Sunday, December 6, 2020

Sri lakshmi narasimhar temple , Marehalli

மாரெஹள்ளி (Marehalli ) என்னும் ஊர்  மைசூரிலிருந்து 53km தொலைவில் உள்ளது . இங்குள்ள பழமையான லக்ஷ்மிநரசிம்மர் கோயில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டுள்ளது . இதன் பழைய பெயர் ராஜாச்சிரய ( rajasraya ) விண்ணகரம் . ராஜராஜசோழன், மேலைச்சாளுக்கிய மன்னரான சத்தியாசிரயனை வென்றதால் அவருக்கு "ராஜாச்சிரயன்" என்ற பட்டப்பெயர் சூட்டிக்கொண்டார் .  தன் பெயராலேயே இங்கு ஒரு கோயில் கட்டி  அதற்கு ராஜசிரய விண்ணகரம் என்றும் பெயர் வைத்தார் .  சோழர்கள் காலத்தில் கருவறை மட்டும் கட்டப்பட்டது . பின்பு இப்பகுதியை ஆண்ட ஹொய்சாலர் , விஜயநகர பேரரசுகள் மற்றும் மைசூர் உடையார்கள் இக் கோயிலை புனரமைத்து உள்ளனர் . 

இக்கோயிலில் கருவறை மட்டுமே ராஜராஜ சோழனால் கட்டப்பட்டு உள்ளது  . முகமண்டபம் , பிரகாரத்தில் உள்ள தூண்கள்  சோழருக்குப் பின் ஆட்சி செய்த  ஹொய்சால , விஜயநகரப் பேரரசுகளால் கட்டப்பட்டு உள்ளது .  இக்கோயிலில் 108 தூண்கள் உள்ளன. இக்கோயிலில் உள்ளே பூமாதேவி , நிலா தேவி ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன . கோயிலுக்கு வெளியே பிற்காலத்தில் கட்டப்பட்ட சிவன் ஆலயம் உள்ளன .

இக்கோயிலில் இராஜராஜ சோழனின் கல்வெட்டுகள் எதுவும் இல்லை . ஹொய்சால மன்னர் விஷ்ணுவர்தனின் தமிழ் மற்றும் கன்னட கல்வெட்டுகள் உள்ளன . கி.பி. 1148 ஆம் ஆண்டு   வடகரை நாட்டை சேர்ந்த காஞ்சனுரை தேவதானமாக கொடுக்கப்பட்டதாக விஷ்ணுவர்தன் கல்வெட்டு கூறுகிறது . விஷ்ணுவர்தன் காலத்தில் இக்கோயில் "சிங்கப்பெருமாள் கோயில்" (நரசிம்ம - சிங்கம் ) என்று அழைக்கப்பட்டது.
விஜயநகரப் பேரரசு மற்றும் மைசூர் வாண்டையார் ஆகியோரின்  கன்னட கல்வெட்டுகள் உள்ளன . இக்கோயில் மாண்டியா மாவட்டத்தில் உள்ள முக்கிய வைணவ தலங்களில் இதுவும் ஒன்று .









No comments:

Post a Comment