Friday, February 26, 2021

கொடுமணல் பெருங்கற்கால சின்னங்கள் அகழாய்வு, கொடுமணல், ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு.

தமிழகத் தொல்லியல் துறை 1997 மற்றும் 1998ல் கொடுமணல் பெருங்கற்கால ஈமச்சின்னங்களை அகழாய்வு செய்தது . அங்கு இருந்ததிலேயே பெயரிதும் நல்ல நிலையில் உள்ளதுமான ஒரு கல்வட்டத்துடன் கூடிய கற்பதுக்கை அகழாய்வுக்கு தேர்ந்து எடுத்து ஆய்வு மேற்கொண்டனர் . இந்த ஈமச்சின்னமானது ஒரு பெரிய கல் வட்டத்தினுள் ஒரு சிறிய கல்வட்டமும் அதனுள் கற்பலகையினால் ஆன ஒரு வட்டமும் அதன் நடுவே கற்பதுக்கை பல அறைகள் கொண்டதுமாக இருந்தது . 

இப்பெருங்கற்கால சின்னத்திலிருந்த தாழி ஒன்று எடுக்கப்பட்டது . அதனுள் மானின் எலும்பும் அரியவகை கல்மணிகள் (7000) , கோடாரி உள்ளிட்டவை இருந்தன. மேலும் அருகில் நீண்ட வாள் ஒன்று கண்டுபிடிக்கபட்டது . வாள் அருகே மானின் எலும்புகள் கிடைத்துள்ளதால் உயிர்ப்பலி சடங்கு  நடந்தப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர் . 

மேலும் கற்பதுக்கைகள் அடுத்தடுத்த அறையில் ஈமச்பொருட்களுடன் கூடிய கருப்பு சிவப்பு பானைகள் , அம்பு முனைகள் , வாள், கத்தி , கோடாரி, வில் உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன . இதன் மூலம் இந்த மிகப்பெரிய ஈமச்சின்னமானது வீரன் அல்லது தலைவனுக்காக இருக்கலாம் . 
இதற்கு அடுத்து அருகில் இருந்த மேலும் சில ஈமச்சின்னங்களை அகழாய்வு மேற்கொண்டதில் இரும்பு கத்திகள், கல்லாலான ஜாடிகள் , சூது பவள மணிகள் , அம்பு முனைகள் மற்றும் இரும்பாலான பொருட்கள் கிடைத்தன .
மேற்கொண்ட இந்த ஈமச்சின்ன அகழாய்வுகளில் ஒருந்து பெருங்கற்காலத்திலேயே இங்கு மக்கள் நல்ல நாகரீகத்துடன் வாழ்ந்து உள்ளனர் என்று கருதலாம் .


தொடரும்...

No comments:

Post a Comment