ஈரோட்டிற்கு மேற்கே 21கிமீ தொலைவில் திங்களூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது நிச்சாம்பாளையம் கிராமம். இங்கு ஊருக்கு தெற்கே சுமார் 50 ஏக்கர் பரப்பளவிலான பெருங்கற்கால ஈமக்காடு உள்ளது.
இந்த ஈமக்காட்டில் நிறைய கற்பதுக்கைகளும், மேலே கற்பலகைகள் கொண்டு மூடப்பட்ட ஈமத்தாழிகளும் நிறைய கிடைக்கின்றன. இங்கு மிகப்பெரிய 17அடி உயரமுள்ள குத்துக்கல் இரண்டு உள்ளன. அதனைச் சுற்றி கல்வட்டங்களும் காணப்படுகின்றன. நிறைய கல்வட்டங்கள் சிதைந்த நிலையிலும் கற்பதுக்கைகள் மண்மூடியும் காணப்படுகிறன.
மேலும் இங்கு இரும்பு உருக்கு தொழிற்சாலை இருந்ததற்கான தடயங்கள் காணப்பட்டதாக அகழாய்வு அறிக்கைகள் கூறுகின்றன. அதற்கேற்ப நிறைய இரும்பு உருக்கு எச்சங்களும் காணக்கிடைக்கின்றன.
#konguhistory 42
No comments:
Post a Comment