சிம்லாவில் இருந்து காசா செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 16 km தொலைவில் அமைந்துள்ளது கால்பா என்னும் சிறிய நகரம் . இது சட்லஜ் நதியின் கரையில் அமைந்துள்ளது . இமயமலையின் சிகரங்களில் ஒன்றான கின்னார் கைலாஷ் என்னும் சிகரத்தை இங்கிருந்து எளிதாக காண முடியும் . இந்த சிகரத்தில் உள்ள ஒரு மலைப்பாறை இந்து கடவுளான சிவலிங்கத்தை போன்று காட்சியளிப்பதால் இச்சிகரத்திற்கு கைலாஷ் என்று பெயர் . பணியால் மூடப்பட்ட இந்த மலை சூரிய அஸ்தமனத்தின் போது சூரிய ஒளிபட்டு தங்கம் போல் மின்னுவதை நாம் காண முடிகிறது . இங்கும் ஓரளவு தெளிவான வானம் இரவு நேரத்தில் இருப்பதால் இங்கிருந்து பால்வீதியை காண முடிகிறது . இந்தியாவின் முதல் வாக்காளராக ஷியாம் சரண் சுகி கால்பாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .
No comments:
Post a Comment