Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

Wednesday, February 4, 2026

தெய்யம், கேரளா

 “தெய்யம்” கேரளத்தின் ஒரு புனிதக் கலை மற்றும் பண்பாடு. நாட்டுப்புற வழிபாட்டு மரபுகளில் ஒன்றான தெய்யம், கேரள மாநிலத்தின் வட பகுதிகளான கண்ணூர், காசர்கோடு மற்றும் கோழிக்கோடு ஆகிய இடங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இப்பகுதி பழங்குடி மற்றும் கிராம மக்களிடம் காணப்படும் இறை வழிபாட்டு முறைகளில் தெய்யம் மிக முக்கியமானது. "தெய்வம்" என்ற சொல்லே "தெய்யம்" என மருவியதாகக் கருதப்படுகிறது.

​தெய்யத்தின் தத்துவம்

கோயிலின் கருவறையில் வீற்றிருக்கும் சக்தியானது, தெய்யம் வேடமிடும் கலைஞர்களிடம் இறங்கி, மக்களின் துயரங்களையும் வேண்டுதல்களையும் நேரடியாகக் கேட்டு ஆசி வழங்கும் ஒரு நிகழ்வே தெய்யமாகும். இது வெறும் ஆட்டமாக மட்டுமல்லாமல், அம்மக்களின் இறை நம்பிக்கை மற்றும் உயரிய கலைப் பண்பாடாகவும் போற்றப்படுகிறது.

​வரலாற்றுப் பின்னணி :

​பண்டைய காலத்தில் தோன்றிய தெய்யம், இன்று கேரளத்தின் அனைத்து கிராமக் கோயில்களிலும் பரவலாக நிகழ்த்தப்படுகிறது. தொடக்கத்தில், மரங்கள் சூழ்ந்த அடர்ந்த காடுகளுக்கு நடுவே 'காவு' எனப்படும் பொது இடங்களில் இது நடத்தப்பட்டது. இன்றும் சில இடங்களில் விளக்கொளியில் காடுகளுக்கு நடுவே இது நிகழ்ந்தாலும், பெரும்பாலான இடங்களில் கோயிலைச் சுற்றியே நடத்தப்படுகிறது. ​இதில் பங்குபெறும் கலைஞர்கள் மலையன் மற்றும் வண்ணான் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தலைமுறை தலைமுறையாக இக்கலையைத் தவம் போல் செய்து வருகிறார்கள். பல குடும்பங்களுக்குத் தெய்யமே குலதெய்வமாகவும், ஊரின் கிராம தேவதையாகவும் விளங்குகிறது. ஆண்டு விழாவாகவோ அல்லது வேண்டுதலுக்கான காணிக்கையாகவோ சுமார் 400-க்கும் மேற்பட்ட வெவ்வேறு தெய்யக் கோலங்கள் நிகழ்த்தப்படுகின்றன. எளிய கலைஞர்களைக் கடவுளாக ஏற்று அனைத்துத் தரப்பு மக்களும் வணங்கும் இந்த இறை சிந்தனை மிகவும் உயர்வானதாகக் கருதப்படுகிறது.

​ஒப்பனையும் தயாரிப்பும்

​தெய்யம் நிகழ்த்தும் கலைஞர்கள், சடங்கு நடப்பதற்கு முந்தைய வாரங்களில் விரதமிருந்து, துறவு நிலையைப் போன்ற ஒரு தூய்மையான வாழ்க்கை முறையை மேற்கொள்கின்றனர். இக்கலையில் முக ஒப்பனைக்கான வண்ணங்கள் இயற்கைப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

​மஞ்சள்: மஞ்சள் பொடி.

வெள்ளை: அரிசி மாவு.

​சிவப்பு: சுண்ணாம்பு கலவை.

​கருப்பு: தேங்காய் எண்ணெயுடன் எரித்த நெல் உமி மற்றும் தேங்காய் மட்டையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. உடை பச்சைப் பனை ஓலைகளைக் கொண்டு நுட்பமான உடைகள் உருவாக்கப்படுகின்றன. கிரீடம், மார்புக் கவசம் மற்றும் அணிகலன்கள் அந்தந்த தெய்யக் கதாபாத்திரத்திற்கு ஏற்பத் தயார் செய்யப்படுகின்றன. இதற்கெனக் கோயிலின் ஓரத்தில் தனி அறை அல்லது கூடாரம் அமைக்கப்படும். முகம் முழுவதும் வண்ணங்கள் பூசி, கண்களுக்கு மையிட்டு, மிக நேர்த்தியான ஒப்பனை செய்யப்படுகிறது.

ஆட்டமும் அருளாசியும்

​பெண் தெய்வக் கதாபாத்திரங்களுக்கும் ஆண்களே வேடமிடுகின்றனர். சில தெய்யங்களின் கிரீடங்கள் 20 முதல் 30 அடி உயரம் வரை இருக்கும். இசை, மணம், மற்றும் நேர்த்தியான ஆடை அலங்காரங்களுடன் ஆடும் இந்தக் கலைஞர், ஒரு கட்டத்தில் தன்னிலை மறந்து ஆடுகிறார். இதுவே தெய்யாட்டம் என்றும், அந்த வேடம் தெய்யக் கோலம் என்றும் அழைக்கப்படுகிறது.

​மேள தாளங்களுடன் கலைஞர் கோயிலை வலம் வரும்போது, பாடல்கள் வழியாக அவர் படிப்படியாகத் தெய்வமாக மாறும் நிகழ்வு அரங்கேறுகிறது. தெய்வம் ஒரு மனித உடலில் தற்காலிகமாகப் புகுந்து வெளிப்படுவதாக மக்கள் நம்புகின்றனர். இதைக் காணும் பார்வையாளர்கள் பக்திப் பரவசமடைகின்றனர். சாதிப் பாகுபாடின்றி அனைவரும் தெய்யத்திடம் ஆசி பெறுகின்றனர். சில இடங்களில் கோழி பலியிடும் சடங்குகளும் நடைபெறுகின்றன.

முடிவுரை

​அறிவியல் வளர்ச்சிகளுக்கு மத்தியிலும், தெய்யம் மக்களின் வாழ்வில் பிரிக்க முடியாத கலாச்சாரப் பாரம்பரியமாகத் திகழ்கிறது. தெய்யம் பார்ப்பவர்களுக்கு முதலில் ஒரு அச்சத்தை உண்டாக்கினாலும், இறுதியில் அது பக்தியையும் அமைதியையுமே வழங்குகிறது. இதனை ஒரு சுற்றுலா நிகழ்வாகவோ அல்லது வெறும் வேடிக்கையாகவோ பார்க்காமல், அவர்களின் புனிதமான பண்பாட்டு விழுமியமாக மதிக்க வேண்டியது நம் கடமையாகும்.

1)கண்ணபுரம் பூமலகாவு கோயில் , கண்ணூர்





         கன்கோல் களரி பகவதி கோயில் 



                        
                      ஒப்பனை அலங்காரம்



நரசிம்மவதம்




Tuesday, July 30, 2024

CHETAK HORSE ( SCOOTER )

 முகலாய பேரரசர் அக்பர்(Akbar ) தனது ஆட்சிப்பகுதியை விரிவுபடுத்திய போது (வட இந்தியாவை ) பெரும் இடையூராகவும் , வீரமிக்க எதிராளிகளாகவும் விளங்கியவர்கள்  ராஜபுத்திர வம்சத்தினர்கள் . ராஜபுத்திர  மன்னர்களில் இரண்டாம் உதய் சிங்கும் அவர் மகன் மஹாராணா பிரதாப் சிங்கும் அக்பருக்கு கட்டுப்பட மறுத்த பெரும் வீரர்கள் . கி பி 15ம் நூற்றாண்டில் ராஜபுத்திர வம்சத்தில் தோன்றிய இரண்டாம் உதய்சிங் சித்தொகரை  (Chittogarh ) தலைநகராக கொண்டு மேவாரை ( Mewar ) ஆட்சி செய்து வந்தார் . மேவார் பகுதி என்பது இன்றைய ராஜஸ்தானின் ஒரு பகுதியாகும் .  முகலாய பேரரசர் அக்பர் 1567 ஆம் ஆண்டு தனக்கு கட்டுப்பட மறுத்த சித்தோகர் கோட்டையை முற்றுகையிட்டார் . மிகப் பெரிய கோட்டை மற்றும் ராஜபுத்திரர்களின் வீரத்தாலும் இப்போர் சுமார் நான்கு மாதங்கள் ( 23 October 1567 – 23 February 1568) நடந்தது , இறுதியில்  அக்பர் சித்தோகர் (chittogarh) கோட்டையை கைப்பற்றினார் . இப்போரில் உதய் சிங் உயிர்தப்பியதோடு ஆரவல்லி மலைப் பகுதிக்கு தப்பினார் . மேவாரின் தலைநகர் சித்தோகர் கைப்பற்றப்பட்ட போதிலும் இந்த ராஜ்யத்தின் பெரும்பகுதி உதய் சிங்கின் ஆதிக்கத்தில் இருந்தது . எனவே  தலைநகரை இழந்த உதய் சிங் புதிய தலைநகரை உருவாக்கினார் . அவர் பெயரில் உருவாக்கப்பட்ட தலைநகரே இன்றைய உதய்பூர் ( Udaipur ) . நீர் மேலாண்மையின் முக்கியத்துவத்தை உணர்த்த உதய் சிங் நகர் முழுவதும் பல ஏரிகளை உருவாக்கினார் . இன்றும் பல ஏரிகளை கொண்டு இந்நகரம் விளங்குவதால் ஏரிகள் நகரம் ( City Of Lakes )  என்று இன்றும் புகழ்ப்படுகிறது .    இரண்டாம் உதய் சிங்கின் மறைவுக்கு பின் அவர் மகன் மஹாராணா பிரதாப் சிங் ஆட்சிக்கு வந்தார் . இவர் 1540 ம் ஆண்டு மே 9ம் தேதி ராஜஸ்தானின் கும்பல்கரில் ( Kumbhalgarh / Kumbhalmer ) பிறந்தவர் . இவரின் தலைமையில் மேவார் சிறப்புற்று  விளங்கிய போது அக்பர் மீண்டும் மேவாரை பிடிக்க  படையெடுத்தார் . ஜூன் 18ம் தேதி 1576 ம் ஆண்டு அம்பரை சேர்ந்த மான் சிங்( Man Singh Of Amber ) என்பவர் தலைமையில் அக்பரின் படை  கிளம்பியது . அரவல்லி ( Aravalli )மலைத்தொடரில் இருந்து 40 km தொலைவில் அமைந்த உதய்பூரை பிடிக்க ஹால்டிகட் (Haldighati ) என்னும் மலையில் உள்ள கணவாய் வழியாக படை வந்தது . இம்மலை முழுவதும் மஞ்சள் நிற மண் காணப்படுவதால் , ( haldi ) ஹால்டி என்றால் இந்தியில் மஞ்சள் என்ற பொருளில் ஹால்டிகாட்  என்று இம்மலை அழைக்கப்படுகிறது . அக்பரின் பெரும் படையை மஹரானா பிரதாப் சிங்கின் சிறிய படை வீரத்தோடு எதிர்கொண்டது . ராணா பிரதாப் சிங்கின் மிகப்பெரிய பலமாக கருதப்பட்டது அவரது சேடக் ( CHETAK ) குதிரை  . மார்வாரி குதிரை இனத்தை சேர்த்த சேடக் குதிரை அழகு , திறமை மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவற்றை ஒருங்கே கொண்டு இருந்தது . இப்போரில் முகலாய படைத்தளபதியான மான் சிங்கை கொல்ல ராணா முயன்ற போது ராணா படுகாயமுற்றார் . அவரது சேடக் குதிரையும் காலில் காயமுற்றது எனினும் தன் தலைவர் காயமுற்று சுயநினைவு இழந்த நிலையில் அவரை சுமந்து கொண்டு போர் களத்தை விட்டு பகைவர்களிடமும் சிக்காமல் ஓடி , ஆற்றை கடந்து அவரை கொண்டு சேர்த்துவிட்டு கீழே விழுந்து மடிந்து இறந்தது . சரியான நேரத்தில் ராணா பிரதாப்பை மீட்டு , அவர் உயிரை பகைவரிடம் இருந்து காப்பாற்றியது . தன் வலியை பொருட்படுத்தாமல் காயப்பட்ட கால்களுடன் ஓடி தன் எஜமானை காப்பாற்றிய நிம்மதியுடன் இறந்தது . சுமார் 4 மணி நேரமே போர் நடத்தி அக்பர் வென்றாலும் , அவர் இப்போரில் முழுவெற்றி அடையாத்ததற்கு சேடக் குதிரையே காரணம் . அன்றில் இருந்து இக்குதிரை பற்றி பல நாட்டுப்புற கதைகள் உலவுகின்றன . பல நூற்றாண்டுகளாக சேடக் குதிரை கதைகளின் நாயகனான திகழ்கிறது . ராணா பிரதாப் சிங் , தன் உயிரை காப்பாற்றிய சேடக் குதிரையை புதைத்த இடத்தில் ஒரு நினைவுச் சின்னம் (நவீன நடுகல் ) எழுப்பியுள்ளார் . சேடக்கை புதைத்த இடத்தில் சிறு மேடை அமைத்து அதன் மேல் மண்டபம் போல் அழகான மாடம் அமைத்துள்ளனர் . அதன் நடுவே ஒரு அடிக்கு, நான்கு புறம் கொண்ட சிறு கல் தூண் அமைத்து, ஓவ்வொரு பக்கத்திலும் சிறு சிற்பம் அமைத்துள்ளனர் . இச்சின்னமும் , ஹால்டிஹட் போர் நடத்த இடமும் தற்போது ராஜஸ்தான் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது .  இக்குதிரையின் வீரமும் விசுவாசமும் புத்திசாலித்தனமும் இன்றும் போற்றப்படுகிறது .  இக்குதிரையின் நினைவில் நம் இந்திய அரசாங்கம் ராணுவ வானூர்திக்கு சேடக் ஹெலிகாப்டர் ( Chetak Helicopter ) என்றும் , ஒரு தனியார் நிறுவனம் தன் இரு சக்கர வாகனத்திற்கு   (Chetak Scooter ) சேடக் ஸ்கூட்டர் என்றும் பெயர் வைத்து மரியாதை செய்துள்ளது . ராணா பிரதாப் சிங், ஹல்டிகட் போர் நடந்து சில ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அக்பர்  கைப்பற்றிய சித்தோகர் கோட்டை மற்றும் பிற பகுதிகளை கைப்பற்றினார் . இவர் ஆட்சியில் மேவார் ராஜ்ஜியம் சிறப்புற்று விளங்கியது .

ஜனவரி 19ம் தேதி 1597ம் ஆண்டு ராணா மறைந்தாலும் அவரையும் அவரின் சேடக்  குதிரையையும் உதய்பூர் மக்கள் மறக்கவில்லை . ராஜபுத்திர மன்னர்கள் பல பேர் இருந்தாலும் வரலாற்றில் இன்றளவும் ராணா பிரதாப் சிங்கிற்கு தனியிடம் உண்டு .  உதய்ப்பூர் சாலை நடுவே சேடக் குதிரையும் சிற்பம் வைக்கப்பட்டுள்ளது . இன்றும் ராணாவின் மன உறுதியையும் முகலாயர்களுக்கு அடிபணியாத வீரத்தையும் மறக்காத மக்கள் அவரின் பிறந்தநாளை அரசு விடுமுறையாக அறிவித்து கொண்டாடி வருகின்றனர் .தங்கள் குழந்தைகளுக்கு பிரதாப் என்று இன்றும் பெயர் சூட்டி , அவரைப் பற்றி பல கதைகள் பேசி மகிழ்கின்றனர் .  மேலும் மஹாரானா பற்றி அறிந்துகொள்ள அருங்காட்சியகம் அமைத்து அதில் அவரின் வாழ்க்கை வரலாறு சொல்லும் ஓவியக்காட்சியும் , ஒளி ஒலி காட்சியும் , அவர் பயன்படுத்தி பொருட்களும் வைக்கப்பட்டுள்ளது . இங்கு அவரைப்போன்றும் , அவர் சேடக் குதிரைமேல் அமர்ந்து முகலாயர்களிடம்  சண்டை போடும் காட்சிகள் அனைத்தும் பெரிய சிலைகளாக  அமைத்துள்ளனர் . நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய வீர வரலாறு இது .

                                                                              CHATAK HORSE

                                                  

          

                                                                           CHATAK SAMADHI

                 


                                                                                                                                                                                                                             










                                                              

                                                               
                                                                    HALDIGHAT

                                            


                                                 

                                                 MAHARANA PRATAB MUSEUM

                                                

                                            

                                                       

                                             







AKBARI MASJITH , AMBER , JAIPUR

 இந்து மன்னர் இஸ்லாமிய மன்னருக்கு தன் பெண்ணை திருமணம் செய்து கொடுத்ததுடன் ஒரு மசூதியும் கட்டினார் என்ற வரலாற்றை அறிந்து கொள்ளலாம் . ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து 13 km தொலைவில் அம்பர்கோட்டைக்கு (Amber Fort ) அருகில் ஜமா மஸ்ஜித் (Jama Masjid ) என்னும் பழமையான மசூதி அமைந்துள்ளது . கிபி 1569 ஆம் ஆண்டு அக்பரின் உத்தரவை ஏற்று ராஜா பர்மால் ( Raja Bharmal ) என்பவரால் இந்த மசூதி கட்டப்பட்டுள்ளது . வட இந்தியாவில் தனது ராஜ்ஜியத்தை விரிவாக்க முடிவு செய்த அக்பர் , இரண்டு யுக்திகளை பயன்படுத்தினார் . பகைவர்களை வீரத்தாலும் மற்ற நாட்டவர்களை அன்பாலும் வெல்ல திட்டமிட்டார் . போர் புரிவதால் இருபுறமும் உயிர்சேதமும் பொருட்சேதமும் ஏற்படுவதால் அதை தவிர்க்க விரும்பி , திருமண உறவாலும்  எல்லைகளை விரிவாக்க முடிவு செய்தார் . அதுவும் குறிப்பாக ராஜபுத்திர மன்னர்களுடன் அவர் திருமண உறவு ஏற்று போர்கள் இன்றி தனது எல்லையை பாதுகாக்க முடிவு செய்தார் . அக்பர் , இஸ்லாமியர் ராஜபுத்திரார்களோ இந்துக்கள் . ஆனால் அக்பர் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை . ராஜ்ஜியத்தை விரிவாக்க மட்டுமே எண்ணினார் . அம்பர் சமஸ்தானத்தை முகலாய ராஜ்யத்துடன் இணைக்க திருமணமே சிறந்த வழி என முடிவு செய்தார் . மேவார் மன்னர் ராணா உதய்சிங் தவிர மற்றவர் ராஜபுத்திர மன்னர்கள் திருமண உறவுக்கு ஒப்புக்கொண்டனர் . இதன் முதல் முயற்சியாக அக்பர் , அம்பர் ராஜ்ஜியத்தின் 22வது ராஜபுத்திர மன்னரான ராஜா  பர்மால் (1498- 27 சன 1574 ) என்பவரின் மகளான ஹீரா கன்வாரியை மணம் புரிந்தார் .  அக்பர் திருமணத்திற்கு முன்பும் ஹீரா கன்வாரியை மதம் மாற சொல்லவில்லை அதுமட்டுமின்றி அரண்மனையில் இந்துவாக வாழவும் , பூஜைகள் செய்யவும் அனுமதி கொடுத்ததுடன் சில பூஜைகளில் அவரும் கலந்துகொண்டார் என்றும் கூறப்படுகிறது .  செப் 20 ,1569ம் ஆண்டு ஹீராவுக்கு ஆண் குழந்தை பிறந்தது . அக்குழந்தையே பின்னாளில் ஜஹாங்கீர் என்ற புகழ் பெற்ற முகலாய மன்னராவார் . அம்பரின் மன்னரான ராஜா பர்மால் தன் மருமகனான அக்பரின் வேண்டுகோளுக்கிணங்க அம்பர் கோட்டைக்கு அருகில் மஸ்ஜித் ஒன்றை கட்டி அதற்கு அக்பரின் பெயரே சூட்டியுள்ளனார் . " அக்பரி மஸ்ஜித் " என்றும் , " ஜமா மஸ்ஜித் " என்றும் அழைக்கப்பட்டுள்ளது . மஸ்ஜித் என்பது இஸ்லாமியர் அனைவரும் ஒன்றுகூடி இறைவனை தொழுகை செய்யும் இடம் ஆகும் .இதனையே தமிழில் பள்ளிவாசல் என்றும் அரபுமொழியில் மஸ்ஜித் என்றும் அழைக்கப்படுகிறது . ராஜபுத்திர ராஜ்ஜியத்தில் இஸ்லாமியருக்கும் தொழுகை செய்ய இடம் வேண்டும் என்று நோக்கத்தில் இந்த மசூதி கட்டப்பட்டுள்ளது . மசூதியின் நுழைவாயில் தாண்டி சென்றால் முகப்பில் ஏழு வளைவுகளைக் கொண்டு அவற்றின் மைய வளைவு மற்ற வளைவுகளை விட பெரியதாகவும் உள்ளது . இம்மசூதி இன்னும் பயன்பாட்டில் உள்ளது . இக்கட்டிடம் ராஜஸ்தான் தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது .

                                             


                                         








                                          

                                                           

                                                            

                                                           


        

Thursday, July 11, 2024

SAS - BAHU TEMPLE ,UDAIPUR, RAJASTHAN

 ராஜஸ்தான் உதய்பூரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகடா (Nagda ) என்னும் ஊரில் மிக அற்புத வேலைப்பாடுகளுடன் கூடிய சாஸ் பஹு (Sas - Bahu ) கோயில் அமைந்துள்ளது . நாகதரா (Nagahrada ) என்னும் பெயரே மறுவி நகடா ஆனதாக கருதப்படுகிறது . சிலத்தியவின் ( Siladitya ) தந்தையான நாகத்யாரால் ( Nagaditya ) நிறுவப்பட்டது இவ்வூர் . கிபி 646ம் நூற்றாண்டில் இருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரை இவ்வூர் சிறப்புற்று விளங்கியதோடு , மேவாரின் தலைநகராகவும் இருந்திருக்கிறது .


இவ்ஊரில் இக்கோயிலை சாஸ் பஹு என்றும் ,  மாமியார் - மருமகள் கோயில் என்றும் அழைக்கிறார்கள்  கி.பி 11 நூற்றாண்டில்  கச்ச்வாஹா வம்சத்து (Kachchhwaha ) மகிபாலன் என்னும் மன்னனின் மனைவி விஷ்ணு பக்தை அவளின் வழிபாட்டிற்காக மன்னர் விஷ்ணு கோயிலை கட்டியதாகவும் , மன்னனின் மருமகள் அதாவது இளவரசனின் மனைவி சிவபக்தை அவரின் வழிபாட்டிற்காக சிவாலயத்தை கட்டியதாகவும் அதனால் இக்கோயிலை மாமியார் - மருமகள் கோயில் என பெயர் பெற்றதாகவும் கருதப்படுகிறது . முதலில் விஷ்ணு கோயிலை கட்டியதால் சாஸ் என்பது கோயிலின் பெயரில் முதலில் வருகிறது .  சாஸ்பாகு என்ற பெயரே சகஸ்ரபாகு என்னும் பெயரில் இருந்து மறுவியதாகவும் ஆயிரம் கைகள் உடைய இறைவன் என்ற பொருளில் அழைக்கப்பட்டதாகவும் கருதப்படுகிறது . பத்தடி உயரம் உள்ள மேடையில் முழு கோயிலும் அமைந்துள்ளது . பெரிய கோயிலுக்கு அருகே மற்றொரு சிறிய கோயிலும் அதைச் சுற்றி சிறுசிறு கோயில்களும் காணப்படுகின்றன . அவற்றில் சில கோயில்களுக்கு மேடை மட்டுமே உள்ளன இருப்பினும்  பெரிய கோயிலின் சுற்றுச்சுவர் முழுவதும் ஆடல் மகளிரும் , பல கதைகளை விளக்கும் சிற்பங்களும் , யானையின் உருவங்கள் என பலதும் பொறிக்கப்பட்டுள்ளது . முகமதியர் படையெடுப்பின் போது கோயில் முழுதும் சிதைக்கப்பட்டு மூலவர் சிலை காணாமல் போனதாக கருதப்படுகிறது .  கோயில் முழுவதும் நுணுக்கமான வேலைப்பாடுடன் கூடிய அலங்காரத்துடன் அமைந்துள்ளது . இக்கோயிலில் தற்போது வழிபாடு ஏதும் நடப்பதில்லை , இக்கோயில் மத்திய அரசு தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது .

















Friday, September 15, 2023

Hattu Madha , Narkonda , himachal Pradesh

Hattu Madha , Narkonda , Himachal Pradesh

இந்தியாவின் மலை மாநிலமான ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள சிம்லா , ஆங்கிலேயர் ஆட்சியின்போது நம் நாட்டின் கோடைகால தலைநகராக விளங்கியது . அப்போதுமட்டுமல்லால் தற்போதும் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் தளமாக உள்ளதால் நெரிசலான இடமாக மாறி உள்ளது . 

சிம்லாவில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள  ஒரு சிறிய நகரம் நார்கண்டா . இது இந்தியா - திபெத் சாலையில் அமைந்துள்ள அமைதியான , அதிக சுற்றுலா பயணிகள் பயணிக்காத இடமாக உள்ளது .  நார்கண்டாவில்  இருந்து 8km தொலைவில் உள்ளது ஹட்டு மாதா கோயில் . இக்கோயிலை பற்றி காண்போம் .

சிம்லாவில் உள்ள உயரமான சிகரங்களில் ஒன்றான ஹட்டு சிகரத்தில் ஸ்ரீ ஹட்டு மாதா என்னும் காளி கோயில் அமைந்துள்ளது .  ராவணனின் மனைவியாக மண்டோதரி தான் ஹட்டு மாதா  என்றும் நம்பப்படுகிறது . 

 இக்கோயில் காண்பதற்கு சீன கோயில் போல காட்சியளிக்கிறது . கண்ணாடி மற்றும் கோயிலை சுற்றி முழுவதும் மரத்தால் கட்டப்பட்டுள்ளது . இக்கோயிலில் உள்ள சிற்பங்கள் நம் இதிகாசங்களான  இராமாயணம் மற்றும் மகாபாரத காட்சிகளை சித்தரிக்கின்றன . இக்கோயிலை சுற்றி உள்ள மலைகளில் ஆப்பிள் மரங்களால் சூழப்பட்டுள்ளது . சூரிய அஸ்திமானத்தை காண்பதற்கு ஏற்ற இடமாக இத்தலம் விளங்குகிறது .