இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ளது திருப்புல்லாணி அரண்மனை. இந்த அரண்மனை "இருபத்தோரு அறை அரண்மனை " என்று அழைக்கப்படுகிறது .
சேதுபதி சீமையை ,கி.பி 1676 - 1710 ஆம் ஆண்டு வரை ஆண்ட ரகுநாத கிழவன் சேதுபதியின் அந்தப்புர அரண்மனை இது . சேதுபதி மன்னர்களின் வீழ்ச்சிக்குப்பின் இந்த அரண்மனை பயன்படுத்தாமல் இருந்திருக்கிறது . தற்போது பாழடைந்த நிலையில் காட்சி தரும் இந்த அரண்மனை பற்றி பல சுவாரஸ்ய தகவல்கள் உலவுகின்றன.
இந்த அரண்மனையை கட்டிய மன்னருக்கு 21 மனைவிகள் இருந்ததாகவும் அதனாலேயே இந்த அரண்மனையில் 21 அறைகள் வைத்து மன்னர் கட்டியதாகவும் இங்குள்ள மக்கள் கூறுகிறார்கள் . இந்த அரண்மனை கட்ட சுண்ணாம்பு ,கடுக்காய் ,வில்வம் பழம் மற்றும் பச்சிளம் தாய்மார்களின் தாய்ப்பாலை கொண்டு கட்டியதாகவும் கதைகள் உலவுகின்றன . தற்போது மிகவும் சிதிலமடைந்த நிலையில் இந்த அரண்மனை காட்சியளிக்கிறது.
No comments:
Post a Comment