Monday, August 23, 2021
Saturday, August 21, 2021
Sri Agneeswarar Temple/ ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயில், களக்காடு / Kalakkad, kanchipuram District, Tamil Nadunchipuram sipuram
Moolavar : Sri Agneeswarar.Some of the salient features of this temple are…The temple is facing east with a Nandi, balipeedam and a Vinayagar Sannidhi. ( the original nandi is kept on the ground on the east side). The east side wall has a jala. Moolavar is of swayambhu and slim baanam. In koshtam Vinayagar, Dakshinamurthy, Arthanareeswarar, Brahma and Durgai. Chandikeswarar is in the praharam. Dwarapalakas are at the entrance of sanctum sanctorum.
ARCHITECTUREThe temple consists of Sanctum sanctorum ( 4 meter square ), antarala, artha mandapam ( 5.5 meter square )and a mukha mandapam with the south side entrance. There is no super structure. The Adhisthana is of simple Padabandha with three patta kumuda.
The south side entrance mandapa with steps are constructed at a latter date. The unique features and Iconographic details of the Koshta sculptures are…
Dwarapalakas…One of the Dwarapalaka’s mazhu and hand are broken and are not similar. As per historians, both might have brought some where and installed.Vinayagar… Vinayagar is in lalitasana sitting posture with Karanda Maguda. He holds Angusa and akkamala. Vinayagar has a third eye on the forehead.
Dakshinamurthy… Dakshinamurthy holds Akkamala and Jwala / agni in the upper hands and one of the lower hand hold palm leaves and other hand is in chin mudra. Sitting in Veerasana.
Arthanareeswarar…. Arthanareeswarar is in place of Lingothbavar / Maha Vishnu. Looks cute with minute details. HISTORY AND INSCRIPTIONSConsidering the Ardhanareeswara on the west side wall koshtam and iconography of the sculptures, The Pidari Temple and Subramaniar Temple of the same Village Kalakattur, S R Balasubramanian assigned this Agneeswarar temple to the period of Aditya-I ( 870 to 907 CE ) of early Chozhas. The earliest inscription available in this temple belongs to Rajaraja-I ‘s ( 985 -1014 CE ), 3rd reign year inscription.
6 Inscriptions are recorded from this temple. Of these two belongs to Rajaraja-I, Two inscriptions belongs to Rajendran-I. As per the inscriptions this place Kalakattur was called as Jayankonda Chozha mandalathu Kaaliyur kottathu Eri-Kil Nattu ( Thiruvekambathu Salabhokathu - This Village consists of lands gifted to Brahmins schools ) Kalakattur. Lord Shiva was called as Uruni Alwar.
The Rajaraja-I’s 14th reign year ( 999 CE ) inscription, starts with his meikeerthi, records the real name as Arumozhi Devan and his Title as Mummudi Chozhan. As per the inscription… Rajaraja-I, instructed Vennaiputhurudayan Kadan Mayinthan of the same Village to burn a lamp for Rasavukkellam NanRaka – ராசாவுக்கெல்லாம் நன்றாக ( may be small regional kings ) & Bhumikkellam NanRaka – பூமிக்கெல்லாம் நன்றாக (the people ) ( for the well being of small regional Kings and the people ), at Kaaliyur Kottathu Eri- Kil Nattu Thiruvekambathu Salabhokathu Kalakattur Uruni Alwar. But Vennaiputhurudayan Kadan Mayinthan burn two perpetual lamps ( may be one for the King and other for the people ), for which Bhoomi / land of 1000 kuzhi was gifted to one perpetual lamp and Goats / sheeps for the other perpetual lamp. This inscription is an important one, since, it is an example of how the King considers the well beings of the citizens of his Country.
"ஸ்வஸ்திஸ்ரீ த(ண்)டேவிச் சாலைகலமறு த்துத் (தநிகைப்)பாடி (தன்)தழைக்காடு கொண்டார் நுளம்பபாடியோடுமேயத் தன்கங்கன் வளநாடும் வேங்கைநாடு மது கொண்டான் நித்தவிநோதநேரியநி (பவன்) அருமொழிதேவநேன்றேத்த மலர்த்தார் ஸ்ரீமும்முடிசோழற்கு கோ ராஜராஜராஜகேசரி பன்மற்கு யாண்டு யச ஆவது காலியூர்க்கோட்டத்தேரிகீழ் நாட்டுத் திருவேகம்பப்புறத்துச் சாலா போகக் களக்காட்டூர் ஊருணியாழ்வார்க் கு இவ்வூர் வெண்ணைப்புத்தூருடையா ன் காடன்மயிந்தன் இத்தேவர்க்கு (தின) மூன்றாவது இராசாவுக்கெல்லாம் நன்றாக பூமிக்கெல்லாம் நன்றாக ஒரு விளக்கு வைய் என்றுடையார் அருளுச் செய்ய எம்பெருமான் அருளுச்செய்த தாகில் இரண்டு விளக்கா வைக்கிறேன் என்று வைச்ச நுந்தா விளக்கிரண்டு ஒரு நுந்தா விளக்குக்கு பூமியும் ஒரு நுந்தா விளக்குக்கு ஆடும் ஒரு நுந்தா விளக்குக் கு வைச்ச பூமியாவது ஆயிரங்குழி....."
The Rajaraja-I’s 17th reign year inscription, is a fragmentary refers ( ARE 118 of 1923 ) the previous donors also and records a gift made by Van Kolambattadigal of Kusappur in Puzhal Kottam of Thondai Nadu.
The two inscriptions of Rajendra Chozha belongs to his 3rd reign year. In one ( ARE 120 of 1923 ), Kalakattur is said to be a salabhoga of Thiruvegambapuram in Eri-Kil Nadu. The other ( ARE 122 of 1923 ), records the gift of 5 cows for supplying curds / Curd rice naivedyam to the god Uruni Alwar of Kalakattur by the NallaRRur Madhyasthan ( Official ) of NallaRRur Nattu NallaRRur in Sengattu Kottam.
LEGEND:As per the legend, there was an argument between Vayu, Varuna and Agni. During this process Agni disappeared. Due to this people’s daily activities were paralyzed, Munis couldn’t do Yaga and couldn’t prepare naivedyam. To get relieved, Munis and Devas prayed to Lord Shiva. Pleased by the prayers Lord Shiva appeared and called Agni. Agni came with two faces, three legs, 4 horns and 7 hands with Jwala. Agni told that, he was acting like this with Vayu and Varuna to get the darshan of Lord Shiva. Agni worshiped Lord Shiva after creating a A Shiva Linga, on the place where Lord Shiva gave darshan. Hence Lord Shiva is called as Sri Agneeswarar.
It is believed that Suryan worships Lord Shiva of this temple. 3 days from April 2nd Sun rays falls on moolavar.
POOJAS AND CELEBRATIONSApart from oru kal pooja Maha Shivaratri is celebrated in a grand manner.
TEMPLE TIMINGSOru kala pooja is conducted by the priest Mr Rajendran and Devotees are advised to check with the priest before going to the temple.
CONTACT DETAILSMr Rajendram may be contacted on his mobile +91 8825806065, for further details.
HOW TO REACHThe temple is about 1.7 KM from the Village Kalakattur on the base of the tank bund.Kalakattur is 11.9 KM from Kanchipuram, 22.7 KM from Uthiramerur, 41 KM from Chengalpattu and 83 KM from Chennai.Nearest Railway station is Kanchipuram.
LOCATION OF THE TEMPLE: CLICK HERE
---OM SHIVAYA NAMA---
Tuesday, August 17, 2021
திருப்பூர் மாவட்டம் , தளவாய்ப்பாளையம் , அருள்மிகு காசி விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் திருக்கோயில்
மனிதன் தன்னையும் , தான் வாழும் இடத்தையும் அடையாளப்படுத்திக் கொள்ள பெயர்களை சூட்டிக் கொண்டான் . இவ்வாறு சூட்டப்பட்ட ஊர்களின் பெயர்களை ஆராயும்போது அவை வரலாற்றை சார்ந்ததாகவோ , மக்களின் வாழ்வியல் அல்லது பண்பாடு சார்ந்ததாகவோ உள்ளன . அவ்வாறு பார்க்கும்போது கொங்கு நாட்டில் உள்ள பல ஊர்ப் பெயர்களில் இரண்டு கூறுகள் இருக்கின்றன . முதற்பெயர் சிறப்பு பெயராகவும் , இரண்டாவது பெயர் பொது பெயராகவும் உள்ளது . கொங்கு நாட்டில் உள்ள "தளவாய்பாளையம்" என்னும் ஊரைப் பற்றி காண்போம் .
திருப்பூர் மாவட்டம் , வாய்ப்பாடி அருகே உள்ள பழமையான ஊர் "தளவாய்ப்பாளையம்" . ஊரின் முதற்பெயரான "தளவாய்" என்ற சொல்லுக்கு "தளம் ஒன்றின் தலைவன்" என்பது பொருளாகும் . அதாவது ஒரு படையின் அதிகாரத்தை தன்னகத்தே கொண்ட தலைவன் என்றும் பொருள் .
கிபி 14 ஆம் நூற்றாண்டில் விஜய பேரரசு தங்கள் பிரதிநிதிகளை தமிழகமெங்கும் அனுப்பி நிலையான ஆட்சியை ஏற்படுத்தினர் . இதுவே தமிழகத்தில் நாயக்கர் ஆட்சியின் தொடக்கம் ஆயிற்று . நாயக்கர்கள் ஆட்சியில் தளவாய்கள் (அமைச்சர் போன்ற அதிகாரி) நியமிக்கப்பட்டனர் . தளவாய் என்னும் பதவி அதிகாரமிக்க பதவியாக இருந்தது . பாளையத்தை காப்பவர்கள் பாளையக்காரர்கள் எனப்பட்டனர் . பாலையக்காரர்களுக்கு மேலான அதிகார பதவியில் இருப்பவர் தான் தளவாய் அதிகாரி .
அடுத்து இரண்டாவதாக உள்ள "பாளையம்" என்னும் பொதுப்பெயர் பற்றி காண்போம் . விஜயநகர பேரரசு ஆட்சியில் காடு அழித்து நாடு உருவாக்கும் போது புது ஊருக்கு பாளையம் என்று பெயர் வைக்கப்பட்டது . கொங்கு நாட்டில் பட்டி , தொழுவு போன்ற பெயர்கள் இருந்தன ஆனால் பாளையம் என்னும் பெயர் விஜயநகர பேரரசு ஆட்சிக்கு பின் நிறைய காணப்படுகிறது . பாளையக்காரர்கள் ஆண்ட பகுதிகளும் பெரும்பாலும் பாளையம் என முடியும். அதிகார பதவியின் பெயரில் உள்ள "தளவாய்ப்பாளையம்" ஊரில் உள்ள பழமையான கோயிலை பற்றி காண்போம் .
"அருள்மிகு காசி விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் திருக்கோயில்" என்னும் பெயரில் சுமார் 200 வருடங்கள் பழமையான சிவன் கோயில் உள்ளது . இக்கோயிலில் தட்சிணாமூர்த்தி , பைரவர் , முருகன் , ஆஞ்சிநேயர் சிற்பங்கள் உள்ளன . நாயக்கர் கால கட்டிட கலையில் இக்கோயில் விளங்குகிறது . இங்கு கல்வெட்டுகள் எதுவும் காணப்படவில்லை . சுவற்றின் மீது மீன் சின்னமும் முதலை போன்ற அமைப்புடன் ஒரு உருவமும் காணப்படுகிறது . தற்போது கிராமமாக உள்ள இவ்வூர் ஒரு காலத்தில் தளவாய் போன்ற அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பு பெற்ற ஊராக இருந்து இருக்கலாம் .
Friday, March 5, 2021
சமணக்கோவில், பூந்துறை , ஈரோடு மாவட்டம்
கொங்கு நாட்டின் 24 நாடுகளில் முதன்மையான நாடான "பழம்பூந்துறை" நாட்டின் தலைநகர் பூந்துறை . இங்கு 13ம் நூற்றாண்டை சேர்ந்த திகம்பர சமண கோயில் உள்ளது .இங்கு பார்சுவநாதர் மற்றும் இயக்கி பத்மாவதியின் உருவ சிலையும் உள்ளது . பார்சுவநாதர் சமணச் சிற்பத்தின் மேல் பெயிண்ட் அடித்து புதுப்பித்துள்ளனர். மேலும் பழைய கோவில் இடிக்கப்பட்டு புதிதாக முழுவதும் சலவைக் கற்களாலான கோவில் கட்டப்பட்டுள்ளது .
செங்கிஸ்கான் - முகில்
செங்கிஸ்கான்
ஆசிரியர் : முகில்
நாடோடிக் குழுக்களாக ஆங்காங்கே வசித்து வந்த மங்கோலிய இன மக்களை இணைத்து மிகப்பெரிய மங்கோலிய பேரரசை உருவாக்கியர் செங்கிஸ்கான் . ஒரு சாமானிய நாடோடியாக பிறந்து , தன் மனைவியை வேறு ஒருவன் கடத்தியபோது எதிர்த்துப் போரிட முடியாத வலிமையற்று இருந்த செங்கிஸ்கான் பின் எவ்வாறு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கினார் என்பதை இந்த புத்தகம் . முதலில் தனித்தனியாக இருந்த மங்கோலிய குழுக்கள் சிலவற்றை வென்றும் சிலவற்றை இணைத்தும் இப்பேரரசை உருவாக்கினார் . பின்பு சீன , ரஷ்யா என பேரரசின் எல்லையை விரிவுபடுத்தினார் .
இவரின் போர் தந்திரங்கள் , வலிமை குறைவாக இருந்த தன் குழுவினர் மேல் இவர் இவர் வைத்த நம்பிக்கை , போர்வீரர்களுக்கு இவர் ஏற்படுத்திய தன்னம்பிக்கை அதாவது பாசிட்டிவ் திங்கிங் வியப்பாக உள்ளது . போரில் வென்றாலும் அராஜகமாக நடக்காமல் சரணடைந்தவர்களை நல்லவிதமாக நடத்தியது , குடும்பம் , உறவினர்கள் என்று இல்லாமல் திறமையை மட்டுமே கண்டு பதவி கொடுப்பது , நண்பர்களை நம்புவது , பெண்களின் பாதுகாப்பு இப்படி பல செயல்களை இவரை மக்களின் மனதில் இடம் பெறச் செய்தது . இவரின் செயல் திட்டங்கள் வலிமையானதாகவும் நேர்மையானதாகவும் இருந்தது . படையின் திட்டமிட்ட செயல்பாடு , படையின் ஒழுக்கம் ஆகியன அவருக்கு வெற்றியை ஈட்டித் தந்தது மட்டும் அல்லாமல் , மாவீரன் அலெக்ஸாண்டரின் பேரரசை விட நான்கு மடங்கு பெரியதும் ,ரோம் பேரரசை விட இரண்டு மடங்கு பெரியதும் ஆன மங்கோலிய பேரரசை இவரால் உருவாக்க முடிந்தது . இவராலேயே சூரியன் உதிப்பதும் மறைவதும் மங்கோலிய பேரரசில் என்ற பெருமையை பெற்றது .
கிளியோபாட்ரா - முகில்
கிளியோபாட்ரா
ஆசிரியர் : முகில்
எகிப்து நாட்டின் பேரரசியும் உலக அழகியுமான கிளியோபாட்ராவின் பிறப்பு முதல் இறப்பு வரை நடந்த சம்பவங்களை பேசுகின்றது இந்தப் புத்தகம் . கிளியோபாட்ரா என்ற பெயரில் வரலாற்றில் நிறைய பெண்கள் இருந்தாலும் இது ஏழாவது கிளியோபாட்ராவைப் பற்றியது . நம் நாயகி ராஜ குடும்பத்தில் பிறந்து தன் பதவியையும் அதிகாரத்தையும் காப்பாற்ற இறுதிவரை போராடி இருக்கிறார் . ரோமப் பேரரசின் தலைவர்களான ஜூலியஸ் சீசரையும் , மார்க் ஆண்டனியையும் தன் காதலில் விழ வைத்து அவள் விருப்பப்படி ஆட்சி மாற்றம் செய்து இருக்கிறாள் . இறப்பை கூட தானே முடிவு செய்தது என பல திகிலூட்டும் நிகழ்வுகளை விவரிக்கிறது இந்த புத்தகம் .
அதிகாரம் , ஆடம்பரம் , அழகு , அதிகமான செல்வம் அனைத்தும் ஒருங்கே கொண்டவள் கிளியோபாட்ரா . கிளியோபாட்ரா தன் அழகை எவ்வாறு எல்லாம் பராமரித்தாள் என்பதை படிக்கும் போது நமக்கு வியப்பே மேலிடுகிறது . ஆலிவ் ஆயில் எண்ணை தேய்த்துக் குளித்தல் , உடல் தேய்த்துக் குளிக்க வழவழப்பான தகடு , கழுதை பால் குளியல் , கூந்தலுக்கும் காலுக்கும் மருதாணி , இயற்கை கிரீம்கள் , கண்ணுக்கு மை , உதட்டுக்கு சாயம் , வாசனை திரவியம் என பலவற்றை பயன்படுத்தி தினமும் இரண்டு மணி நேரம் குளித்து இருக்கிறாள் . நகைப் பிரியை , அதனால் தன்னை நகைகள் கொண்டு மேலும் அழகு படுத்தி இருக்கிறாள் . உயரம் குறைவாக இருந்ததால் ஹீல்ஸ் அணிந்து தான் வெளியே மற்றவருக்கு காட்சி தருவாள் .இப்படி கிளியோபாட்ராவின் தனிப்பட்ட வாழ்க்கையையும் அரசியல் வாழ்க்கையையும் முழுவதும் விவரிக்கிறது . பதவி மற்றும் அதிகாரம் மோகம் அன்றிலிருந்து இன்றுவரை மனிதனை எவ்வாறு எல்லாம் தொடர்கிறது என்பதைப் புரிந்து கொள்ள உதவும் இந்த புத்தகம் .
ராஜ வனம் - ராம் தங்கம்
ராஜ வனம்
ராம் தங்கம்
நாஞ்சில் நாட்டு வனத்தை நம் கண் முன்னே கொண்டுவந்து காட்டுகிறது இந்த புத்தகம் . நந்தியாறு , முகளியடி மலையில் உற்பத்தியாகிறது . மலையின் அடர்ந்த காட்டில் உற்பத்தியாகும் இந்த ஆற்றின் மூலத்தைக் காண ராஜேஷ் , கோபால் மற்றும் ஆன்றோ கிளப்புகிறார்கள் . பயணம் நெடுக அவர்கள் காணும் காட்சியே இந்த புத்தகம் .
வனத்திற்குள் செல்லும்போது அவர்கள் பார்த்த தவிட்டுக்குருவி கூட்டம் , காட்டுமாடு , நாகனை வாயன் , குரங்குகள் , மான்கள் , காட்டுத் தேள் என ஒவ்வொன்றைப் பற்றியும் விவரிப்பது மிக சுவாரசியமாக இருக்கிறது . காட்டுக்குள் செல்லும்போது பாதுகாப்புக்கு எடுத்துச் சென்ற அறுவாளால் தேவையில்லாமல் எந்த செடியையும் வெட்டாமல் நடந்து சென்றதை படிக்கும் போது நம் உள்ளம் நெகிழ்கிறது . மூங்கிலரிசி , சோலைமந்தி , சிறுத்தை என பலவற்றை பற்றி அறிய தகவல்களைச் சொல்லிச்செல்கிறார் ஆசிரியர் . பழங்குடி மக்களின் வனதெய்வத்தின் நம்பிக்கை நம்மையும் ஆட்கொள்கிறது .
பறவைகள் , பூச்சிகள் , பூக்கள் என ஒன்றுவிடாமல் விளக்குவது அருமை .கோபால் புலியை நேராக சந்தித்தது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது . கோபாலின் தந்தை ராஜசேகர் வனஅலுவலராக இருந்த போது அவர் பணியில் சந்தித்த அனுபவங்கள் நம்மை வியப்புக்குள்ளாக்கியது . வனத்தை நேசித்த வன அலுவலரான அவருக்கு நேர்ந்த இன்னல்களும் , யானையை காப்பாற்ற அவர் படும் கஷ்டங்களும் , யானைகளுடன் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது . மின்வேலி அமைப்பது விலங்குகளுக்கு எவ்வாறு இடையூறாக இருக்கிறது என்பதை நம்மால் உணர முடிகிறது .
கோபால் , ராஜேஷ் மற்றும் ஆன்றோவுடன் நாமும் வனத்திற்குள் சென்று வந்த நிறைவைத் தருகிறது இந்தப் புத்தகம் . வனத்திற்குள் செல்ல விரும்பும் மக்கள் இந்த புத்தகத்தை ஒரு முறையாவது படித்து விட்டு சென்றால் அங்கே நாம் கவனிக்க வேண்டியவற்றை அறிந்து கொள்ளலாம் . இயற்கை விரும்பிகள் அனைவரும் படிக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகம் இது .

















































