மேட்டூர் பகுதியில் உள்ள பன்னவாடியில் பாயும் காவேரி ஆற்றின் இடதுபுறத்தில் தர்மபுரி மாவட்ட நாகமரை, நெருப்பூர், பென்னாகரம் ஆகிய ஊர்களும் வலது பகுதியில் சேலம் மாவட்ட மேட்டூர், கொளத்தூர், பன்னவாடி உள்ளிட்ட கிராமங்களும் இருந்து வருகின்றன. இந்த இரண்டு மாவட்டத்தின் எல்லைகளையும் காவேரி ஆற்றை கடந்தால் எளிமையாக செல்லமுடியும். அதனால் ஆற்றை கடக்க விசை படகுகள் பயன்படுத்தபடுகிறது . அணையின் நீர் மட்டத்தை பொறுத்து சவாரியின் தூரம் மற்றும் கடினம் அமைகிறது . நீர் இல்லாத சமயத்தில் கூட ஆற்றை நடந்து கடக்க பணம் செலுத்த வேண்டும் .
No comments:
Post a Comment