுள்ளார்.   இது நான்கு நிலை நடுகல் . முதல் நிலையில் இரு அரசர்கள் அல்லது தலைவர்களை பல்லக்கில் அழைத்து செல்வது போல கட்டப்பட்டுள்ளன .  இரண்டாம் நிலையில் இரு அரசர்களும் குதிரையில் அமர்ந்து போர்புரியும் காட்சியும் அவர்களுடன்  யானைப் படையும் மற்றும் வீரர்களும் காட்டப்பட்டுள்ளது .  மூன்றாம் நிலையில் இரண்டு அரசர்களும் ,  ஒருவரின் மனைவியையும் தேவகன்னிகள் தேவலோகம் அழைத்துச் செல்லும்  காட்சி . கடைசி நிலையில் மூவரும் சிவலோகம் அடைந்த காட்சி காட்டப்பட்டுள்ளது .



படம் 3 :

அரசர் அல்லது தலைவருக்கானது கூடவே மனைவியும் சதியேறியுள்ளார்.

 இது மூன்று நிலை நடுகல் . முதல் நிலையில் அரசர் குதிரை மீது அமர்ந்து போர்புரியும் காட்சியும் அவருடன் மூன்று வீரர்கள் கேடயத்துடன்  காட்டப்பட்டுள்ளனர் .  இரண்டாம் நிலையில் அரசரும் அவர் மனைவியையும் தேவகன்னிகள் தேவலோகம் அழைத்துச் செல்லும் செல்லும் காட்சி . மூன்றாம் நிலையில் அரசரும் அவர் மனைவியும் சிவலோகப் பதவி அடைந்து  காட்சி .



படம் 4:

 தலைவர் அல்லது அரசர்களுக்கு இடையேயான சண்டை காட்சி .  இறந்த வீரன் மேல் நின்று இரு அரசர்களும் போர்புரியும் காட்சி . இம்மாதிரி போர் புரிவது சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது.


Thursday, February 11, 2021

மலையப்பாளையம் கவுந்தபாடி ஈரோடு

 தொறுபூசல்/ ஊர்பூசல் நடுகல்..

அரசு மேல்நிலைப் பள்ளி ,





Thursday, December 31, 2020

தாளவாடி பன்றிகுத்திப்பட்டான்கல்

 காலம் : 16ம் நூற்றாண்டு

இடம்: தமிழக- கர்நாடக எல்லை பொம்மனஹள்ளி , தாளவாடி

கல்வெட்டுக்களில் ஒடுவங்க நாட்டைச் சேர்ந்த பொம்மனஹள்ளி என குறிப்பிடப்படும் இவ்வூர்,  அக்காலத்தில்  கொங்கு மண்டலத்தின் 24 பிரிவுகளில் ஒன்றாக திகழ்ந்ததாக அறிகிறோம்.

மூன்று  அடுக்கு நிலை சதி நடுகல்லில் முதல்நிலையில் உள்ள வீரன் காட்டு பன்றியுடன் சண்டையிட்டு வீர மரணம் எய்தவன். அருகில் உள்ளது அவனது  மனைவி அவனுடன் சதியேறியவர் . அடுத்தநிலையில் மொத்தம் ஆறுபேர் உள்ளனர்.  இறந்த வீரன் மற்றும் அவன்  மனைவியை மேலுலகத்திற்கு அழைத்துச் செல்லும்  தேவகன்னிகள் கையில் வெண்சாமரத்துடன்.

மேலே உள்ள இறுதிநிலையில் வீரனும் அவனது  மனைவியும் இறைவனடி சேர்ந்து இறைவனை வணங்கியபடி உள்ளனர்.




Saturday, December 26, 2020

ஈரோடு ஈஞ்சம்பள்ளி நடுகல்

கொங்கு நாட்டின் ஒரு பிரிவான மேல் கரைப் பூந்துறை நாட்டை சேர்ந்த ஊர்களில் ஒன்று , ஈஞ்சம்பள்ளி . ஈரோடு - கொடுமுடி செல்லும் வழியில் சோளங்காபாளையம் அருகில் அமைந்துள்ளது இவ்வூர் . ஊரின் நடுவே உள்ள ஆலமரத்தின் கீழ் ஒரு நடுகல் உள்ளது . " வேடன் சாமி " என்ற பெயரில் மக்கள் இந்த வீரனை வணங்குகின்றனர் . 

                              இந்த நடுகல் வீரன் வில்லுடன் காட்சி தருகிறான் . அடுத்து அவனே  ஒருவருடன் சண்டையிடுவது போலும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது . ஊர்ப்பூசல், சிறு சண்டை காரணமாக இந்த வீரன் இறந்து பட்டிருக்கலாம்.  இந்த நடுகல் ஊர்ப்பொதுவில் உள்ளதால் பொது மக்களால் எடுக்கப்பட்ட நடுகல் ஆக இருக்கலாம் என்று கருதுகிறேன் (பிழையிருப்பின் அறிஞர்கள் திருத்தி உதவ வேண்டுகிறேன்). இதன்  15-16ம் நூற்றாண்டாக இருக்கலாம். இந்த நடுகல்லின்  அருகில் வேறு ஒரு நடுகல் கிடத்தப்பட்ட நிலையில் உள்ளது . இன்றுவரை இது நல்ல வாழிபாட்டுக்குறியதாக இருப்பது கொங்கு நாட்டில் நடுகல் வழிபாடு போற்றப்பட்டு வருகிறது என்பதற்கு இது ஒரு சான்றாகும் . 

                       மேலும் இவ்வூரில் சோழீஸ்வரர் மற்றும் பெருமாள் கோயில்கள் அருகருகே இருக்கின்றன.  இவற்றில் கல்வெட்டு எதுவும் காணப்படவில்லை . ஆனால் கோயில் பழமை மாறாமல் இருக்கிறது .  கோயிலின் உள்ளே தவ்வை தாய் சிற்பம் உள்ளது . அது மட்டும் அல்லாமல் கோயிலின் வெளியே பழமையான சிற்பங்கள் கிடத்தப்பட்டுள்ளது .






















பழமங்களம் நடுகல்

                              கொங்கு என்றால் காடு , பொன் , மணம், தேன் என்று பல பொருள்கள் உண்டு . காடு மிகுந்த நாடு , பொன் நாடு , மணநாடு , தேன் நாடு என்ற பல பொருள்களில் கொங்கு நாட்டிற்க்கு பெயர் அமைந்தது என்பர் . 

                                       கொங்கு நாடு நிர்வாக வசதிக்காக 24 உள்நாடுகளாக பிரிக்கப்பட்டுள்ளது . அதில் ஒன்றான மேல்கூரைப் பூந்துறை நாட்டின் 32 பழம் பெரும் ஊர்களின் ஒன்று பழமங்களம் . இப்போது இது ஈரோடு வட்டத்தில் உள்ளது . 

       நடுகல் கல்வெட்டில் பெருமையும் பெயரும் பாடல் (வெண்பா) வடிவில் பொறித்திருப்பது தென்னிந்தியாவிலேயே ஈரோடு வட்டம் பழமங்களத்தில் தான் . அனுமநதி  புகழ்ந்து கூறுப்பெரும் ஓடையின் தென்கரையில் உள்ள ஊர் . இங்கு 10ம் நூற்றாண்டை சேர்ந்த " கரையகுலச் சொக்கன்" என்பவனின் நடுகல் கோயில் அமைப்பில் உள்ளது . பாடல் மூலம் பழமங்களத்தின் பழைய பெயர் புகழ்மங்களம் என்று தெரிகிறது . மங்களம் என்பதே இவ்வூரின் சிறப்பை உணர்த்தும் .                                         


" வாய்த்தபுகழ் மங்கலத்து வந்தெதிர்ந்த மாற்றலரைச்

சாய்த்தமருள் வென்ற சயம்பெருக - சீர்த்தபுகழ்

நிக்வேணம் கற்பொறிக்கப் பட்டான் கறைய குலச்

சொக்கனேந்த வேவுலகல் தான்"

ARE 217 of 1977 (வெண்பா)

இக்கற்பொறி இரட்சிப்பான் பாதம் என் தலைமேலே என்பது நடுகல் கல்வெட்டாகும் நானாதேசித் திசை   ஐயாயிரத்து ஐநூற்றுவருக்கு இங்கு நானாதேசி அடைக்கலம் ஒன்று இருந்துள்ளது . இவ்வூர் பெரிய வணிகர் குழுக்கள் தங்கும் இடமாக இருந்துள்ளது . தொல்பொருட் சிறப்பு வாய்ந்த பல பொருட்கள் கிடைகின்றன . இன்று இந்த நடுகல்லை  ஊர் மக்கள் "வேடன் கல் "  "வேடம் சாமி" என்று அழைக்கின்றனர்.







Sunday, December 6, 2020

கோத்தகிரி தேனாடு நடுகல்

 ஊர்ச்சண்டையில் இறந்த வீரனுக்கான நடுகல்..

ஸ்ரீசப்தகன்னியர்திருக்கோயில்

தேனாடு ,

ஒசகேரி

கோத்தகிரி




Saturday, December 5, 2020

ஈரோடு அந்தியூர் தேவர்மலை நடுகல்

 மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகான மலைத்தொடரில் அமைந்துள்ள வனப்பகுதிகளில் அந்தியூர் வனப்பகுதியும் ஒன்றாகும் . அங்கு உள்ள மலையில் தேவர் மலை என்ற மலைக்கிராமம் அமைந்து உள்ளது . அந்த சிறு கிராமத்தில் பந்தீசுவரர் கோயில் அமைந்துள்ளது . இக்கோயிலில் பந்தீஸ்வர் மற்றும் வீரபத்திரருக்கு சிறப்பான வழிபாட்டு  நடக்கிறது . இக்கோயிலில் உள்ள  ஒரு சிறிய பலகைக் கல்லில் கல்வெட்டு ஒன்று உள்ளது . 

இந்த கோவிலுக்கு வெளியே மூன்று நிலையில் நடுகல் ஒன்று உள்ளது. மூன்றுநிலை நடுகல்லில் கீழிருந்து முதல் நிலையில் நடுவில் வாளுடன் வீரன் ஒருவன் உள்ளார். அவரது இருபுறமும் இரு மனைவியர்கள்  உள்ளனர், கையில் மதுக்குடுவையுடன் இருப்பதானால் சதியேறியதாகக் கருதலாம். இரண்டாம் நிலையில் சொர்க்கம் செல்லும் காட்சியும் மூன்றாம் நிலையில் நந்தியுடன் லிங்கமும் அதற்கு பூசை செய்பரும் காட்டப்பட்டுள்ளனர்.

எனவே இதனை நாம் வீரனுடன் உயிர்நீத்த  சதிக்கல்லாக கருதலாம். மூன்றுநிலையும் கைலாசமும் உள்ளதால் இதனை லிங்காயத்து இன மக்களின் நடுகல்லாக கருத வாய்ப்புள்ளது.