சாம்ராஜ் நகரிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஸ்ரீ லக்ஷ்மி வரதராஜ சுவாமி கோயில் . கடம்பர் ,சோழர், ஹொய்சாலர் , விஜயநகர , மைசூர் அரசுகளின் ஆட்சிக்கு உட்பட்ட நகரமாக Terakanambi நகரம் இருந்தது . இந்த ஊரில்தான் மைசூர் அரசரான ஸ்ரீ ரண தீரா காண்ட்ரவா தன் சிறு வயதில் வாழ்ந்தார். இவர் ஆட்சிக் காலத்தில் இப்பேரரசின் எல்லை மதுரை வரை நீண்டிருந்தது. இங்கு 12 கோயில்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. தற்போது 9 கோயில்களே மீதம் உள்ளன. பெருமாள் தனநாயக்காவின் மகனான மாதண்ட நாயகரால் இக்கோயில் கட்டப்பட்டது. பின் விஜயநகர பேரரசால் விரிவு படுத்தப்பட்டது . தெற்கு பகுதியை கிருஷ்ணராஜ வாண்டயர் விரிவுபடுத்தினார். 2000ம் ஆண்டு இக்கோயில் புனரமைக்கப்பட்டது.
Thursday, October 10, 2019
நடுகற்கள், ஸ்ரீ வீரபத்திர சாமி கோயில், கலாலே, கர்நாடகா
ஸ்ரீ வீரபத்திர சாமி கோயில் மைசூரிலிருந்து ஊட்டி செல்லும் வழியில் உள்ள kalale கிராமத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது . இக்கோயிலை சுற்றி நடுகற்கள் உள்ளன . பொதுவாக நடுகற்கள் என்பது இறந்தவர்களின் நினைவாக வைக்கப்படும் கற்கள். பல்வேறு காரணங்களால் வைக்கப்படும் இக்கற்கள் அவர்களின் வீரத்தை பறைசாற்றும். இத்தகைய நடுகற்கள் எல்லாம் இங்கு கோயிலை சுற்றி ஒரே இடத்தில் காணப்படுகிறது. இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குறும்பர் இனத்தவரின் கோயில்களில் இத்தகைய நடுகற்கள் நிறைய காணப்படுகிறது.