Sunday, December 6, 2020

Sri lakshmi narasimhar temple , Marehalli

மாரெஹள்ளி (Marehalli ) என்னும் ஊர்  மைசூரிலிருந்து 53km தொலைவில் உள்ளது . இங்குள்ள பழமையான லக்ஷ்மிநரசிம்மர் கோயில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டுள்ளது . இதன் பழைய பெயர் ராஜாச்சிரய ( rajasraya ) விண்ணகரம் . ராஜராஜசோழன், மேலைச்சாளுக்கிய மன்னரான சத்தியாசிரயனை வென்றதால் அவருக்கு "ராஜாச்சிரயன்" என்ற பட்டப்பெயர் சூட்டிக்கொண்டார் .  தன் பெயராலேயே இங்கு ஒரு கோயில் கட்டி  அதற்கு ராஜசிரய விண்ணகரம் என்றும் பெயர் வைத்தார் .  சோழர்கள் காலத்தில் கருவறை மட்டும் கட்டப்பட்டது . பின்பு இப்பகுதியை ஆண்ட ஹொய்சாலர் , விஜயநகர பேரரசுகள் மற்றும் மைசூர் உடையார்கள் இக் கோயிலை புனரமைத்து உள்ளனர் . 

இக்கோயிலில் கருவறை மட்டுமே ராஜராஜ சோழனால் கட்டப்பட்டு உள்ளது  . முகமண்டபம் , பிரகாரத்தில் உள்ள தூண்கள்  சோழருக்குப் பின் ஆட்சி செய்த  ஹொய்சால , விஜயநகரப் பேரரசுகளால் கட்டப்பட்டு உள்ளது .  இக்கோயிலில் 108 தூண்கள் உள்ளன. இக்கோயிலில் உள்ளே பூமாதேவி , நிலா தேவி ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன . கோயிலுக்கு வெளியே பிற்காலத்தில் கட்டப்பட்ட சிவன் ஆலயம் உள்ளன .

இக்கோயிலில் இராஜராஜ சோழனின் கல்வெட்டுகள் எதுவும் இல்லை . ஹொய்சால மன்னர் விஷ்ணுவர்தனின் தமிழ் மற்றும் கன்னட கல்வெட்டுகள் உள்ளன . கி.பி. 1148 ஆம் ஆண்டு   வடகரை நாட்டை சேர்ந்த காஞ்சனுரை தேவதானமாக கொடுக்கப்பட்டதாக விஷ்ணுவர்தன் கல்வெட்டு கூறுகிறது . விஷ்ணுவர்தன் காலத்தில் இக்கோயில் "சிங்கப்பெருமாள் கோயில்" (நரசிம்ம - சிங்கம் ) என்று அழைக்கப்பட்டது.
விஜயநகரப் பேரரசு மற்றும் மைசூர் வாண்டையார் ஆகியோரின்  கன்னட கல்வெட்டுகள் உள்ளன . இக்கோயில் மாண்டியா மாவட்டத்தில் உள்ள முக்கிய வைணவ தலங்களில் இதுவும் ஒன்று .









Saumyakesava perumal temple , Nagamangala , Mandya district

 நாகமங்களா , மாண்டியா மாவட்டத்தில் உள்ள சிறிய நகரம் ஆகும் .  இவ்வூரின் மையப்பகுதியில் 12ம் நூற்றாண்டை சேர்ந்த "சௌமியகேசவ" கோயில் அமைந்துள்ளது .  நாகமங்களா , கங்கர் காலத்தில்  கல்கனி நாடு என்று அழைக்கப்பட்டது  . 

ஹொய்சால மன்னரான பிட்டிதேவன் முதலில் சமணராக இருந்து , பின்னர் ராமானுஜரால் வைணவத்தின் மீது பற்று கொண்டு வைணவராக மாறி  தன் பெயரை விஷ்ணுவர்தன் என்று மாற்றிக்கொண்டார் . இவர் காலத்தில்  கர்நாடகாவில் வைணவம் தழைத்து  இருந்தது .  இவர் வழி வந்த இவரது பேரனான இரண்டாம் வீர வல்லாளன் (1173) , நாகமங்களாவில் வைணவ கோயில் கட்டினார் .  இக்கோயில்  " வீர வல்லாள சதுர்வேதி பட்டாரநகர" என்று முதலில் அழைக்கபட்டது . காலப்போக்கில் இப்பெயர் மருவி சௌமிய கேசவ கோயில் என்று அழைக்கப்பட்டது. மற்ற ஹொய்சாளர் கோயில்களை போல் அல்லாமல் கலைப் பணியில் இக்கோயில் முழுமையடையாமல் இருக்கிறது .  கருவறையின் முன்பு உள்ள தூண்களில் , நான்கு தூண்கள் வட்ட வடிவத்திலும் , இரண்டு தூண்கள் மிக அழகிய வேலைப்பாட்டுடன் காணப்படுகிறது. பல கோணங்களில் அமைந்த மேடையின் மீது கோயில் கட்டப்பட்டுள்ளது .  மேடையின் மேற்பகுதி வலம் வரும் பாதையாக பயன்படுகிறது . பின் வெளிப்புறத்தில் மற்ற கோயில்களில் காணப்படும் ஹொய்சாலர்களின் சிறப்பு சிற்பங்கள் இங்கு இல்லை . 

ஹொய்சாளர்களை தொடர்ந்து இப்பகுதியை ஆண்ட விஜயநகர பேரரசு முகமண்டம் அமைத்து இக்கோயிலை விரிவுபடுத்தினர்.  கல்வெட்டுகளில் மூலவரை சென்னக்கேசவா என்று குறிப்பிடப்பட்டுகிறது . இக்கோயில் மாண்டியா மாவட்டத்தின்  முக்கியமான வைணவத் தலம் ஆகும் .











கோத்தகிரி தேனாடு நடுகல்

 ஊர்ச்சண்டையில் இறந்த வீரனுக்கான நடுகல்..

ஸ்ரீசப்தகன்னியர்திருக்கோயில்

தேனாடு ,

ஒசகேரி

கோத்தகிரி




ஜான் சல்லிவன் , கோத்தகிரி

 நீலகிரியில் உள்ள கோத்தகிரி "இந்தியாவின் சுவிஸர்லாந்த்" என்று அழைக்கப்படுகிறது . இங்குள்ள தட்பவெட்ப நிலையும் சுவிஸர்லாந்தின் தட்பவெட்ப நிலையும் ஒரே மாதிரி இருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது . உலக சுற்றுலா வரைபடத்தில் நீலகிரி மாவட்டம் இடம் பெற காரணமாக இருந்தவர் ஜான் சல்லிவன் . இவரே நீலகிரியின் தந்தை என  போற்றப்படுகிறார் .

1819 ஆம் ஆண்டு கோத்தகிரி , கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியாக இருந்தது . ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கோவை கலெக்டராக இருந்தவர் ஜான் சல்லிவன் .15 ஜூன் 1788 ஆண்டு லண்டனில் பிறந்த இவர், கிழக்கிந்திய கம்பெனியின் ரைட்டராக சேர்ந்து பின் 1816ஆம் ஆண்டு செங்கல்பட்டு கலெக்டர்ராக பணியாற்றினார் .  பின் 1815 - 1930 வரை கோவை கலெக்டராக பணியாற்றினார் . இவர் காலத்தில் நீலகிரிக்கு வர போதிய வசதி இல்லாத காரணத்தாலும் , அடர்ந்த வனப்பகுதியாளும் இங்கு வாழ்ந்த மக்களுக்கு வெளியுலகத் தொடர்பு இல்லாமல் இருந்தனர் . இந்த பகுதியின் இயற்கை சுற்றுச்சூழல் ஜான் சல்லிவன் அவர்களை மிகவும் கவர்ந்ததால்  திம்பட்டி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கன்னேரிமுக்கு என்னுமிடத்தில் கேம்ப் ஆபீஸ் அமைத்தார் . இதுவே உதகையின் முதல் அரசு அலுவலகம். இதற்குப் பின்னரே உதகையில் உள்ள ஸ்டோன் ஹவுஸ் கட்டப்பட்டது.   ஊட்டியுள்ள மிகப்பெரிய ஏரியும் இவரால் உருவாக்கப்பட்டது . மேலும் மலையின் பல பகுதிகளில் ஓடிய சிறிய ஓடைகளை அந்த ஏரியுடன் இணைத்து அதன் நீர்வளத்தை உறுதி செய்தார்.

இவரின் வருகைக்குப் பிறகே ஊட்டியில் தேநீர்  மற்றும் கேரட் , பீட்ரூட் ஆகியன பயிர் செய்யப்பட்டன .  கோத்தகிரியின்  பொருளாதார வளர்ச்சிக்கு இவரே காரணம் . நீலகிரி வரலாற்றில் ஜான் சல்லிவனுக்கு முக்கிய இடம் உண்டு .