ராமேஸ்வரம் செல்லும் வழியில் உள்ளது குந்துக்கல் . 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் சேதுபதி மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி இது . கி.பி 1858 - 1903 ம் ஆண்டு வரை இப்பகுதியை ராமநாதபுரம் மன்னரான பாஸ்கர சேதுபதி ஆட்சி செய்து வந்தார் . இவர் சமயத்துறையில் சிறந்த தொண்டுகள் புரிந்துள்ளார் .
கி .பி 1893 இல் அமெரிக்காவில் உள்ள சிக்காகோ நகரத்தில் உலக சமய மாநாடு நடந்தது .
அம்மாநாட்டில் கலந்து கொள்ள தனது சொந்த செலவில் விவேகானந்தரை அனுப்பி வைத்தார் . அங்கு விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவு உலக மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது . இவரின் ஆன்மீக தத்துவங்கள் மீது அமெரிக்க மக்களுக்கு ஈடுபாடு ஏற்பட்டது . அதனால் "இராமகிருஷ்ண மிஷன்" என்ற பெயரில் இந்து சமய தொண்டு நிலையத்தை ஆரம்பித்தார் .
இதைத்தொடர்ந்து சுவாமி விவேகானந்தர் ஏறத்தாள நான்கு ஆண்டுகள் அமெரிக்கா,கனடா ,இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்குச் சென்று விட்டு இலங்கையில் உள்ள கொழும்பு வழியாக தாயகம் திரும்பினார் . 1897ம் ஆண்டு விவேகானந்தர் தாயகம் திரும்பிய போது அவரை பாஸ்கர சேதுபதி மன்னர் நேரே சென்று பாம்பன் துறைமுகத்தில் வரவேற்றார் .
சுவாமி விவேகானந்தர் முதலில் வந்து இறங்கிய இடமான சேது நாட்டின் பாம்பன் துறைமுகத்தில் அவரின் வருகையின் நினைவாக நினைவுச் சின்னம் ஒன்றை எழுப்பினார் . அவரின் வருகையை என்றென்றும் நினைவூட்டும் வகையில் ஒரு கல்வெட்டினை அங்கு அமைத்தார் . ஆனால் அது தற்போது காணப்படவில்லை . அங்கு உள்ள நினைவு மண்டபத்தில் பாஸ்கர சேதுபதி அவர்களின் உருவச்சிலையும், விவேகானந்தரின் உருவச் சிலையும் உள்ளன .
No comments:
Post a Comment