Wednesday, December 9, 2020

மதுரை , தெப்பத்துப்பட்டி பொக்கிஷநாதர்கோயில்

மதுரை ,விக்கிரமங்கலம் - உசிலம்பட்டி செல்லும் வழியில் அமைந்துள்ளது தெப்பத்துப்பட்டி பொக்கிஷநாதர் கோயில் .  பழமையான முழுக்கற்றளியாக  காணப்படும் இக்கோயில் பிற்கால பாண்டியர் கால கோயிலாக கருதப்படுகிறது.   இங்கு கல்வெட்டுகள் எதுவும் காணப்படவில்லை . இக்கோயிலின் கருவறை விதானத்தின் வடகிழக்கு மூளையில் சதுரவடிவ ஓட்டை உள்ளதால் இதனை "ஓட்டை கோயில்" என்று இவ்வூர் மக்கள் அழைக்கின்றனர் . கருவறை பிற்கால பாண்டியர்கள்தாகவும் முன் மண்டபம் விஜயநகர காலத்தை சேர்ந்ததாகவும் கருதப்படுகிறது . விமானம் இல்லாமல் காணப்படும் இக்கோயிலின் கருவறை கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, விநாயகர், லிங்கோத்பவர், பிரம்மா, காலபைரவர் ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன.  சப்தமாதர், விஷ்ணு ,துர்க்கை மற்றும் 5 அடி உயரம் உள்ள விநாயகர் ஒன்றும் இக்கோயிலில் காணப்படுகின்றன . 


 மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் சிறப்பே வெளியிலிருந்து பார்த்தால் கோயில் இருப்பது தெரியாதது போன்று அமைப்பு தான் . பாண்டியர்களின் முக்கியமான நகை ஆபரணங்கள் மற்றும் இதர பொக்கிஷங்களையும் பதுக்கி வைக்க இக்கோயிலை பயன்படுத்தினர் என்ற செய்தியும் செவி வழியாக  கூறப்படுகிறது .   இக்கோயிலின் பெயரும், அமைப்பும் அவ்வாறே உள்ளது . அழகான வேலைப்பாடுகள் உடன் காணப்படும்  இக்கோயிலுக்கு ,கோபுரமும் விமானமும் இல்லாமலிருப்பது ஆச்சரியப்படுத்துகிறது . பழமையாகவும் அழகாகவும் உள்ள இக்கோயிலுக்கு பராமரிப்பு குறைவாக உள்ளது .


















No comments:

Post a Comment