Sunday, December 6, 2020

Saumyakesava perumal temple , Nagamangala , Mandya district

 நாகமங்களா , மாண்டியா மாவட்டத்தில் உள்ள சிறிய நகரம் ஆகும் .  இவ்வூரின் மையப்பகுதியில் 12ம் நூற்றாண்டை சேர்ந்த "சௌமியகேசவ" கோயில் அமைந்துள்ளது .  நாகமங்களா , கங்கர் காலத்தில்  கல்கனி நாடு என்று அழைக்கப்பட்டது  . 

ஹொய்சால மன்னரான பிட்டிதேவன் முதலில் சமணராக இருந்து , பின்னர் ராமானுஜரால் வைணவத்தின் மீது பற்று கொண்டு வைணவராக மாறி  தன் பெயரை விஷ்ணுவர்தன் என்று மாற்றிக்கொண்டார் . இவர் காலத்தில்  கர்நாடகாவில் வைணவம் தழைத்து  இருந்தது .  இவர் வழி வந்த இவரது பேரனான இரண்டாம் வீர வல்லாளன் (1173) , நாகமங்களாவில் வைணவ கோயில் கட்டினார் .  இக்கோயில்  " வீர வல்லாள சதுர்வேதி பட்டாரநகர" என்று முதலில் அழைக்கபட்டது . காலப்போக்கில் இப்பெயர் மருவி சௌமிய கேசவ கோயில் என்று அழைக்கப்பட்டது. மற்ற ஹொய்சாளர் கோயில்களை போல் அல்லாமல் கலைப் பணியில் இக்கோயில் முழுமையடையாமல் இருக்கிறது .  கருவறையின் முன்பு உள்ள தூண்களில் , நான்கு தூண்கள் வட்ட வடிவத்திலும் , இரண்டு தூண்கள் மிக அழகிய வேலைப்பாட்டுடன் காணப்படுகிறது. பல கோணங்களில் அமைந்த மேடையின் மீது கோயில் கட்டப்பட்டுள்ளது .  மேடையின் மேற்பகுதி வலம் வரும் பாதையாக பயன்படுகிறது . பின் வெளிப்புறத்தில் மற்ற கோயில்களில் காணப்படும் ஹொய்சாலர்களின் சிறப்பு சிற்பங்கள் இங்கு இல்லை . 

ஹொய்சாளர்களை தொடர்ந்து இப்பகுதியை ஆண்ட விஜயநகர பேரரசு முகமண்டம் அமைத்து இக்கோயிலை விரிவுபடுத்தினர்.  கல்வெட்டுகளில் மூலவரை சென்னக்கேசவா என்று குறிப்பிடப்பட்டுகிறது . இக்கோயில் மாண்டியா மாவட்டத்தின்  முக்கியமான வைணவத் தலம் ஆகும் .











No comments:

Post a Comment