சண்டிகர் :
பஞ்சாப் , ஹரியானா என இரு மாநிலங்களின் தலைநகர் சண்டிகர் அது மட்டுமல்லாமல் , இந்தத் தலைநகரே ஒரு யூனியன் பிரதேசமாகவும் விளங்குகிறது . இந்தியாவில் திட்டமிட்டு கட்டப்பட்ட நகரங்களில் ஒன்றாக விளங்கும் சண்டிகர் , ஜவஹர்லால் நேருவின் "கனவு நகரம் " என்றும் போற்றப்படுகிறது . 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பின் உருவாக்கப்பட்ட நகரமாகும் (planned city ) . இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது பஞ்சாப்பின் அப்போதைய தலைநகரான லாகூர் பாகிஸ்தான் வசம் சென்றது . இந்தியா வசம் இருந்த பஞ்சாபின் கிழக்குப் பகுதிகளுக்கு தலைநகருக்கான தேவை ஏற்பட்டது . மார்ச் 1948 இல் இந்திய அரசுடன் கலந்த ஆலோசித்த பஞ்சாப் அரசு , புதிய தலைநகருக்கான இடமாக அம்பாலா மாவட்டத்தில் உள்ள சிவாலிக் மலைகளின் அடிவாரத்தில் உள்ள நிலப்பகுதியை தேர்ந்தெடுத்தது . சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவகர்லால் நேரு இத்திட்டத்தை ஆர்வத்துடன் ஆதரித்து அதனை செயல்படுத்துவதில் தொடர்ந்து அக்கறை காட்டினார் . ஏப்ரல் 2 , 1952 இல் எதிர்கால தேசத்தின் நம்பிக்கையின் வெளிப்பாடாகவும் இந்தப் புதிய தலைநகர் இருக்கட்டும் என அறிவித்தார் .
புதிய தலைநகருக்கு " சண்டிகர் " என பெயர் சூட்டப்பட்டது . இது பஞ்சாபியர்களின் வீர உணர்வின் அடையாளமாகவும் , சண்டி தேவியின் பெயருடன் தொடர்புடையதாகவும் கருதப்படுகிறது . புதிய தலைநகரை உருவாக்க இந்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சுவிஸ் நாட்டை சேர்ந்த கட்டிடக்கலை கலைஞர் லீ கார்பூசியர் (Le Corbusier ) . இவரின் யோசனையால் தான் புதிதாக உருவாக்கப்பட்ட சண்டிகர் நகரம் நன்கு திட்டமிடப்பட்டு , வரையறுத்தப்பட்ட பகுதிகளாகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது . நகரம் முழுவதும் பல செக்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளது . இரு மாநிலங்களின் தலைநகரமாக இருப்பதால் இரு மாநிலங்களின் நிர்வாக தலைமையகம் இங்குதான் அமைந்துள்ளது . எனவே இங்கு அதற்கு தேவையான அகலமான சாலைகள் , திட்டமிடப்பட்ட கட்டிடங்கள் , நீர் நிலையங்கள் , மருத்துவம் , தபால் அலுவலகம் , சந்தை போன்ற அனைத்து அத்தியாவசிய வசதிகளையும் கொண்டுள்ளது . ஒவ்வொரு செக்டரில் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே பூங்கா , கடைகள் , ஹோட்டல்கள் , சமூதாய கூடங்கள் , பள்ளிகள் என தனித்தனி பகுதிகள் உருவாக்கபட்டுள்ளது . அனைத்து கட்டிடங்களும் இரண்டு அடுக்குகள் மட்டுமே உள்ளதால் போக்குவரத்து நெரிச்சல் இல்லை , மிதிவண்டிகளுக்கு என பெருஞ்சாலையில் தனியே இடம் ஒத்துக்கப்பட்டுள்ளதால் இங்கு மிதிவண்டியில் செல்பவர்கள் அதிகம் அதுமட்டுமில்லாமல் மிதிவண்டிகள் ஆங்காங்கே வாடகைக்கு நிறுத்தப்பட்டுள்ளது . நகரம் முழுவதும் செக்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளதால் எந்த பகுதிகளிலும் யார் பெயரிலும் வீதியோ தெருவோ இல்லை . செக்டர் எண் மற்றும் வீட்டின் எண்ணை கொண்டே நாம் செல்லும் நண்பர்கள் வீட்டை அடையமுடியும் . நீளமான மற்றும் அகலமான நேரான சாலைகள் , சந்திப்புகளில் அழகான ரௌடானாக்கள் அதில் தெளிவாக எழுதப்பட்ட செக்டர் எண்கள் , சாலையின் இரு புறமும் பெரிய பெரிய மரங்கள் மற்றும் அழகிய பூக்கள் , போக்குவரத்து நெரிசல் மற்றும் ஹாரன் சத்தமில்லாத சாலைகள் என ஊரே அமைதியாகவும் அழகாகவும் காட்சியளிக்கிறது . இது இந்தியாவின் கனவு நகரமாக விளங்குகிறது . இங்கு சுற்றுலா தலங்கள் பல இருந்தாலும் மிக முக்கியமான சுற்றுலா தலமான "ராக் கார்டன்" (Rock Garden ) பற்றி காண்போம் .
Rock Garden :
Nek Chand :
நெக் சண்ட என்பவர் டிசம்பர் 15ஆம் தேதி 1924 ஆம் ஆண்டு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள (Barian Kalan) பரியன் காலன் என்னும் இடத்தில் பிறந்தவர் . 1947ம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் பிரிவினையில் அப்பகுதி பாகிஸ்தானுக்கு உட்பட்ட பகுதியானது . அதனால் அவர் இந்திய பகுதிக்கு குடியேறினார் . அப்போது பஞ்சாப் ஹரியானா மாநிலங்களுக்கு தலைநகராக புதிதாக ஒரு பெரு நகரம் வடிவமைக்க இந்திய அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஸ்விஸ் கட்டிடக்கலைஞர் லீ கார் (Le Corbusier ) . புதிய தலைநகர் உருவாக்கத்தில் சந்துவுக்கு பொதுப்பணி துறையில் சாலை ஆய்வாளராக வேலை கிடைத்தது . 1958 ஆம் ஆண்டு தொடங்கி தனது ஓய்வு நேரத்தில் நகரை ஒட்டி உள்ள காட்டில் பழைய பொருட்களை சேர்க்க தொடங்கினார் . சண்டிகர் நகரம் கட்ட பயன்பட்ட பொருட்களின் கழிவுகளைக் கொண்டு சாண்டால் உருவாக்கப்பட்ட தோட்டமே ராக் கார்டன் .
சுமார் 12 ஏக்கரில் உடைந்த பாட்டில்கள் , கண்ணாடிகள் , பீங்கான்கள் , வளையல்கள் , ஓடுகள், உலோக கம்பிகள் என பல தூக்கி எறியக் கூடிய பொருட்களைப் பயன்படுத்தி பூங்கா கட்டப்பட்டுள்ளது . இதில் கட்டிட கழிவுகளைக் கொண்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட நீர்வீழ்ச்சி , வாய்க்கால்கள் மற்றும் பல சிற்பங்களை கொண்டுள்ளது . பல நூறு எண்ணிக்கையிலான விலங்கு சிற்பங்கள் , மனித உருவ சிற்பங்கள் எல்லாம் மறு சுழற்சி செய்யப்பட்ட பல வகையான உலோகத்தின் மீது கான்கிரீட் முலாம் பூசப்பட்டு உள்ளது .
உருவங்கள் மற்றும் மண்பாண்டங்கள் , பீங்கான் துண்டுகள் , கண்ணாடி பாட்டில்கள் , தொப்பிகள் என அறிய வகையான நிராகரிக்கப்பட்ட பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது . இந்த ராக் கார்டன் உலக அளவில் புகழ் பெற்று சுற்றுலா தலமாக விளங்குகிறது . இன்று உள்ள சுற்றுச்சூழலில் பழையதைக் கொண்டே உருவாகும் பொழுதுபோக்கு பூங்கா என்பது அவசியமான ஒன்றே .