Friday, May 6, 2022
மகேந்திரவாடி குடைவரை , காஞ்சிபுரம்
பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணுவின் மகனான முதலாம் மகேந்திரவர்மன் வீரத்தில் மட்டுமல்லாமல் பல கலைகளிலும் தேர்ச்சி பெற்று பல்லவ குலத்திற்கு பெருமை சேர்த்தவர் . இசை , ஓவியம் , நாடகம் இயற்றுதல் என பலவற்றில் சிறந்து விளங்கியவர் என்பதால் இவருக்கு பல விருதுப் பெயர்கள் உண்டு . சித்திரகாரப்புலி (ஓவியம்) , சங்கிரணகாதி (இசை) குணபரன் ( குணம் ) என பெயருக்கு ஏற்றார் போல் சிறந்து விளங்கியவர் செங்கல் , மரம் , உலோகம் கொண்டு கட்டப்படும் கோயில்கள் காலத்தால் நிலைத்து நிற்காததால் நிலையான கோயில்கள் அமைக்க எண்ணி பாறைகளை குடைந்து நிலையான கோயில் அமைத்தவர் . இவர் காலத்தில்தான் தமிழகத்தில் பெரும்பாலான குடைவரைகள் அமைக்கப்பட்டன . மண்டகப்பட்டு , திருச்சி , பல்லாவரம் , வல்லம் , மாமண்டூர் , தளவானூர் , சீயமங்கலம் , மகேந்திரவாடி என பல இடங்களில் குடைவரைகள் அமைத்தவர் . இவற்றில் இவரால் விஷ்ணுவிற்காக எடுக்கப்பட்ட ஒரே குடைவரையை பற்றி இங்கு காண்போம் .
வாருங்கள் மகேந்திரவாடி குடைவரைக்கு , உங்கள் கண்களை மகிழ்விக்கும் இக்கோயில் நல்லவர்களால் மிகவும் போற்றப்படும் என்ற கல்வெட்டு வரிகள் மூலம் நம்மை வரவேற்கிறார் , மகேந்திரவர்மன் .
காஞ்சியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் மகேந்திரவாடி என்னும் ஊர் உள்ளது . மகேந்திரவர்மன் , மகேந்திரபுரம் என்னும் ஊரை உருவாக்கி அங்கிருந்த பாறையில் விஷ்ணுவுக்கு "மகேந்திர விஷ்ணு கிரஹம் " என்னும் கோயில் அமைத்ததுடன் இதன் அருகிலேயே ஒரு ஏரியை உருவாக்கி அதற்கு " மகேந்திர தடாகம் " என்று பெயரிட்டு அழைத்தார்.
இவர் காலத்தில் இவ்வூர் மிக முக்கிய நகரமாக இருந்து இருக்க வேண்டும் . பொதுவாக குடைவரைகள் எல்லாம் சிறு மலைத்தொடரில் உருவாக்கப்பட்டு இருக்கும் , ஆனால் மகேந்திரவாடி குடைவரை திறந்த வெளியில் உள்ள சிறு குன்றின் பாறையில் குடையப்பட்டுள்ள து .
"மகேந்திர விஷ்ணு கிரகம் " என்று அழைக்கப்படும் இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது . கருவறை , அர்த்த மண்டபம் , முன் மண்டபம் என கோயில் அமைப்புடன் அமைந்திருப்பது இதன் சிறப்பாகும் . கருவறையில் இருக்கும் நரசிம்மர் பிற்காலச் சேர்க்கையாகும் , பல்லவர் காலத்தில் கருவறையில் திருமால் சித்திரமாக வரையப்பட்டோ அல்லது சுதைச் சிற்பமாகவோ இருந்திருக்கலாம் என்பது அறிஞர்கள் கருத்து . கருவறையின் முன்னே உள்ள அர்த்த மண்டபத்தில் இருபுறமும் துவாரபாலகர்கள் ஒரே அமைப்பில் ஆடை அணிகலன்களுடன் , கரண்டமகுடம் , முப்புரிநூல், மற்றும் பனையோலைக் குண்டலங்கள் அணிந்து காணப்படுகிறார்கள் . தூண்களைப் பொறுத்தவரை நடுவில் எண்கோணத்திலும் , மேலும் கீழும் சதுர வடிவமாகவும் காணப்படுகிறது . கல்வெட்டுக்கு மேலே காணப்படும் வடிவம் பத்ம பதக்கம் எனப்படும் . குடைவரையின் மேல் பகுதியில் மழை நீர் உள்ளே நுழையாதவாறு வெட்டப்பட்டுள்ளது .
கல்வெட்டுச் செய்தி :
குணபரன் என்பவரால் மகேந்திரபுரத்தில் , மகேந்திர தடாகக் கரையில் மகேந்திர விஷ்ணு கிரஹம் எனும் கோயிலை ,முராரி என்னும் இறைவனுக்காக மக்கள் கண்டு போற்றுவதற்காக குடைவித்தான் .
மனித கண்களை மகிழ்விக்கும் அழகிய இக்கோயில் நல்லவர்களால் போற்றப்படும் என்று வரும் வரிகளை உணர நாம் நேரில் சென்று காணவேண்டும் .
மகேந்திர தடாகம் :
கல்வெட்டில் குறிப்பிடப்பட்ட தடாகம் குடைவரைக்கு அருகே உள்ளது . தடாகம் என்றால் சமஸ்கிருதத்தில் குளம் . மகேந்திரவர்மனின் பெரும்பாலான குடைவரைகள் ஏரிக்கரையை ஓட்டியே அமைந்திருப்பது சிறப்பாகும் . மாமண்டூரில் இருக்கும் "சித்திரமேக தடாகம் " போலவே இங்கும் மகேந்திர தடாகம் இக்குடைவரைக்கு அருகில் அமைந்துள்ளது . சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான இந்த ஏரி சுற்றி இருக்கும் ஏழு கிராமங்களுக்கும் தற்போதும் பயனளிக்கிறது .
பல்லவர்களின் கலைப்பணிக்கு மற்றுமோரு எடுத்துக்காட்டாக இக்குடைவரை விளங்குகிறது .
Friday, April 29, 2022
மதங்கீஸ்வரர் கோயில் , காஞ்சிபுரம்
பல்லவ தேசத்தின் தலைநகரான காஞ்சி , பாரத தேசத்தின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாகும் . கலை , கல்வி , சமயம் என பலவற்றில் சிறந்து விளங்கிய இவ்வூர் , சமண காஞ்சி , பௌத்த காஞ்சி , சிவகாஞ்சி , விஷ்ணு காஞ்சி என பிரிவுகளைக் கொண்ட நகரமாக திகழ்ந்தது . தற்போதும் பல பழமையான கோயில்களை கொண்ட நகரமாக திகழ்கிறது .
காஞ்சி பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் அமைந்த மதங்கீஸ்வரர் என்னும் 1400 வருட பழமையான கோயிலைப் பற்றி காண்போம் . நகரின் நான்கு பிரிவுகளில் ஒன்றான சிவகாஞ்சியில் இக்கோயில் அமைந்துள்ளது . மணற்கற்களாலும் , கருங்கற்களாலும் கட்டப்பட்ட இக்கோயில் , மேற்குப் பார்த்து அமைந்திருப்பது இதன் சிறப்பாகும் . மதங்கி முனிவர் இங்கு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து , வழிபட்டு ஐம்புலன்களை அடக்கி ஆளும் ஆற்றலை பெற்றார் என்பது தல வரலாறு . காஞ்சிபுராணம் குறிப்பிடும் 108 சிவாலயங்களில் இவ்வாலயமும் ஒன்று . இராஜ சிம்ம பல்லவன் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் முடிக்கப்பட்டுள்ளது .
இக்கோயிலின் கருவறையில் 16 பட்டைகளுடன் கூடிய லிங்கமும் அதன் பின்னே உள்ள சுவற்றில் சோமஸ்கந்தர் உருவமும் , லிங்கத்தின் முன்னே நந்தியும் காணப்படுகிறது . முகமண்டபத்தை நான்கு சிங்க தூண்கள் தாங்கி நிற்கின்றன . கருவறையின் இருபுறங்களிலும் துவாரபாலகர்கள் வீற்றிருக்கிறார்கள் . வலதுபுறம் உள்ள துவார பாலகர் மழுவுடையார் ஆவார் . இவர் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார் . இடதுகரம் கீழ்நோக்கிவாறு சூலத்தின் மேல் உள்ளதாகவும் அதே சமயம் அவரது கீழ் வலது கரம் இடுப்பில் உள்ளதாகவும் காட்டப்பட்டுள்ளது. இவரது மேல் வலது , மேல் இடது கரங்கள் மேலே நோக்கியவாறு உள்ளது . சூலத்தில் பாம்பு உறைந்திருப்பது போலவும் காட்டப்பட்டுள்ளது . பெரிய கண்கள் , பறக்கும் கூந்தல் மற்றும் கோர முகத்துடன் மூர்க்கத்தனமாக காட்சிதருகிறார் .
இராவண அனுக்கிரக மூர்த்தி :
அர்த்தமண்டபத்தின் தெற்கு நோக்கிய சுவரில் இராவண அனுக்கிரக மூர்த்தி சிற்பம் உள்ளது . பத்து தலைகளுடன் இருபது கரங்களுடனும் இராவணன் கைலாச மலையை தூக்கி கொண்டிருப்பதை போலவும் , மலையின் மேல் சிவன் உமாதேவியுடன் அமர்ந்திருக்கும் நிலையிலும் காணப்படுகிறது . பறந்துபோன சிவகணங்கள் இராவணனை நோக்கி வருவது போல அமைந்துள்ளது .
கஜசம்ஹாரமூர்த்தி :
அர்த்தமண்டபத்தின் தெற்கு நோக்கிய சுவரில் பலகையில் கஜசம்ஹாரமூர்த்தி . சிவன் ஆறு கரங்களுடன் , உரிக்கப்பட்ட யானை தோலை பிடித்தவாறு மிகவும் உக்கிரமாக காட்சியளிக்கிறார். இதனைப் உமாதேவி மிரட்சியுடன் காண்பதாக காட்டப்பட்டுள்ளது .
ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி :
அர்த்தமண்டபத்தின் வடக்கு நோக்கிய சுவரில் ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி சிற்பம் உள்ளது . நடனமாடும் சிவன் எட்டு கரங்களுடன் வலது காலை மேலே உயர்த்தி இருப்பார் . அவருடன் இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் உருவமும் காணப்படுகின்றன . அவர்களில் ஒருவர் புல்லாங்குழல் வாசிக்கிறார் மற்றொருவர் நடனமாடுகிறார் .
கங்காதர மூர்த்தி :
மற்றொரு பலகையில் கங்காதர மூர்த்தி நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார் . தனது கீழ் இடது கையால் உமாவை தழுவுகிறார் , அதேசமயம் அவரது மேல் வலது கை அருகே கங்கை காட்டப்பட்டுள்ளது . சிவனின் மேல் வலது புறத்தில் நாய் காணப்படுகிறது . கங்காதரர் சிறப்பத்தில் நாய் உருவம் காட்டப்பட்டுள்ளது தனி சிறப்பாகும் .
Wednesday, February 16, 2022
மாபெரும் சபைதனில் : உதயச்சந்திரன்
Thursday, February 10, 2022
வரலாற்றில் அரிக்கமேடு : புலவர் ந . வேங்கடேசன்
புதுச்சேரிக்கு அருகே வங்கக்கடலின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள பழமையான மறைந்து போன நகரம் அரிக்கமேடு . அரியாங்குப்பம் என்ற இடத்திற்கு அருகே உள்ள மேடு தான் அரிக்கமேடு .
1937 ஆம் ஆண்டு அரிக்கமேட்டைச் சேர்ந்த சிறுவர்கள் மேற்புறத்தில் கிடைத்த பொருட்களை பிரஞ்சுப் பேராசிரியர் மூவோ துப்ராய் அவர்களிடம் கொடுத்தனர் . அவர் மேலும் இவ்விடத்தை ஆராய்ந்ததில் கிடைத்த கல்லொன்றில் ரோமானியப் பேரரசன் அகஸ்டஸின் தலை உருவம் பொறிக்கப்பட்டிருந்தது . பின்னர் மார்ட்டின் லிவர் என்பவர் இவ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டார் .
பின்னர் தொல்லியல் துறை அகழாய்வு செய்தபோது இரண்டு கைப்பிடி கூர்முனை உடைய அம்போரா எனப்படும் மது ஜாடிகள் , ரோம் விளக்குகள் , கண்ணாடிப் பாத்திரங்கள் என பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது . இந்நகரம் மாபெரும் வணிகத் தளமாக விளங்கி இருக்கும் என்பதை நாம் முழுமையாக புரிந்துகொள்ள முடிகிறது.
பழங்காலத்தில் இப்பகுதி உலக சந்தையை பெற்றுத்தந்த பெருநகரமாக இருந்துள்ளது . முக்கிய தொழிலாக மஸ்லின் துணிகளுக்கு சாயமிடும் தொழில் இருந்திருக்கிறது . மஸ்லின் துணியை சாயம் தயாரிக்கவும் சாயமிடவும் உதவும் குளம் கண்டுபிடிக்கப்பட்டது . கிமு 23 முதல் கிபி 14 வரை பழக்கத்தில் இருந்த ரோம பேரரசின் நாணயங்கள் இங்கே கிடைக்கின்றன .
யவனர்கள் உடனான இவ்விடத்தின் தொடர்பு பற்றி மிக விளக்கமாக விவரிக்கிறது இந்நூல் . அரிக்கமேடு எவ்வாறு வணிகத்தில் சிறப்புற்று இருந்தது என்பதையும் , இங்கு ஆய்வு செய்தவர்களை பற்றியும் , அகழாய்வு செய்து எடுத்த பொருட்கள் பற்றியும் மேலும் இங்கே அகழாய்வு செய்வத்தின் அவசியத்தைப் பற்றியும் கூறுகிறது இந்நூல் . பழங்கால நகரத்தை பற்றியும் , அகழாய்வு இடங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள விரும்புவர்கள் இந்நூலை அவசியம் படிக்க வேண்டும் நன்றி
ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம் : ஆசிரியர் முகில்
1889 ம் ஆண்டு ஏப்ரல் 20 , மாலை 6:30 ஆஸ்திரிய நாட்டில் உள்ள Gasthof Zum Pommer என்ற சிற்றூரில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் தான் , நமது நாயகன் ஹிட்லர் . பிறந்த போது இன்னும் இரண்டு மாதங்களே குழந்தை உயிருடன் இருக்கும் என்று கணித்த மருத்துவச்சியின் வார்த்தையை பொய்யாக்கிய அக்குழந்தை , வளர்ந்ததும் உலகத்தையே மிரட்டியது . படிப்பும் வராமல் , நோஞ்சான் உடம்புடன் , ஓவியராக வேண்டும் என்ற லட்சியத்தையும் அடைய முடியாமல் தவித்தவர் , எவ்வாறு உலகமே அஞ்சும் சர்வதிகாரியாக மாறிய வரலாறு இப்புத்தகம் . ஹிட்லர் என்றாலே கொடுங்கோல் மனிதன் என்று நம் மனதில் தோன்றும் எண்ணம் . இந்த எண்ணம் சரியா தவறா என்று நாம் அறிந்து கொள்ள இந்த புத்தகம் உதவும் .
தந்தையின் அதீத கண்டிப்புடன் , தாயின் பேரன்புடனும் தொடங்கியது ஹிட்லரின் இளமைப் பருவம் . பருவ வயது வந்தவுடன் காதல் வயப்படுதல் , கவிதை எழுதுதல் , ஓவியம் வரைதல் , புத்தகம் படித்தல் என்று சாமானிய மக்களின் வாழ்க்கையே வாழ்ந்தார் . இளைஞர்ரானதும் வேலை கிடைக்காமல் , நிரந்தர முகவரி இல்லாமலும் தாயையும் இழந்து தனிமையில் தவித்த ஹிட்லருக்கு , புத்தகம் படிப்பது ஓவியம் வரைவது என்பது மட்டுமே பொழுதுபோக்காக இருந்தது . பிறப்பால் ஜெர்மரான ஹிட்லர் , முதலாம் உலகப்போரில் ஜெர்மனி அடைந்த தோல்வியால் மனம் துவண்டார் . அதற்கு காரணமான நாடுகளையும் யூதர்களை பழிவாங்க துடித்தார் . ஜெர்மனி மீது கொண்ட நாட்டுப்பற்றால் ஜெர்மனி ஜெர்மனியருக்கே என்ற எண்ணத்தை மக்களிடம் விதைக்க பேச்சாளராக ஆரம்பித்த அரசியல் வாழ்க்கையில் படிப்படியாக வளர்ந்து அதிபர் ஆனார் .
அதிபரானதும் ஹிட்லரின் மற்றொரு முகம் தெரிய ஆரம்பித்தது . " தானே அதிபர் , தானே சர்வாதிகாரி , தானே முப்படைத் தளபதி , தானே கடவுள் என்று அதிரடியாக செயல்பட்ட வரை கண்டு உலகமே நடுங்கியது . அதிபராகி அவர் நடத்திய தேர்தல் எல்லாம் வேற லெவல் . யூதர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்ற எண்ணத்தை ஜெர்மனி மக்களின் மனதில் ஆழமாக விதைக்க உக்கிரமாக செயல்பட்டார் . அரசு கொடுக்கும் செய்திகளை மட்டுமே பத்திரிகைகள் வெளியிட வேண்டும் என்று , பத்திரிகையின் சுதந்தரத்தை முழுவதுமாக தடை செய்தார் . குறைந்த விலையில் ரேடியோ வழங்கி அதில் தம் புகழ் பாட வைத்து மக்கள் சிந்தனை முழுவதும் நிறைந்தார் .
உலக நாடுகளிடம் நல்லவன் என்ற முகமூடி அணிந்து ஒலிம்பிக் போட்டியை நடத்தி உலக மக்களின் நன்மதிப்பைப் பெற்றார் . உலகில் சிறந்த அரசியல் தலைவர்களில் ஹிட்லரும் ஒருவர் என்று கொண்டாட வைத்தார் .
யூதர்களை ஜெர்மனி விட்டே துரத்த நினைத்தவர் , காலம் செல்ல செல்ல உலகை விட்டே அனுப்ப முடிவு எடுத்தார் . மண்ணாசையும் பழிவாங்கும் எண்ணமும் இரண்டாம் உலகப் போருக்கு வழிவகுத்தது . ஹிட்லருக்கு மட்டுமா மண்ணாசை ? பிரான்சு பிரிட்டன் , சோவியத் யூனியன் , ஜப்பான் , இத்தாலி என பல நாடுகள் உலகை ஆள வேண்டுமென்று ஆசைப்பட்டனர் .
1918 இல் முதல் உலகப் போரில் பிரான்சு ஜெர்மனியை அவமானப்படுத்தியதற்கு பழிதீர்க்க எண்ணினார் ஹிட்லர் . முதல் உலகப் போரில் ஜெர்மனி பிரான்ஸிடம் தோற்று சரணடைந்த போது , பிரான்சு கான்பீன் என்ற இடத்தில் , ஒரு காலி ரயில் பெட்டியில் வைத்து ஜெர்மனியிடம் கையெழுத்து வாங்கியது . இதற்கு பலி தீர்க்க 1940 ஆம் ஆண்டு பிரான்சை வென்ற ஹிட்லர் அதே இடத்தில் முதல் உலகப் போர் சரணாகதி ஒப்பந்தத்தை விட மோசமான ஒப்பந்தத்தில் பிரான்சை கையெழுத்திட வைத்தார். இப்படி பழிதீர்க்கும் படலத்தை அழகே அரங்கேற்றினார் . இப்படி அடுக்கடுகான வெற்றியால் ஹிட்லர் மிக மோசமான முடிவுகளையும் எடுக்க ஆரம்பித்தார் . அதுவே சோவியத்துடனான போர் .
சோவியத் யூனியன் ஸ்டாலின்கிராடு மீதான போரில் ஜெர்மனிக்கு மிகுந்த இழப்புகள் ஏற்பட்டன . உணவு பற்றாக்குறை , அதீத குளிர் போன்ற பல காரணங்களால் ஜெர்மனி வீரர்கள் அவதிப்பட்டனர் . தளபதிகள் படையை திரும்ப அழைக்க அறிவுறுத்தினர் . அவர்களின் ஆலோசனையை நிராகரித்ததுடன் வீரர்களின் கோரிக்கையையும் கண்டுகொள்ளாமல் அவர்களின் நிலை கண்டும் மனம் இரங்காத ஹிட்லர் வெற்றியை மட்டுமே எதிர்பார்த்தார் . குண்டடிபட்டு இறந்தவர்களை விட குளிர் , பசி நோயால் இறந்தவர்கள் அதிகம் . அதனால் சோவியத் படையினர் தங்களை தயார்படுத்திக் கொண்டு வேகமாக முன்னேறினர் . ஜெர்மனியின் கிழக்கே சோவியத் படையினரும் மேற்கே நேசப் படைகளும் கைப்பற்றியது . பிரான்ஸ்யை ஹிட்லரின் பிடியில் இருந்து விடுவிடுத்தும் அடுத்த இலக்கு இலக்கு ஜெர்மனி தான் என்ற நிலையே இருந்தது , அதிலும் முக்கியமாக ஹிட்லரின் உன்னத உயிருக்கு தேதி குறிக்கப்பட்டது . முதலாம் உலகபோரில் ஜெர்மனி சரணடைந்ததால் ஏற்பட்ட அவமானத்தை மீண்டும் ஜெர்மனிக்கு ஏற்படுத்த ஹிட்லர் அனுமதிக்கவில்லை .
1945 , ஏப்ரல் 20 ஹிட்லரின் 56வது பிறந்தநாள் , தலைவர் உயிருக்கு ஆபத்து அதனால் முக்கியமானவர்கள் அவரை தலைமறைவு ஆக சொல்லி வேண்டினர் . "இறுதி வரை பெர்லினில் இருந்தே போராடுவேன்" என்று அவர்கள் கோரிக்கையை மறுத்து விட்டார் . என் உயிரை எடுக்கும் உரிமை எனக்கு மட்டுமே உண்டு என்று உறுதியாக கூறிய ஹிட்லர் , எதிரிகளின் கையில் தனது உடலின் சாம்பல் கூட சிக்க கூடாது என்று தனது மரணத்தை திட்டமிட்டார் . தன்னுடன் மரணத்திலும் சேர்த்து வர எண்ணிய ஈவாவை ஏப்ரல் 28 சட்டப்படி திருமணம் செய்து கொண்டார் . இறுதியாய் எழுதிய தன்னுடைய மரண சாசனத்தில் ஜெர்மனி மக்களுக்கும் வீரர்களுக்கும் நன்றி சொன்னதுடன் தன் சொத்தை நாட்டிற்க்கே அளிக்குமாறு எழுதியுள்ளார் . தன் இறுதி நொடியில் கூட யூதர்களிடம் அவர் கொண்ட வெறுப்பு மாறவே இல்லை . யூதர்களிடம் கருணை காட்ட வேண்டாம் என்றும் எச்சரிக்கையாய் இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார் . 1945 ஏப்ரல் 30 தனது மரணத்தை தானே ஏற்படுத்திக்கொண்டார் . யூதர்கள் எவ்வாறு எல்லாம் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள் என்பதைப் பற்றி தனியே 23ம் அத்தியாயத்தில் ஆசிரியர் கூறியுள்ளார் . அதை படிக்க தனி மனஆற்றல் வேண்டும் . கொடூர படுகொலைகளும் ,மனிதத் தன்மையற்ற செயல்களும் நம்மை மிரள வைக்கிறது . Concentration camp என்ற சித்திரவதைக் கூடங்களில் யூதர்கள் மட்டுமின்றி ஹிட்லரை எதிர்ப்பவர்களும் இடம்பிடித்தனர் . இவர்களைக் கொண்டு உயிரை பணயம் வைக்கும் அபாயகரமான வேலைகள் செய்ய வைப்பது , விஷ வாயு கூடங்களில் அடைப்பது , ஆய்வுக்கூடத்தில் பரிசோதனைக்கு எலிக்கு பதிலாக இவர்களை பயன்படுத்துவது , நிற்க வைத்து சுட்டு தள்ளுவது என பலவிதமான கொடூரங்கள் நடத்தப்பட்டன . இதை செய்த நாஜிகள் மன நலம் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு . சுமார் 50 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் .
மனித கொலைக்காட்சிகளை விரும்பி பார்க்கும் ஹிட்லருக்கு விலங்குகளை வேட்டையாடுவது , வதைப்பது என்பது ஆகாத செயல் . நாய்கள் என்றால் மிகவும் பிடிக்கும் . அதேபோல் சாப்பிடும் விஷயத்தில் அவர் சுத்த சைவம் . சாக்கலேட் , ஐஸ்கிரீம் என்றால் கொள்ளைப்பிரியம் . இப்படி பல வினோத குணங்களை கொண்டவராக இருந்துள்ளார் .
அவர் ஆட்சிக்காலத்தில் ஜெர்மனியில் விபசாரம் நடக்காமல் பார்த்துக்கொண்டார் . ஜெர்மனி பெண்கள் மத்தியில் இவர் ஹீரோவாக வலம் வந்தார் . அதனாலேயே இவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார் என்றும் கூறப்படுகிறது . அரசியலில் ஈடுபட்டத்தில் இருந்து இவர் மேல் பல கொலைமுயற்சிகள் நடந்தன . எல்லாவற்றிலும் அதிஷ்ட வசமாக உயிர் தப்பினார் .
இவர் விதைத்த விதையான யூதர்கள் வெறுப்பு இவர் இறப்புக்கு பின்னும் ஜெர்மனியர்கள் மனதில் இருந்து கொண்டே இருந்தது . சர்வதிகாரியாக வலம் வந்த ஹிட்லர் பற்றி முழுமையாக தெரித்து கொள்ள இந்த புத்தகம் உதவும் .
ஆசிரியர் முகில் அவர்களின் எழுத்துக்களில் வரலாற்றை படிப்பது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது . ஒரு மனிதனின் முழு வரலாற்றை கொஞ்சமும் போராடிக்காமல் , கற்பனையை சேர்க்காமல் எழுதி இருப்பது அருமை . இவர் புத்தகத்தை எல்லாம் பள்ளியில் படிக்கும் போதே கிடைத்து இருந்தால் ஒருவேளை நானும் வரலாற்று ஆய்வாளராக வலம் வந்து இருப்பேன் . வரலாற்று பிரியர்கள் அனைவருக்கும் இவரின் வரலாற்று நூல்களை படிக்க வேண்டும் என்று கேட்டிக்கொள்கிறேன் .
Sunday, September 19, 2021
Sri Arulmigu Sivalapuri Amman Temple / அருள்தரும் ஸ்ரீ சிவளாபுரி அம்மன் திருக்கோவில், நடுவச்சேரி and Hero stones, Naduvachery / Naduvacheri, Tiruppur District, Tamil Nadu.
The visit to this Sri Sivalapuri Amman Temple at Naduvachery / Naduvacheri was a part of Heritage visit to the temples, heritage sites and Hero stones from Vijayamangalam to Avinashi, on 07th August 2021. This place was called as Sevalaipoondi in olden days
The Main Deity : Sri Sevalapuri Amman
Some of the salient features of this temple are… The Temple is facing north with an entrance arch. Stucco image of Sevalapuri Amman is on the front and back of the arch. A Swing, a Deepa Sthambam with Mandapam ( one of the pillar has the image of the donor ) and Kundam are after the entrance arch. A 2 tier Rajagopuram is at the entrance of temple with Sri Sevalapuri Amman’s stucco image on the top. Amman in the sanctum is with 8 Hands. ( May be Bathrakali – please refer the details given below ). In Koshtam, Manonmani, Goumari, Uma Maheswari, Durga and Vishnu Durgai.
Simha Vahana, Dwajasthambam, Balipeedam, Trishul are in the Mukha mandapam. A Big size Male and female ( Village style ) Dwarapalaka and Palaki are at the entrance of the Ardha mandapam
In prakaram the Sthala Vruksham Kila maram, with two memorial / Hero stones, Vinayagar and many Hero and sati Stones are under tree near Vinayagar shrine.
ARCHITECTUREThe Temple consists of sanctum sanctorum, ardha mandapam and a open Mukha mandapam. The mukha mandapam ceiling has the bas- relief of Avinashi Sri Avinashilingeswarar temple’s sthala purana – a Child comes out of Crocodile’s mouth, and symbolic representation of Solar and Lunar eclipse through Snakes, sun and moon.
A two tier Gopura is on the sanctum sanctorum with stucco images of Amman’s various Avadharas, Vinayagar, Murugan, Vimanam Tangis etc,.
The Ardha Mandaapam and Mukha mandapam pillars has interesting bas- reliefs. Based on the style, these may belongs to Vijayanagara Nayaks period. One of the relief is little interesting. A Shiva Linga is shown on one woman’s head. ( A pallipadai temple…? ).
HISTORY AND INSCRIPTIONSSince the original temple’s details are not known, experts are of the opinion that the present temple may belongs to 16th to 17th Century. As per Chozha’s Poorva pattayam, The Chera king along with Mudali sadaiappan and Kathoori Rangappa Chetti, came to this place after worshiping Lord Shiva of Konapuri. When Cheraman Perumal wishes to establish a Village on his name, asked the Hunters / Vedars to clear the forest, the Seval BardraKali, who guards this “Sevalapoondi” forest came and asked Chera King a “Bali”. The Chera King promised to give a bali after constructing a temple for her. As promised Chera King constructed a temple for that Durga and gave mupbali முப்பலி – Goat-Pig- Cock. After clearing the forest this place “Naduvan Chery” ( Latter called as Naduvachery ), with Fort and an eri / Tank was established by Chera King Cheraman Perumal in the name of a Person “Naduvan”, an Irulan who was residing in this forest.
The Sengunthar Mudaliars of Annadhana Chatram Gothram ( Samayam Pattakarar ) and Annanooran Gothram, those belongs to Palani, Dindigul, Naduvacheri, Avinashi, Annur, Coimbatore and Tirupur worships Sevalapuri Amman as their Kula deivam.
In the 1891 CE, Nallasiva Veera Chetty’s son Murugan Chetty, who belongs Kottai Velampalayam excavated the Theertha Well and constructed the Compound Wall.
In 1891 CE ( kaliyuga 4992 ), the entrance mandapam with doors are gifted by the Karukkampalayam Periyayi Palayam Samy Chettiar’s son Nanjappa Chettiar.
Another damaged inscription records the renovation of the temple, painted on the inscriptions and what it records is not known.Many words do not have any meaning.
- ( ஸ்வத்திஸ்ரீ…?) ….வயாத்த 14 செ
- 100 சேவல வீறன் வநல்
- (ரோம்) தட்சணயனத்தில் ப்
- கத்தில் சத்த மயம் தப மோக
- ப னமத்து சிக்க தேவர் சக
- (வய ) ந தனமலி தாசிப ச
- ட்டக்….. லி
- மக்கு…. கன்….. க
As per Kongu Satakam, Sevalapuri was one of the 35 Villages of Arai Nadu. The Kongu Satakam goes like this....
ஆறைநாடுசேவைநகர் அன்னியூர் வெள்ளாதி கோமங்கை
திசைபுகழ வாழ்முடுதுறை
தென்கவசை துடியலூர் நீல நகர் பேரையொடு
தெக்கலூர்கரை மாதையூர்
மேவுபுகழ் அவிநாசி கஞ்சைகா னூர்கரவை
வெண்பதியும் இருகாலூரும்
விரைசேரும் உழலையொடு வடதிசையில் உறுகின்ற
வெள்ளையம் பாடிநகரும்
நாவலர்க்கு இனிதான திருமுருகன் பூண்டியொடு
நலசெவளை பழனைநகரும்
நம்பியூ ரோடெலத் தூருக்கிரம் புலவர்
நகரமுடன் இனிமையான
கோவில்நகர் தொண்டைமான் புத்தூரு முட்டமே
கூடலூர் சிங்கநகரும்
குடக்கோட்டூர் குள்ளந் துறைப்பதியு வாள்வந்தி
கோட்டைக்கரை ஆறு நாடே
LEGENDSA prehistoric peoples arrow sharpening place, at Ganeshapuram a part of Karukkampalayam ( 3 KM away from this temple ) is associated with the sthala purana of this temple. Local people believes that these shallow pits are due to the Sevalapuri Amman kneeled down and played here and these are the markings of Amman’s knees.
Devotees prays Amman for Child boon, to remove marriage obstacles, Graha doshas, etc,.
POOJAS AND CELEBRATIONSApart from regular poojas, special poojas are conducted on Pournami, Amavasya. Aadi Amavasya, Fridays, etc,. In Chithirai month Kundam festival is conducted in a grand manner.
TEMPLE TIMINGSThe temple will be kept opened between 07.00 hrs to 10 hrs and 17.00 hrs to 19.00 hrs.
CONTACT DETAILSSince the temple is under the control of Avinashi Avinashilingeswarar Temple, The officials may be contacted on the land line 04296 – 273113 and 274113 may be contacted for further details.
HOW TO REACHThe temple is on the Avinashi – Naduvachery – Koottapalli Road.The temple is 1 KM from the Village, 7 KM from Sevur, 13 KM from Avinashi, 17 KM from Kunnathur, 20 KM from Avinashi, 50 KM from Coimbatore and 460 KM from Chennai.Nearest Railway station is Tiruppur
LOCATION OF THE TEMPLE : CLICK HERE
Solar and Lunar eclipse & Avinshi Temple Sthala purana
The Shiva Linga above this lady's head.. means What..?.. and right side is a donor
--- OM SHIVAYA NAMA ---
- ( ஸ்வத்திஸ்ரீ…?) ….வயாத்த 14 செ
- 100 சேவல வீறன் வநல்
- (ரோம்) தட்சணயனத்தில் ப்
- கத்தில் சத்த மயம் தப மோக
- ப னமத்து சிக்க தேவர் சக
- (வய ) ந தனமலி தாசிப ச
- ட்டக்….. லி
- மக்கு…. கன்….. க
திசைபுகழ வாழ்முடுதுறை
தென்கவசை துடியலூர் நீல நகர் பேரையொடு
தெக்கலூர்கரை மாதையூர்
வெண்பதியும் இருகாலூரும்
விரைசேரும் உழலையொடு வடதிசையில் உறுகின்ற
வெள்ளையம் பாடிநகரும்
நலசெவளை பழனைநகரும்
நம்பியூ ரோடெலத் தூருக்கிரம் புலவர்
நகரமுடன் இனிமையான
கூடலூர் சிங்கநகரும்
குடக்கோட்டூர் குள்ளந் துறைப்பதியு வாள்வந்தி
கோட்டைக்கரை ஆறு நாடே



.jpg)

.jpg)








.jpg)

.jpg)



.jpg)
.jpg)