Wednesday, September 4, 2019

பாலி , இந்தோனேசியா Nusa dua Bali Indonesia

பாலி , இந்தோனேஷியாவின் அழகிய தீவு . இங்கு முஸ்லிம்களும் இந்துக்களும் அதிகம் வாழ்கிறார்கள் . அவர்களுக்கு அடுத்து கிறிஸ்தவர்களும், புத்த மதத்தைச் சேர்ந்தவர்களும் வாழ்கிறார்கள் . Nusa dua என்னும் இடத்தில் ஜெகநாதர் கோயில் ,  கிறிஸ்துவ தேவாலயம் , பள்ளிவாசல் , புத்தர் கோயில் ஆகிய அனைத்தும் ஒரே இடத்தில் அடுத்தடுத்து தடுப்பு சுவர் கூட இல்லாமல் உள்ளது  . அனைத்து மக்களும் ஒற்றுமையாக வந்து வழிபாடு செய்கிறார்கள்.

மர வேலைப்பாடுகளால் ஆன சிலைகளும்  கண்ணாடி உலோகத்தாலான பொருட்கள் ,வெள்ளி என ஷாப்பிங் செய்ய பாலித் தீவில் நீறைய இருக்கிறது . 

அடுத்து ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அங்கு நிறைய மக்களுக்கு டீ என்றால் என்னவென்றே தெரியவில்லை . வாசனையான காபித்தூள் விற்கிறார்கள் , வாங்கச் சென்றால் சைவ காப்பியா? அசைவ காப்பியா?  என்று கேட்கிறார்கள் .  அசைவ காப்பி என்றால் மங்கூஸ் என்ற விலங்கிற்கு காபி கொட்டையை உணவாகக்  கொடுத்து , அது உண்டு கழிக்கும் மலத்தில் இருந்து எடுத்த காபி கொட்டையை அரைத்து கொடுப்பதாம் . 

 அங்குள்ள சமையல் சிலிண்டர்கள் சுமார் இரண்டு கிலோ மட்டுமே உள்ளன .  அதுவும் நம் ஊரில் ஊரில் தண்ணீர் விற்பது போல பெட்டிக் கடையில் கூட கிடைக்கிறது .  அங்கு பெட்ரோல் விலை வெறும் 30 ரூபா மட்டுமே . அதனால் எந்த டிரைவர்களும் வண்டி என்ஜினை நிறுத்துவதில்லை , எப்போதும் ஏசி போட்டு அமர்ந்திருப்பதை  பார்க்கவே பொறாமையாக உள்ளது .

 அடுத்து அங்கு உள்ள ஹோட்டல்கள்  எங்கு சென்றாலும் குடிதண்ணீர் இலவசமாக தருவதில்லை . Buffet lunch (1300 /person ) சாப்பிட்டாலும் தண்ணீருக்கு தனியாக காசு கொடுக்க வேண்டியுள்ளது . தண்ணீருக்கு அடுத்து மிளகு தான் அங்கு டிமாண்ட் . ஹோட்டல் சென்று மிளகுப்பொடி கேட்டால் ஒரு சிறிய பாக்கெட் மட்டுமே தருகிறார்கள் . அதுவும் காரமில்லாத பொடி . நம் நாட்டின் மீது  இந்த மிளகுக்காகத்தானே நிறைய படையெடுப்பு நடந்தது . 

 தண்ணீர் விளையாட்டுகள் மசாஜ் சென்டர்கள் என சுற்றுலா செல்ல அமைதியான அழகான தீவு , பாலி.












No comments:

Post a Comment