Friday, December 4, 2020

மர சிற்பம் , புலி குத்தி வீரன்

 புலி குத்தி வீரன்

மர சிற்பம்

இடம் : முத்தூர் குப்பண்ணசாமி கோயில் கதவு



கோவை குமிட்டிபதி பாறைஓவியங்கள்

கோவை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையில் கோவையிலிருந்து வடமேற்கில் 22கிமீ தொலைவில் உள்ள கிராமம்தான் #குமிட்டிபதி. இந்த கிராமத்தில்  படைமலை என்ற ஒரு மலையில்  உள்ள இயற்கையான பாறைக் குடைவுகளில் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால பாறை ஓவியங்கள் உள்ளன. 


இந்த பெருங்கற்கால ஓவியத்தொகுப்பு வெண்மை நிற சாந்தினால் வரையப்பட்டது. ஓவியத் தொகுப்பில் ஒரு பெரிய அலங்கரிக்கப்பட்ட தேரை முன்புறம் இரு வடத்தை பிடித்து பல மனிதர்கள் இழுத்துச் செல்வது போன்று உள்ளது. இதனருகில் இதே போல மற்றொரு தேரும் உள்ளது. இதனை ஒரு சில ஆய்வாளர்கள் மயில் என்றும் தேர் என்றும் ஒரு சிலர் மயில் என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இதிலிருந்து தற்போதைய கோவில்களின் தேரிழுக்கும்  சமய சடங்குகள் எவ்வளவு தொன்மையானது என்று அறியலாம். 


மேலும் இதனருகில் ஒரு பெரிய யானை மீது மனிதன் ஒருவன் அமர்ந்துள்ளது போன்றும் அவன் கையில் ஒரு குச்சி/ அங்குசம் போன்று உள்ளது. இதனை ஆய்வாளர்கள் மனிதன் யானையை பிடித்து அடக்கி ஆள்வதாக கருதுகின்றனர். 


சங்க காலத்தில் இந்த பகுதி சேரநாட்டிற்குட்ட பகுதி. "சேரநாடு வேளமுடைத்து" என்ற கருதுகோளுக்கேற்ப இந்த காடு முழுவதும் யானைகள் மிகுந்திருந்தன. இங்கு ஒரு மிகப்பெரிய யானை சந்தை இயங்கி வந்தமையை இதனருகில் உள்ள வேளந்தாவளம் (வேளம் - யானை, தாவளம் - மையம்/ சந்தை) என்ற ஊரும், மேலும் மாவூத் எனப்படும் யானைகளை பழக்கி ஆளும் ஆட்கள் தங்கிருந்த மாவூத்தம்பதி (மாவூத் - யானைப்பாகன், பதி- குடியிருப்பு)  என்ற ஊரும் உள்ளன.

ஆக, கொங்குநாட்டில் யானைகள் மிகுந்த இந்த காடுகளின் வளத்தினை தனியாக கூற வேண்டியதில்லை. ஏனெனில் ஒரு காடின் வளமையினை அங்குள்ள பேருயிரான யானையினை வைத்து அடையாளங்காணலாம். 

கொங்குநாட்டில் இதே போன்று யானைகளை மையமாக வைத்து, நீலகிரியில் கரிக்கையூர், வெள்ளெருக்கம்பாளையம் மற்றும் மதகடிப்புதூர் ஆகிய இடங்களில் பாறை ஓவியங்கள் உள்ளன. 


ஆக இந்த ஒரே ஓவியத்தில் தொன்மையான சமய சடங்கு நிகழ்வும் யானைகளை வைத்து இங்குள்ள காடுகளின் வளத்தினையும் அறிய முடிகிறது. 


ஆனால் தற்காலத்தில் இதே காடுகளையும், யானைகளையும் இதே சமய சடங்குகளைச் சொல்லி "யோகிகளே" பாழ்படுத்துவது வேதனைக்குறியது. 


காடுகளை காப்போம்.


#konguhistory 48