ராஜராஜசோழன்கல்வெட்டுகள்
தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் உள்ள தொடர்பு தொன்மையானது. தஞ்சையை ஆண்ட சோழர்கள் கர்நாடக பகுதியின் மீது படையெடுத்து தங்கள் ஆதிக்கத்தை விரிவுபடுத்தினர் . சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் சோழர்கள் அங்கு ஆட்சி செய்துள்ளனர் . அங்கு சோழர்களின் கல்வெட்டுக்கள் தமிழ் , கன்னடம் என இரு மொழிகளிலும் காணப்படுகின்றது .
மாண்டியா மாவட்டத்தில் உள்ள பன்னூர் என்னும் ஊர் முதலில் வன்னியூரான ஜானார்த்தன சதுர்வேதி மங்கலம் என்றும் , பின்பு விஜயநகர பேரரசு காலத்தில் வாகினிபுரம் என்றும் அழைக்கப்பட்டுள்ளது .
மைசூரிலிருந்து 33 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இவ்வூரில் ஹனுமந்தீஸ்வரா என்னும் கோயில் உள்ளது . இக்கோயில் இப்பகுதியின் மிகப்பழமையான கோயில் ஆகும் . இப்பகுதி முதலில் கங்கர் வசம் இருந்தது போது ஸ்ரீ புருசா என்னும் கங்கமன்னரால் இங்கு ஒரு அழகிய கோயில் கட்டப்பட்டுள்ளது . மூலவர் பகுதி மட்டும் கட்டப்பட்டு இருந்த இக்கோயில் , ராஜராஜ சோழரால் விரிவுபடுத்தப்பட்டுள்ளது . இக்கோயிலில் உள்ள கன்னட கல்வெட்டில் ராஜராஜ சோழரது மெய்க்கீரத்தி ஆன "திருமகள் போல்" என்று ஆரம்பிக்கும் மெய்கீர்த்தி ஏழு வரிவரை உள்ளது . இவற்றுடன் ராஜராஜசோழன் இக்கோயிலின் திருமுற்றம் கட்டுவதற்காக நிலம் கொடையாக கொடுத்த செய்தியும் உள்ளது . மகாஜன சபையோருக்கும் தத்தனூர் வணிகர்களுக்கும் கோயில் கட்ட நிலம் கொடையாக கொடுத்த செய்தி தமிழில் உள்ளது . விஷ்ணுவர்தன் கொடை கொடுத்த செய்தி கன்னட மொழியில் உள்ளது . அக்கல்வெட்டில் "வடகரை நாட்டு வன்னியூரான ஜனார்த்தன சதுர்வேதிமங்கலம்" என்று இவ்வூர் குறிப்பிடுகிறது . இங்கு கங்கர்கள் , சோழர்கள் , ஹொய்சளர்கள் , விஜயநகர பேரரசு , மைசூர் உடையார்கள் ஆகியோரின் கல்வெட்டுக்கள் உள்ளன . தற்போது இக்கோயில் மிகவும் பராமரிப்பு இல்லாமலும் கல்வெட்டுகள் அனைத்தும் புதைந்த நிலையில் சிதைக்கப்பட்ட நிலையிலும் உள்ளன . இக்கோயிலின் கல்வெட்டு செய்திகளை மைசூர் ஆவணங்களிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம் .
No comments:
Post a Comment