கற்றான் காணி (கத்தாங்கண்ணி ) மிகவும் பழமையான ஊராகும். இந்த ஊர் வீரசோழ சதுர்வேதி மங்களம் என அழைக்கப்பட்டது .வேதம் கற்ற பிராமணர்களுக்கு தானமாக வழங்கபட்டதால் இது கற்றான் காணி என அழைக்கப்பட்டது .
சங்க இலக்கியத்தில் இவ்வூரைப் பற்றி குறிப்பு காணப்படுகிறது . இவ்வூரில் நின்மானீஸ்வரர் கோயில் ,சொக்க பெருமாள் கோயில் மிகவும் பழமையான கோயிலாகும் . இக்கோயில்களில் கொங்கு சோழர் , கொங்கு பாண்டியன் காலத்து கல்வெட்டுகள் நிறைந்து காணப்படுகிறது .
இங்கு கொங்கு சோழர் வீரரசேந்திரன் (கி.பி .1221) கொங்கு சோழர் குலோத்துங்கன் ( கி.பி 1158 ) கொங்கு சோழர் வீர நாராயணன் ( கி.பி. 1129 ) போசளர் வீரவல்லாளதேவர் (கி. பி .1315) உம்மத்தூர் நஞ்சணராயர் ( கி.பி. 1518 ) ஆகியோர் கல்வெட்டு உள்ளது.
நிர்மாணிசுவரருக்கு வீரரசேந்திரன் நேரடியாக அளித்த கொடை பற்றி செய்தி உள்ளது . குறும்பு நாட்டுத் தென்பகுதிக்கு வீரசோழ வளநாடு என்று பெயர். கிரகணம் ஏற்பட்டபோது அதனால் வரும் தீமைகளையத் தவிர்க்க வரி எதுவும் இல்லாத ஆறு மாநிலத்தை வீரசோழ சதுர்வேதி மங்களம் ஆகிய கத்தாங்கண்ணி நின்மணீசுவரர்க்கு கொடையாக அளிக்கப்பட்ட கல்வெட்டு உள்ளது.
கொங்கு சோழர் குலோத்துங்கன் கத்தாங்கண்ணி நின்மணீசுவரர் கோயிலில் அவிநாசி வீரப் பெருமாள் வீரபாணம் பெருமாள் ஆகியோர் திருமுகத்தின் படி அளித்த 15 கழுஞ்சு பொன்னால் சிவபிராமனர் இருவர் நாள் தோறும் அம்மனுக்கு நாழி அரிசியால் திரு அமுது படைக்கவும் ஐந்து விளக்குகள் எரிக்கவும் ஒப்புக்கொண்டதை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
இக்கோயில் ஒரு காலத்தில் வெகு சீரும் சிறப்புமாக விளங்கி இருக்கிறது.
கத்தாங்கண்ணி, திருப்பூர் மாவட்டம்
No comments:
Post a Comment