Friday, October 2, 2020

குரங்குநாதர் கோயில் , சீனிவாசநல்லூர் ,திருச்சி

 திருச்சிராப்பள்ளியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில் சீனிவாசநல்லூர் என்றழைக்கப்படும் ஊாில்  சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட குரங்குநாதர் கோயில் அமைந்துள்ளது .

சீனிவாச நல்லூர் குரங்கு நாதர் கோயில் கி. பி.9ம் நூற்றாண்டில் பராந்தக சோழனால் கட்டப்பட்டது. முதல் முதலாய் சோழர்களால் கட்டப்பட்ட கோயில்களில் ஒன்று.சிறு கோயில் என்றாலும் சுற்றி இருக்கும் சிற்பங்கள் சோழர்களின் கலை நுட்பத்தின் உதாரணமாக இருக்கின்றன. அதை விட முக்கியம் சோழர்களின் தக்ஷிணாமூர்த்தி , தெற்கு விமானத்தில். இப்படி ஒரு அழகான மூர்த்தி , இவ்வளவு முந்தைய காலகட்டத்தில் கண்டதில்லை. அதிலும் சுற்றியுள்ள கணங்களின் அம்சங்கள் பொறுமையாக பார்க்க வேண்டியவை. பிட்சாடனார் வடக்கு விமான சுவற்றில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார்.

துவாரபாலகர்கள் மற்றைய கோயில்களில் போல் அன்றி நேராக பாராது இருபுறமும் ஒரு புறமாக நின்று ஒரு கர்வத்துடன் பார்க்கிறார்கள்.சுற்று சுவற்றில் யாளி வரிசையும் ஒவ்வொரு மூலையிலும் மகர முகங்களும், அவற்றுக்கு கீழே சோழ கல்வெட்டுகளுமாக கோயில் முழுமை பெறுகிறது. கிழக்கு சுவற்றில் பராந்தகனின் நில நிவந்தகளின் கல்வெட்டு இருக்கிறது. 

இக்கல்வெட்டு சாசனத்தை பற்றி குடவாயில் பாலசுப்ரமணியன் "கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள் " என்ற புத்தகத்தில் கூறி இருப்பது : சாசனத்தை கூர்ந்து நோக்கும் போது ஸ்ரீ பலி பூஜைக்காக மத்தளம் ,கரடிகை, வெண் கலத்தாளம், பாடகம் ,எக்காளம் ஆகிய இசை கருவிகள் இசைக்கப்பெற்றன என்பதை அறிகிறோம். ஸ்ரீ பலி என்பது மூன்று சந்திப்பொழுதுகளிலும் , அர்த்தயாம பூஜையின் போதும் ,கோயிலில் அட்டதிக் பாலகர்களுக்கும் ,பெரிய பலி பீடத்தின் முன்பும் நடைபெறும் சிறப்பு வழிபாடு ஆகும். திருவிழா காலங்களில் எட்டு திக்குகளிலும் இராஜ வீதிகளில் இப்பலி பூஜை நிகழும். பலி என்பது உயிர் பலியன்று. ஸ்ரீ பலிகொள்ளும் தேவர் அல்லது அஸ்த்ர தேவர் என்னும் செப்புத் திருமேனியை ஒரு பூசகர் தன் தலை மீது சுமந்து ,பலி பீடங்கள் முன்பு நிற்க , அப்போது பலி பீடத்தில் அர்ச்சகர் ஸ்ரீ பலி பூஜை நிகழ்த்துவார். ஓர் ஆள் கையில் விளக்கினை ஏந்தி வர, பலி பீடத்தின் அருகே இசை கலைஞர்கள் நின்றவாறு பண்ணிசையை சிலர் பாட ,சிலர் முத்திரை சங்கு ஊத, சிலர் தோற்கருவிகளையும் ,சிலர் நரம்புக் கருவிகளையும் ,சிலர் துளைக்கருவிகளையும் ,சிலர் உலோக கருவிகளையும் இசைப்பர். திருக்கோயில் நர்த்தகி பலிபீடம்  முன்பு நின்ற வாறு ஹஸ்த முத்திரைகள் காட்டி நடனமாடுவார். திருவாராதனை செய்யும் அர்ச்சகர் அன்னம்,நீர்மலர் ஆகியவற்றைப் பலி பீடத்தின் மீது கைவைத்து ஆகம விதிகளின் படி மந்திரங்கள் சொல்லி ஹஸ்த முத்திரை காட்டி தெய்வத்திற்கு ஸ்ரீ பலியை சமர்ப்பிப்பார். அதனைக் கல்வெட்டுக்கள் ஸ்ரீ பலிபூஜை என்று குறிப்பிடுகின்றன.
















தியாகராஜர் திருக்கோயில், புல்வயல், புதுக்கோட்டை

 புல்வயல் 

தியாகராஜர் திருக்கோயில்

மூன்றாம் குலோத்துங்கசோழன்

புதுக்கோட்டை













கத்தாங்கண்ணி, திருப்பூர் மாவட்டம்

 கற்றான் காணி (கத்தாங்கண்ணி ) மிகவும் பழமையான ஊராகும். இந்த ஊர் வீரசோழ சதுர்வேதி மங்களம் என அழைக்கப்பட்டது .வேதம் கற்ற பிராமணர்களுக்கு தானமாக வழங்கபட்டதால் இது கற்றான் காணி என அழைக்கப்பட்டது .


சங்க இலக்கியத்தில் இவ்வூரைப் பற்றி குறிப்பு காணப்படுகிறது . இவ்வூரில் நின்மானீஸ்வரர் கோயில் ,சொக்க பெருமாள் கோயில் மிகவும் பழமையான கோயிலாகும் . இக்கோயில்களில் கொங்கு சோழர் , கொங்கு பாண்டியன் காலத்து கல்வெட்டுகள் நிறைந்து காணப்படுகிறது .


இங்கு கொங்கு சோழர் வீரரசேந்திரன் (கி.பி .1221) கொங்கு சோழர் குலோத்துங்கன் ( கி.பி 1158 ) கொங்கு சோழர் வீர நாராயணன் ( கி.பி. 1129 ) போசளர் வீரவல்லாளதேவர் (கி. பி .1315) உம்மத்தூர் நஞ்சணராயர் ( கி.பி. 1518 ) ஆகியோர் கல்வெட்டு உள்ளது.


நிர்மாணிசுவரருக்கு வீரரசேந்திரன் நேரடியாக அளித்த கொடை பற்றி செய்தி உள்ளது . குறும்பு நாட்டுத் தென்பகுதிக்கு வீரசோழ வளநாடு என்று பெயர். கிரகணம் ஏற்பட்டபோது அதனால் வரும் தீமைகளையத் தவிர்க்க வரி எதுவும் இல்லாத ஆறு மாநிலத்தை வீரசோழ சதுர்வேதி மங்களம் ஆகிய கத்தாங்கண்ணி நின்மணீசுவரர்க்கு கொடையாக அளிக்கப்பட்ட கல்வெட்டு உள்ளது.


கொங்கு சோழர் குலோத்துங்கன் கத்தாங்கண்ணி நின்மணீசுவரர் கோயிலில் அவிநாசி வீரப் பெருமாள் வீரபாணம் பெருமாள் ஆகியோர் திருமுகத்தின் படி அளித்த 15  கழுஞ்சு பொன்னால் சிவபிராமனர் இருவர் நாள் தோறும் அம்மனுக்கு நாழி அரிசியால் திரு அமுது படைக்கவும் ஐந்து விளக்குகள் எரிக்கவும் ஒப்புக்கொண்டதை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.

இக்கோயில் ஒரு காலத்தில் வெகு சீரும் சிறப்புமாக விளங்கி இருக்கிறது.



















கத்தாங்கண்ணி, திருப்பூர் மாவட்டம்


#konguhistory 3

Tuesday, October 15, 2019

சமணர் படுக்கைகள், செந்நாக்காடு/ செந்நாக்கல்புதூர், நாமக்கல் மாவட்டம்

நாமக்கல் மாவட்டம் , செந்நாக்கல்பாளையத்திற்கு அருகே  செந்நாக்குன்று அல்லது செந்நாக்கரடு என்னும் ஊர் .இவ்வூர் தற்போது செந்நாக்கல்புதூர் என்று அழைக்கப்படுகிறது .இங்கு உள்ள சிறு குன்றில்  சிறிய குகை உள்ளது . அந்த குகைத்தளத்தில் நான்கு கல் படுக்கைகள் உள்ளன . முதல் படுக்கையில் தலையணை போல உள்ள பகுதியில் அழகிய மலர் பொறிக்கப்பட்டுள்ளது .இரண்டாவது படுக்கையில்  அதே தலையணை போன்ற பகுதியில் சுவஸ்திக் சின்னமும், நான்காவது படுக்கையில் ஸ்ரீவத்ஸம் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளது . இது சுமார் இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம்.


Monday, October 14, 2019

ஸ்ரீ விஜயநாராயண கோயில், குண்டல்பேட், கர்நாடகா, karnataka

கர்நாடக மாநிலம், குண்டல்பேட்டில் உள்ள விஜயநாராயண கோயில்12ம் நூற்றாண்டு ஹொய்சால மன்னன் விஷ்ணு வர்தனால் கட்டப்பட்டது . சோழர்களின் மீதான தலகாடு வெற்றியை தொடர்ந்து ஹொய்சாலர்கள் கர்நாடகாவில் மேலும் நான்கு கோயில்கள் கட்டினர் . தலகாட்டில் உள்ள ஸ்ரீ கீர்த்தி நாராயண பெருமாள் கோயில் , தொண்டனூர் என்னும் இடத்தில் உள்ள ஸ்ரீ யோக நரசிங்க ஸ்வாமி ஆகின ஆகும் .